மகளிர் உரிமை தொகை வாங்கும் பெண்களே.. விஜய் பக்கம்தான்.. திமுகவிற்கு செக்.. மணி சொல்றதை பாருங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேவையின்றி விஜய்க்கு எதிராக உதயநிதியை திமுகவே நிறுத்துகிறது. இது தவறு. திமுகவே தனது தலையில் மண்ணை அள்ளி போட்டுக்கொள்கிறது. திமுகவிற்கு அவர்களே ஆப்பு வைத்துக்கொள்கிறார்கள். தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும் வரும் கூட்டம் காசு கொடுத்து வரும் கூட்டம். ஆனால் விஜய்க்கு வரும் கூட்டம் தானாக வரும் கூட்டம். விஜய் வெற்றிபெற மாட்டார். ஆனால் அவர் அழிப்பவராக இருப்பார், என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.

ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் மணி அளித்த பேட்டியில், விஜயை பார்த்து திமுக அச்சத்தில் உள்ளது. விஜய் செய்யும் மூவ்கள் காரணமாக திமுக அச்சத்தில் உள்ளது. விஜய் பேக்டர் திமுகவிற்கு எதிராக மாறி உள்ளது. விஜய்க்கு மக்களிடம் உள்ள ஆதரவு திமுகவை கதிகலங்க வைத்துள்ளது. திமுகவிற்கு இது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் திமுகவை வீழ்த்துவார் என்று சொல்லவில்லை. திமுகவிற்கு எதிராக வெல்வார் என்று சொல்லவில்லை. திமுக வாக்குகளை அவர் உடைக்க போகிறார்.

இது திமுகவிற்கு தெரியும். அதனால்தான் திமுக அஞ்சுகிறது . விஜய் ரோடு ஷோ நடத்தியதும் உதயநிதி அதை பயன்படுத்திக்கொண்டு ரோடு ஷோ நடத்துகிறார். திடீர் என்று உதயநிதி நடத்துகிறார். திமுக எதிர் தரப்பு வாக்குகளை விஜய் உடைக்கிறார் என்று வாதம் வைக்கப்படுகிறது. அது உண்மைதான். ஆனால் திமுக ஆதரவு வாக்குகளையும் அவர் உடைக்கிறார்.

Even Magalir Urimai Thogai beneficeries will for TVK Vijay instead of DMK says Journalist Mani

தேவையின்றி விஜய்க்கு எதிராக உதயநிதியை திமுகவே நிறுத்துகிறது. இது தவறு. திமுகவே தனது தலையில் மண்ணை அள்ளி போட்டுக்கொள்கிறது. திமுகவிற்கு அவர்களே ஆப்பு வைத்துக்கொள்கிறார்கள். தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும் வரும் கூட்டம் காசு கொடுத்து வரும் கூட்டம். ஆனால் விஜய்க்கு வரும் கூட்டம் தானாக வரும் கூட்டம். விஜய் வெற்றிபெற மாட்டார். ஆனால் அவர் அழிப்பவராக இருப்பார்.

அதாவது யார் வெற்றிபெற வேண்டும் என்பதை முடிவு செய்யும் சக்தியாக இருப்பார். விஜய் திமுக தனிப்பட்ட எதிரியாக பார்க்கிறது. இது விஜய்க்கு சிக்கல் இல்லை. ஆனால் திமுகவிற்குத்தான் சிக்கல். ஏன் மகளிர் உரிமை தொகை வாங்கியவர்களே விஜய்க்கு வாக்களிக்கலாம். மகளிர் உரிமை தொகை மூலம் பலன் பெற்ற பெண்கள் கூட 1000 ரூபாய் தானே தருகிறார்கள் என்று விஜய் பக்கம் செல்வார்கள்.

ஏனென்றால் திமுக அமைச்சர்கள் இந்த ரூ.1000 தருகிறோம் என்று சொல்லிக்காட்டினார்கள். ஓசி என்றெல்லாம் சொல்லிக்காட்டினார்கள். இதை எல்லாம் பார்த்து மக்கள் அப்செட்டில் இருக்கிறார்கள், என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.

மகளிர் உரிமை தொகை விரிவாக்கம்

இப்படிப்பட்ட நிலையில்தான் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மீண்டும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதை பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு முதல்வர் ஸ்டாலின் மூலம் தமிழ்நாடு சட்டசபையில் வெளியிடப்பட்டது. ஜூன் மாதம் முதல் இந்த திட்டம் மீண்டும் விரிவாக்கம் செய்யப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளது. இந்த நிலையில் இந்த திட்டத்திற்கு எப்படி விண்ணப்பம் செய்வது என்று பார்க்கலாம்.

முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகள், கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகள் ஆகியோர்களுக்கு எல்லாம் இந்த திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் ஏற்கனவே பென்ஷன் பெறக்கூடிய பெண்கள், அரசின் வேறு நிதிகளை வங்கியில் பெற கூடிய பெண்களுக்கு பணம் வழங்கப்படவில்லை. இவர்களுக்கு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் போது அதற்கான அறிவிப்புகள் வரலாம் என்று கூறப்படுகிறது .

யார்க்கு எல்லாம் வாய்ப்பு வழங்கப்படலாம்

வேறு சில ஆவணங்கள் சரியாக இல்லாத பெண்களுக்கும் பணம் வழங்கப்படவில்லை, அரசின் வேறு நிதிகளை வங்கியில் பெற கூடிய பெண்களுக்கு இந்த திட்டத்தில் இப்போது என்று இல்லாமல் எதிர்காலத்திலும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்கிறார்கள்,.

மாறாக ஆவணங்கள் சரியில்லாத பெண்கள், இனி திருமணம் ஆகி குடும்ப தலைவி ஆகும் பெண்கள் ரூ.1000 பெறுவதற்கு விண்ணப்பம் செய்யலாம். இப்போது செய்ய முடியாது என்றாலும் அடுத்த சில நாட்களுக்கு பின் திட்டத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள். அப்போது விடுபட்டவர்கள் விண்ணப்பங்களை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மகளிர் உரிமை தொகை விரிவாக்கம் செய்யப்படும். ஆனால் இதற்காக ரேஷன் கார்டு உள்ள எல்லோருக்கும் இந்த திட்டத்தின் கீழ் பணம் தரப்பட்டது. மாறாக விண்ணப்பித்துள்ள அனைவருடைய விண்ணப்பங்களையும் பரிசீலித்து, தகுதியுள்ள அனைவருக்கும் வழங்கப்படும். தகுதி இல்லாதவர்களுக்கு பணம் வழங்கப்பட வாய்ப்பு இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+