சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"கிரீன் சிக்னல்".. சசிகலா விஷயம்தானே.. ஓபிஎஸ் ஒன்னும் தப்பா சொல்லலியே.. புயலை கிளப்பிய செல்லூர் ராஜு

ஓபிஎஸ் பேச்சுக்கு செல்லூர் ராஜு ஆதரவு தெரிவித்து பேசியுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: சசிகலா குறித்து ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் சொன்னதில் தவறு இல்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Recommended Video

    சசிகலா விவகாரத்தில் OPS சொன்னதில் தவறு என்ன இருக்கு?- செல்லூர் ராஜு

    கடந்த சில தினங்களாகவே சசிகலாவின் அரசியல் விஸ்வரூபமெடுத்து வருகிறது.. இதனால் அதிமுக மேலிடம் அதிர்ந்து போயுள்ளது.

    ஆர்யன் கான் வழக்கில் பேரம்.. '8 மணி நேரம்' முக்கிய சாட்சி அளித்த பரபரப்பு வாக்குமூலம் ஆர்யன் கான் வழக்கில் பேரம்.. '8 மணி நேரம்' முக்கிய சாட்சி அளித்த பரபரப்பு வாக்குமூலம்

    கடந்த 20ம் தேதி, எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்தித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது, சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்துவது குறித்தும், தன்னை கட்சியன் பொதுச் செயலாளர் என்று குறிப்பிட்டுவருவது பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது..

     விமர்சனம்

    விமர்சனம்

    சசிகலா என்றாலே டென்ஷன் ஆகிவிடும் எடப்பாடி பழனியாமி, இந்த கேள்வியின்போதும் ஆவேசமடைந்தார்.. "சூரியனைப் பார்த்து ஏதோ குரைத்தது போல என்று காட்டமாக பதில் தந்தார்.. இது பொதுமக்களுக்கு மட்டுமல்லாமல், அதிமுகவில் உள்ள பலருக்குமே எடப்பாடியின் இந்த பதில் அதிர்ச்சியை தந்தது.. காரணம், யாரால் முதல்வராக பதவிக்கு வந்தாரோ, அவரையே இந்த அளவுக்கு மலிவாக பேசுவதை எதிர்பார்க்கவில்லை..

     அதிருப்திகள்

    அதிருப்திகள்

    இன்னும் சொல்லப்போனால் எடப்பாடி இப்படி பேசியதில் இருந்துதான், அதிமுகவுக்குள் பிரச்சனைகள் தலைதூக்க தொடங்கி உள்ளது.. அதிருப்திகள் வெடித்து வருகிறது.. மூத்த தலைவர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படையாகவே எடுத்து வைத்து வருகின்றனர்.. இதற்கு ஆதரவும் எதிர்ப்புமாக கிளம்பி உள்ளது.. அதில் முதன்மையானவர் ஓபிஎஸ்.. இந்த 5 வருட காலம் பெரிதாக எந்த விஷயத்துக்கும் வாய் திறக்காமல் இருந்தவர், முதல்முறையாக கண்டிப்புடன் பேட்டி தந்தார்.

    கண்ணியம்

    கண்ணியம்

    "ஒரு அரசியல் கட்சியில் பொறுப்பில் இருப்பவர்கள் கண்ணியத்தோடு பேச வேண்டும்... கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பது அண்ணா கற்று கொடுத்த கொள்கை... அதுதான் அதிமுகவின் பூர்வாங்கக் கொள்கை" என்றார்.. அதாவது எடப்பாடி பழனிசாமியின் பெயரை சொல்லாமலேயே அவரை விமர்சித்தது வெளிப்படையாகவே தெரிந்தது.. அதுமட்டுமல்ல, அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம், அதை ஏற்றுக்கொள்வது ஏற்றுக் கொள்ளாதது மக்களின் விருப்பம்... அதிமுகவில் சசிகலாவை சேர்த்துக் கொள்வது பற்றி தலைமைக் கழக நிர்வாகிகள் கூடி முடிவெடுப்பார்கள் என்று சொல்லி எடப்பாடிக்கே மேலும் ஷாக் தந்தார்..

