தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவர் நியமனம்.. யார் இந்த முன்னாள் டிஜிபி சுனில் குமார்?
சென்னை: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவராக முன்னாள் டிஜிபி சுனில் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ள நிலையில் சுனில் குமார் யார்? பின்னணி என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரியம் என்பது சீருடை பணிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன்படி காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை) மற்றும் நிலைய அதிகாரி (ஒருங்கிணைந்த தேர்வு), காவல் சார்பு ஆய்வாளர் (தொழில் நுட்பம்), காவல் சார்பு ஆய்வாளர் (விரல் ரேகை) தேர்வுகளை நடத்தி வருகிறது.

மேலும் இரண்டாம் நிலைக் காவலர்கள், இரண்டாம் நிலை சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்கள் (பொதுத்தேர்வு) உள்ளிட்ட தேர்வுகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தான் தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி சுனில் குமார் முதல் தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக செயல்பட உள்ளார்.
சைலேந்திர பாபுதான் டிஎன்பிஎஸ்சி தலைவராகணும்! ஸ்டபன்னாக இருந்த ஸ்டாலின்! ஓராண்டில் நடந்தது என்ன?
தற்போது புதிய பொறுப்பில் நியமிக்கப்பட்ட சுனில் குமார் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர். இவர் கடந்த 1988ம் ஆண்டு பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். இவர் தமிழகத்தில் பணியில் சேர்ந்தார். தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இவர் சென்னையில் போக்குவரத்து பிரிவு கூடுதல் ஆணையராக செயல்பட்டார். அப்போது பசுமை வழித்தடம் ஏற்பாடு செய்து உடல் உறுப்புகளை கொண்டு சென்று பாராட்டு பெற்றவர்.
ஓகே சொன்ன ஆளுநர் ரவி! TNPSC புதிய தலைவராக எஸ்.கே. பிரபாகர் நியமனம்! அப்போ சைலேந்திர பாபு?
கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி சுனில் குமார் டிஜிபியாக பணி ஓய்வு பெற்றார். தமிழ்நாடு காவல்தறையின் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வு டிஜிபியாக சுனில் குமார் செயல்பட்டு வந்த நிலையில் கடந்த 2021ம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார். தற்போது 3 ஆண்டுகளுக்கு பிறகு அவர் தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications