ஓட்டலில் இனி இது கிடையாது.. டீக்கடை, ஹோட்டலுக்கு அதிரடி.. நேரா கிளம்பிய ஆபீசர்ஸ்.. சபாஷ் தமிழக அரசு
சென்னை: ஓட்டல்கள், டீக்கடைகளுக்கு முக்கிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.. அத்துடன், இதுகுறித்த நேரடி ஆய்வுகளிலும் உணவுத்துறை அதிகாரிகள் களமிறங்கி உள்ளனர்.
டீக்கடை மற்றும் தள்ளுவண்டி, சிற்றுண்டி கடைகளில் சமைக்கப்படும் பஜ்ஜி, வடை போன்றவைகளை, நியூஸ்பேப்பர்களில் வைத்து கொடுப்பது வழக்கம். இதற்கு பொதுமக்களும் எந்தவித மறுப்பும், எதிர்ப்பு தெரிவிக்காமல், அதனை வாங்கி சாப்பிடுவார்கள்.

எண்ணெய்: சுட, சுட போடப்படும் பஜ்ஜி, போன்டா, வடைகளில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய்யை, அந்த நியூஸ் பேப்பரில் அழுத்தி, எண்ணெய்யை வெளியேற்றிவிட்டு, சாப்பிடுவார்கள்.. டாக்டர்கள், உடல்நலத்திற்கு தீங்கு சாப்பிடாதீர்கள் என்று சொன்னாலும் யாரும் கேட்பது கிடையாது. செய்தித்தாள்களில் வடை, போண்டவை வைத்து தரக்கூடாது என்று தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
ஆனால், இதை பெரும்பாலானோர் கடைப்பிடிப்பதில்லை.. கடைக்காரர்கர் பேப்பரிலேயே வடை, போண்டாவை, சுடச்சுட சுற்றி தருகிறார்கள்.. பொதுமக்களும் பேப்பரோடு வாங்கி அழுத்தி எடுத்து சாப்பிட்டு வருகிறார்கள். காலம் காலமாகவே இந்த பழக்கம் பழகிவிட்டதால், பெரிய நிறுவனங்கள் இதை தவிர்த்தாலும், பல டீக்கடைகளில் இதை தவிர்ப்பதில்லை.
பஜ்ஜி போண்டா: அதனால்தான், உணவுத்துறை மீண்டும் சாட்டையை சுழட்டி உள்ளது.. டீக்கடை மற்றும் உணவகங்களில் அச்சிட்ட பழைய பேப்பர்களில் பஜ்ஜி, போண்டா போன்ற உணவு பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை சார்பில், சென்னை அமைந்தகரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், டீ கடைகளில் வழங்கப்படும் உணவு பதார்த்தங்களை பழைய அச்சிடப்பட்ட செய்தித்தாள்களில் பொட்டலமாக பொதுமக்கள் வாங்கக் கூடாது என்று சுவரில் விழிப்புணர்வு வாசகங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
விழிப்புணர்வு: சென்னை மாவட்ட நியமன அலுவலர் சதீஷ்குமார் உத்தரவின்படி, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ராமராஜ் மற்றும் ஊழியர்கள் உணவகங்கள், டீக்கடைகள், தள்ளுவண்டி கடைகளில் பழைய அச்சிடப்பட்ட செய்தித்தாள்கள் மற்றும் காகிதத்தில் உணவுப் பொருட்கள், வடை, பஜ்ஜி, போண்டா, பக்கோடா போன்றவற்றை பார்சல் செய்து மக்களுக்கு தரக்கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.. இதையும் மீறி செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் வார்னிங் தந்துள்ளனர்.
இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சொல்லும்போது, "அரசு விதித்துள்ள தடை உத்தரவை மீறி, இன்னமும் பழைய அச்சிடப்பட்ட பேப்பரில் உணவுப் பொருட்களை பார்சல் செய்து வருகிறார்கள்.. இதுகுறித்த தகவல்கள் எங்களுக்கு வந்ததால் ஆய்வுகளில் இறங்கி உள்ளோம்.
புற்றுநோய்: நியூஸ்பேப்பரில் வைத்து எண்ணெய் பிழிவதெல்லாம் கொஞ்சம், கொஞ்சமாக விஷத்தை உண்பதற்கு சமம்... உலோக அசுத்தங்களும் தீங்கு விளைவிக்கக்கூடிய "தாலேட்" என்ற வேதிப்பொருள் கனிம எண்ணெய்களும் அச்சிட்ட காகிதத்தில பொட்டலமிடப்படும் உணவில் காணப்படுவதால் அஜீரண கோளாறு ஏற்படுகிறது.. இதைத்தவிர நோய் எதிர்ப்பு சக்தி இழந்து புற்றுநோய் உள்ளிட்ட நோய் தாக்கும் ஆபத்தும் உள்ளது" என்றனர்.












Click it and Unblock the Notifications