    ஜெயக்குமார்

    ஜெயக்குமார்

    ஓபிஎஸ் கருத்து குறித்து கேபி முனுசாமியும், ஜெயக்குமாரும் அடுத்தடுத்து தங்கள் கருத்துக்களை வெளியிட்டனர்.. இருவருமே எடப்பாடி பேட்டியை முழுசா பார்க்கவில்லை என்று சொல்லிவிட்டு, லேசான கண்டிப்புடன் கூடிய வார்த்தைகளை உபயோகித்திருந்தனர்.. "சசிகலா, மற்றும் அவருடன் அவரைச் சார்ந்தவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார். அப்படி வைத்துக்கொண்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தீர்மானம் போடப்பட்டுவிட்டது.. சசிகலா எதிர்த்துத்தான் தர்மயுத்தத்தை ஓபிஎஸ் நடத்தினார்" என்று கூறியிருந்தனர்.

    நிதானம்

    நிதானம்

    மற்றொரு பக்கம் ஓபிஎஸ் சொன்னதற்கு ஆதரவுகள் பெருகி வருகிறது.. "அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் எப்போதும் நிதானமாகத் தான் பேசுவார் சரியாகத்தான் பேசி இருக்கிறார்... சரியான கருத்தை சொல்லி இருக்கிறார்" என்று டிடிவி தினகரன் நேற்றைய தினம் சொல்லி அதேபோல, ஓபிஎஸ் சொன்னதில் எந்த தவறும் இல்லை என்று ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டோரும் தெரிவித்தனர். இப்போது இந்த லிஸ்ட்டில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சேர்ந்துள்ளார்..

    சசிகலா

    சசிகலா

    மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜு, "சசிகலா விவகாரத்தில் அதிமுக கட்சிக்குள் சர்ச்சையே கிடையாது பழுத்த மரத்தில் தான் கல்லடி படும்... சசிகலா குறித்து ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் சொல்லி உள்ளர். அதில் என்ன தவறு இருக்கிறது? ஒரு தவறும் இல்லை.. அனைவரும் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்ற கருத்தைத்தான் ஓபிஎஸ் சொன்னார்... ஓபிஎஸ் சொன்ன கருத்துகளை இப்போது சர்ச்சையாக மாற்ற விரும்பவில்லை. ஓபிஎஸ் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதால் பிற நிர்வாகிகள் எதிர் கருத்து தெரிவித்துள்ளனர்" என்றார்.

    ஆதரவாளர்

    ஆதரவாளர்

    இதுதான் இப்போது பரபரப்பை கூட்டி உள்ளது.. செல்லூர் ராஜுவை பொறுத்தவரை இவர் ஆரம்பத்தில் இருந்தே சசிகலாவின் ஆதரவாளராக கருதப்படுபவர்.. இருவருமே ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள்.. சிறையில் சசிகலா இருக்கும்போதுகூட சின்னம்மா விரைவில் விடுதலையடைய பிரார்த்திக்கிறேன் என்றேன்.. அதேபோல ஒரு வருடங்களுக்கு முன்புவரை செய்தியாளர்களை சந்திக்கும் போதெல்லாம் தனது சசிகலா விசுவாசத்தை வெளிக்காட்டிவிடுவார்..

    தீர்மானம்

    தீர்மானம்

    அதற்கு பிறகும்கூட இதுவரை சசிகலா தொடர்பாக எந்த ஒரு விமர்சனத்தையும் முன்வைத்ததில்லை.. முக்கியமாக, சசிகலாவுக்கு எதிராக மாவட்ட வாரியாக தீர்மானம் நிறைவேற்றியபோதும்கூட செல்லூர் ராஜூ அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றவில்லை.. இப்படிப்பட்ட சூழலில், கட்சிக்குள் ஏற்கனவே புகைச்சல்கள் வந்து கொண்டுள்ள சூழலில் மேலும் லிட்டர் கணக்கில் பெட்ரோலினை ஊற்றுவதுபோல உள்ளது செல்லூர் ராஜூவின் இன்றைய பேட்டி.!

    English summary
    Ex Minister Sellur Raju talks about sasikala and supports OPS speech
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X