ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்..அமைதியான வாக்குப்பதிவு..வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் முடிந்துள்ள நிலையில் வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மாலை 6 மணி நிலவரப்படி 74.69% வாக்குகள் பதிவாகியுள்ளன. இதுவரை 82,021 ஆண்கள், 87,907 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 17 பேர் வாக்களித்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 2ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா மரணமடைந்ததை அடுத்து இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் 18ம் தேதி வெளியானது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 31ம் தேதி தொடங்கி 7ம் தேதி வரை நடைபெற்றது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளராக தென்னரசு, தேமுக வேட்பாளராக ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 77 பேர் களமிறங்கினர். தேர்தல் பிரச்சாரத்தில் அனல் பறந்தது. சனிக்கிழமையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 25 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 16 ஆயிரத்து 497 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 25 வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்கள் தங்களது வாக்கை பதிவு செய்ய உள்ளனர். வாக்குப்பதிவுக்காக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு 6 மணி வரை நடைபெற்றது.

வாக்குப்பதிவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது என்று கூறினார். வாக்காளர்கள் நீண்டவரிசையில் நின்று ஓட்டுப்போட்டனர். பதற்றமான பகுதிகளில் துணை ராணுவத்தினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
வாக்குச்சாவடிகளில் வரிசையில் நிற்பவர்கள் வாக்களிக்க டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டது. ராஜாஜிபுரம் வாக்குச்சாவடியில் மாலை 6 மணிக்குள் வந்த 368 பேர் டோக்கன் பெற்று நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இதனால் இரவு 9.30 மணி வரை வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
வாக்குப்பதிவு முடிந்த வாக்குச்சாவடிகளில், வாக்குப்பதிவு இயந்திரங்கள், அரசியல் கட்சி முகவர்களின் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. இந்த இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மாலை 6 மணி நிலவரப்படி 74.69% வாக்குகள் பதிவாகியுள்ளன. இதுவரை 82,021 ஆண்கள், 87,907 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 17 பேர் வாக்களித்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.
வரவு-செலவு கணக்குகளை வேட்பாளர்கள் ஒரு மாதத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 2ல் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்று தேர்தல் நடத்தும் அதிகாரி சிவக்குமார் கூறினார்.
-
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
வேட்பாளர் லிஸ்டில் பெயர் இல்லை.. அண்ணாமலை இன்று மாலையே முக்கிய மூவ்.. வியந்து போன வானதி.. அசத்தல் -
1988ல் "மக்கள் ஆணையிட்டால்" படத்தில்! விஜயகாந்துக்காக ஸ்டாலின் பாடிய பாடல் இதுதான்! -
கொத்தாக காலியாகும் டெபாசிட்.. தவெக விஜய்க்கு பெரிய சிக்கல்.. 3 பெரிய சர்வேவில் இருக்கும் வார்னிங்! -
திசைமாறிய திருமாவளவன்.. திடீரென தேர்தல் ‘ரிவர்ஸ்’ கியர்.. அப்செட்டான திமுக! இதான் ரியல் காரணம்? -
மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரம், ரூ.8,000 கூப்பன் வாக்குறுதிகள் என்னை கவர்ந்தது.. நடிகை ரோகிணி! -
ராஜ்யசபா எம்பி சீட் தருவதாக கூறி ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி! ஆதாரத்தை காட்டி பிரேமலதா விமர்சனம் -
திமுக கூட்டணியின் 'பவர் மேக்னட்' ஆன பிரேமலதா.. ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. என்ன நடந்தது? -
“எங்கள் கைதியாக இருப்பதே உங்க பையனுக்கு பாதுகாப்பு!” அமெரிக்க விமானியின் தாய்க்கு ஈரான் மெசேஜ் -
அறிவார்ந்த அரசியல்வாதி.. சுந்தர்.சி-யால் பயத்தில் இருக்காரு.. பிடிஆரை சீண்டும் பாஜக நிர்வாகி குஷ்பு! -
Tata: டாடா அறக்கட்டளையிலிருந்து விலகினார் "டிவிஎஸ்" வேணு சீனிவாசன்! பின்னணி என்ன? -
"ஒரு நிமிடம் 2 டிரோன்கள்.." அமெரிக்க உளவு துறை அலுவலகத்தை காலி செய்த ஈரான்! உச்சக்கட்ட பதற்றம்












Click it and Unblock the Notifications