10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை.. இன்று வெளியிடும் அமைச்சர் ராஜ்மோகன்!
சென்னை: 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை இன்று அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட உள்ளார். மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வு நடக்கவுள்ளது. பாடவாரியான தேர்வு தேதிகள் மற்றும் செய்முறை தேர்வு குறித்த முழுமையான விவரங்கள் குறித்து இன்று அறிவிக்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்பு பயிலும் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆயத்தமாகும் வகையில், அவர்களுக்கான பொத்ய்த்தேர்வு அட்டவணை 5 மாதங்களுக்கு முன்பாகவே வெளியிடப்படும். அந்த அடிப்படையில் பொதுத்தேர்வுக்கான அட்டவணையை இன்று அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட இருக்கிறார்.

12ஆம் வகுப்பை பொறுத்தவரை தமிழ், ஆங்கிலம் தவிர்த்து இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், வணிகவியல், கணக்கு பதிவியல், பொருளியல், வரலாறு, அரசியல் அறிவியல், புவியியல் மற்றும் தொழிற்கல்வி பாடங்கள் என்று பல்வேறு தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
இதனால் தேர்வு அட்டவணை வெளியான பிறகு முழுமையான தேர்வு தேதிகள் மற்றும் செய்முறை தேர்வு விவரங்களை பள்ளிக் கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு அட்டவணையை அறிந்து கொள்ள மாணவர்களும் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications
