கருணாநிதிக்கு புகழாரம்.. ஆச்சரியப்படுத்திய மாஜி மநீம மகேந்திரன்.. திமுகவுக்கு துண்டு போடுகிறாரா!
சென்னை: கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி அவரை புகழ்ந்து மக்கள் நீதி மய்யத்தின் முன்னாள் துணை தலைவர் மகேந்திரன் வெளியிட்டுள்ள ட்வீட்டை பார்த்தால் அவர் திமுகவுக்கு துண்டு போடுகிறாரோ என நினைக்க வைக்கிறது.
Recommended Video
அரசியலில் யாரும் யாருக்கும் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என சொல்வார்கள். இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் சுற்றி ஐஏஎஸ் அதிகாரிகள், மருத்துவர்கள், காவல் துறை அதிகாரிகள் என புடைச்சூழ கமல்ஹாசன் வலம் வந்தார்.
நாடாளுமன்றத் தேர்தலில் இவர்கள் பெற்ற வாக்குகள் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது. இதையடுத்து கமலை முதல்வராக்கியே தீருவோம் என கட்சி நிர்வாகிகள் பாடுபட்டனர்.

பொருளாதாரம்
பல்வேறு நலத்திட்டங்களையும் தமிழக பொருளாதாரத்தை இரட்டிப்பாக்கும் திட்டங்களையும் அவர்கள் தேர்தல் அறிக்கைகளாக வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில் மற்றவர்கள் எல்லாம் சட்டசபைத் தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில் கமல்ஹாசன் வெல்வார் என கடைசி வரை எதிர்பார்க்கப்பட்டு ஏமாற்றமே விஞ்சியது.

சர்வாதிகாரி
இதையடுத்து கட்சியின் முக்கிய தலைவர்களான மகேந்திரன், மவுரியா, பொன்ராஜ், சந்தோஷ் பாபு, சிகே குமரவேல் உள்ளிட்டோர் கட்சியிலிருந்து விலகிவிட்டனர். இதையடுத்து விலகிய நிர்வாகிகள் கமல்ஹாசன் மீது சர்வாதிகாரி என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

கோவை
கோவையில் மிகுந்த செல்வாக்கு மிக்க மகேந்திரனை கொத்தி செல்ல பாஜக, திமுக என போட்டி போட்டுக் கொண்டிருப்பதாக தகவல்கள் கிடைத்தன. இந்த நிலையில் திமுகவில் மகேந்திரனுக்கு டிட்கோ தலைவர் பதவி வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் மகேந்திரன் கருணாநிதி பிறந்தநாள் குறித்து ஒரு ட்வீட்டை போட்டுள்ளார்.
|
பிறந்தநாள் வாழ்த்து
அதில் சுய மரியாதை இயக்கத்தையும், சமூக நீதியையும், திராவிட சித்தாந்தத்தையும் தம் சொல்லால், செயலால், எழுத்தால் உலகறியச் செய்தவர்; திருக்குவளை ஈன்றெடுத்த திராவிட சூரியன்,5 முறை தமிழகத்தை ஆண்ட, ஐயா திரு. கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறப்பு ஓர் சரித்திரம்!
@mkstalin #KalaignarForever #கலைஞர் என குறிப்பிட்டுள்ளார்.

துண்டு போடுகிறாரா மகேந்திரன்
இதை பார்க்கும் போது திமுகவில் தனது தேவையை தெரிந்து கொள்ள லேசாக ஆழம் பார்க்கிறாரோ என்ற சந்தேகம் வலுக்கிறது. சுருக்கமாக சொல்ல போனால் திமுகவில் இணைய கருணாநிதி பிறந்தநாள் வாழ்த்து மூலம் துண்டு போடுகிறாரோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது. என்ன நடக்குமோ , பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
விஜய் டிவியில் திடீரென முடிவுக்கு வரும் சீரியல்.. அதுவும் இதுதான் காரணமா? பீல் பண்ணும் ரசிகர்கள் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்!












Click it and Unblock the Notifications