கணவருக்கு கடன் இருந்தாலும்.. மனைவிக்கு ஜீவனாம்சம் தர வேண்டும்.. உச்ச நீதிமன்றம் பரபர உத்தரவு
சென்னை: பெங்களூரைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் அதுல் சுபாஷ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. மனைவி மற்றும் மாமியார் கொடுத்த துன்புறுத்தலால் அதுல் சுபாஷ் தற்கொலை செய்துகொண்டது தொடர்பான விவாதம் நடந்து வரும் நிலையில் கணவன் - மனைவி விவாகரத்து தொடர்பாக முக்கியமான உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மனைவிகள் கேட்கும் ஜீவனாம்சத் தொகையை நிர்ணயிக்க உச்ச நீதிமன்றம் 8 அம்ச பார்முலாவை வகுத்துள்ளது. நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் பிரசன்னா பி வரலே ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச், இந்து தம்பதிகள் சம்பந்தப்பட்ட விவாகரத்து வழக்கில் இறுதி ஜீவனாம்சத் தொகையை தீர்மானிப்பதற்கான வழிகாட்டுதல்களை வகுத்தது.

ஜீவனாம்சம் குறித்து முடிவெடுக்கும் போது கருத்தில் கொள்ள வேண்டிய 8 காரணிகளை உச்ச நீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது:
இரண்டு தரப்பின் பொருளாதார நிலை, சமூக மற்றும் நிதி நிலைமை
மனைவி மற்றும் சார்ந்திருக்கும் குழந்தைகளின் தேவைகள் என்னென்ன.
இரண்டு தரப்பின் தனிப்பட்ட தகுதிகள் மற்றும் அவர்கள் பார்க்கும் வேலை.
விண்ணப்பதாரின் வருமானம் அல்லது சொத்துக்கள்.
திருமண வீட்டில் மனைவி அனுபவிக்கும் வாழ்க்கைத் தரம்.
குடும்பப் பொறுப்புகளுக்காக ஆகும் செலவு
வேலை செய்யாத மனைவிக்கு ஆகும் தினசரி செலவுகள்.
கணவரின் நிதித் திறன், அவரது வருமானம், பராமரிப்புக் கடமைகள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றை அடிப்படையாக் வைத்து ஜீவனாம்சம் குறித்து முடிவெடுக்கலாம் என்று கூறப்படுகிறது.
இன்னொரு உத்தரவு: ஆனால் இன்னொரு உச்ச நீதிமன்ற வழக்கில் நீதிபதிகள் சூர்யா காந்த் - உஜ்ஜவல் அமர்வு ஜீவனாம்சம் குறித்து முக்கிய உத்தரவை போட்டுள்ளது.
கணவரின் சொத்து எவ்வளவு இருந்தாலும் ஜீவனாம்சம் கொடுத்தே தீர வேண்டும். ஒருவருக்கு கடன் இருக்கலாம்.. சொத்து பிரச்சனை இருக்கலாம்.. அவசர நிதி தேவை இருக்கலாம். ஆனால் அதெல்லாம் இருந்தாலும் பிரிந்து வாழும் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு செலுத்த வேண்டிய பராமரிப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கணவன் வாங்கிய கடன் பிரச்னையை விட மனைவியின் பராமரிப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். பராமரிப்பதற்கான உரிமை என்பது வாழ்வாதாரத்திற்கான உரிமையுடன் ஒத்துப்போகிறது. இந்த உரிமையானது நல்ல வாழ்க்கை மற்றும் கண்ணியமான வாழ்க்கையை வழங்கும். அரசியலமைப்புச் சட்டம் 21 இதைத்தான் கூறுகிறது.
கணவனுக்கு கடன் இருந்தாலும், பொருளாதார பிரச்சனைகள் இருந்தாலும்.. ஜீவனாம்சம் வழங்குவதை தடுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
விவாகரத்து தற்கொலை: முன்னதாக பெங்களூரை சேர்ந்த ஐடி ஊழியர் அதுல் சுபாஷின் தற்கொலை நாட்டையே உலுக்கி உள்ளது. அவரின் மரணம் காரணமாக.. சுபாஷின் மனைவி நிகிதா சிங்கானியாவை அசெஞ்சர் ஐடி நிறுவனத்தில் இருந்து தூக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
நிகிதா சிங்கானியா பல லட்சங்களில் வருமானம் ஈட்டுகிறார். அதே சமயம் அவர் தனது கணவர் அதுல் சுபாஷிடம் விவாகரத்தின் போது 3 கோடி ரூபாய் ஜீவனாம்சம் கேட்டுள்ளார். மேலும் 4 லட்சம் ரூபாய் மாதம் பராமரிப்பு கேட்டு கோர்ட் மூலமாக 2 லட்சம் ரூபாய் பராமரிப்பு பெற ஒப்புக்கொண்டுள்ளார்.
இதெல்லாம் போக கணவர் மீதும் அவரின் குடும்பத்தினர் மீதும் பொய்யான வழக்குகளை பதிவு செய்துள்ளார். கணவரை கடந்த சில வருடங்களாக கடுமையாக கொடுமை செய்துள்ளார். இதனால் கணவர் தற்போது தற்கொலை செய்து கொண்ட நிலையில் சுபாஷின் மனைவி நிகிதா சிங்கானியாவை அசெஞ்சர் ஐடி நிறுவனத்தில் இருந்து தூக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அவரை போன்றவர்களுக்கு வேலை கொடுக்க கூடாது. அவர் பல லட்சங்களில் வருமானம் ஈட்டும் நிலையில் .. கணவரிடம் அவ்வளவு பணம் கேட்டு.. கடைசியில் அவரின் மரணத்திற்கே கூட காரணமாக மாறிவிட்ட நிலையில்.. நிகிதாவை பணியில் இருந்து நீக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் இணையத்தில் அசெஞ்சர் தற்போது டிரெண்டாகி வருகிறது.
என்ன நடந்தது?: அதுல் சுபாஷுக்கு கடந்த 2019 இல் திருமணம் நடந்தது. மனைவி, மாமியார், ஆண்களுக்கு எதிரான பாரபட்சமான சட்டங்கள் மற்றும் சிஸ்டம் காரணமாக திருமணம் ஆகி 5 ஆண்டுகளுக்குள் தற்கொலை செய்ய உள்ளதாக கூறியுள்ளார்.
மனைவி 3 கோடி ஜீவனாம்சம் கேட்டார். அதோடு 4 லட்சம் ரூபாய் மாதம் பராமரிப்பு தொகை கேட்டார். மனைவி தன் குழந்தையின் முகத்தைக் கூட பார்க்க விடவில்லை. ஜான்பூர் குடும்பநல நீதிமன்ற நீதிபதி ரீட்டா கௌசிக், வழக்கைத் தீர்ப்பதற்கு 4- 5 லட்சம் லஞ்சம் கோரினார்.
மனைவியின் குடும்பத்திற்கு உதவுவதற்காக தனது மனைவிக்கு பல லட்சங்களைக் கொடுத்துள்ளார், ஆனால் கடைசியில் வரதட்சணைக் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளார். சுபாஷின் மனைவியின் தந்தை திருமணமான உடனேயே நோயால் இறந்தார், ஆனால் தனது கணவர் "வரதட்சணை" கேட்டதால்தான் என் அப்பா அதிர்ச்சியில் இறந்ததாகக் கூறி அந்த பெண் அவரது குடும்பத்தினர் மீது கொலைப் பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications