மர்மமா இருக்கு.. காங்கிரஸ்ல என்ன நடக்குதுனே புரியலயே: இளங்கோவன் பரபர! வெட்ட வெளிச்சமான கோஷ்டி பூசல்!
சென்னை: காங்கிரஸ் மாநில தலைவர் கேஎஸ் அழகிரி தலைமையில் இன்று கூட்டம் நடைபெற்ற நிலையில், தமிழக காங்கிரஸில் என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் காங்கிரஸ் கட்சியும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. தேர்தலுக்கான செயல் திட்டங்களை வகுக்க மாவட்ட தலைவர்கள் கூட்டத்துக்கு கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்து இருந்தார். அதன்படி இன்று மாவட்ட தலைவர்களுடன் கே.எஸ்.அழகிரி ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

ஈரோடு மாவட்டத்தில் இன்று சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "தமிழக காங்கிரஸ் கட்சியில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. காங்கிரஸ் கூட்டம் நடந்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. பத்திரிக்கையில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன். யாரையும் அழைக்காமல் கூட்டத்தை நடத்தியிருக்கின்றனர். இதற்கான மர்மம் என்ன என்பதே தெரியவில்லை.
கட்சியில் ஒரு கூட்டம் நடக்கிறது என்றால், எங்களை போன்றவர்களை எல்லாம் கூப்பிடுவது வழக்கம். இன்றைக்கு யாரையும் கூப்பிடாமல் ஒரு கூட்டத்தை நடத்தி இருக்கிறார்கள். அதில் என்ன பேசப்பட்டது என்றும் எனக்கு தெரியவில்லை. விசாரித்த பிறகு, அதுகுறித்து கருத்து தெரிவிக்கிறேன். முதலில் எங்களை எல்லாம் முன்னாள் தலைவர்கள் என்று சொன்னார்கள். பிறகு மூத்த தலைவர்கள் என்று சொன்னார்கள். இப்போது முடிந்து போன தலைவர்கள் என்று சொல்கிறார்கள்." எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிப் பூசல்கள் நிலவுவது ஊரறிந்தது. காங்கிரஸில் எத்தனை தலைவர்கள் இருக்கிறார்களோ அத்தனை கோஷ்டிகள் செயல்பட்டு வருகின்றன. அவ்வப்போது, கட்சியின் மாநில அலுவலகத்திலேயே சண்டைகளும் நடக்கும். இந்நிலையில், தேர்தல் நெருங்கும் சூழலில் காங்கிரஸ் முன்னணி தலைவர், வெளிப்படையாக மாநில தலைமையை விமர்சித்திருப்பது, காங்கிரஸ் கட்சியில் நிலவும் கோஷ்டி பூசலை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி











Click it and Unblock the Notifications