Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகை நளினி அப்ப "டாப் ஸ்டார்".. பார்ரா.. "ராமராஜன்" இப்படிப்பட்டவரா.. இவ்ளோ நாளா தெரியலயே..அபூர்வம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "அதிமுகவில் எனக்கு எதுக்கு சீட்? என்னுடைய கட்சிக்காரர்கள் தமிழகமெங்கும் வெற்றிபெற்றால் அதுவே எனக்கு போதும்" என்று பெருந்தன்மையுடன் சொன்னவர் நடிகர் ராமராஜன்.

''படத்துக்குப் படம் கமல் போன்றவர்கள் வித்தியாசமாகச் செய்யும்போது, நீங்களும் ஏன் வித்தியாசமான ரோல்களில் மாடர்ன் டிரெஸ்களில் நடிக்கக் கூடாது?''

ரஜினி, கமலுக்கு இணையான அளவுக்கு ஒரு காலத்தில் பேசப்பட்டவர் ராமராஜன்.. மார்க்கெட்டை இழந்தாலும், இன்றுவரை ரசிகர் பட்டாளத்தை தன்னிடத்தில் வைத்து கொண்டிருக்கும் ஆச்சரிய பிரபலம். மேலூரில் தியேட்டர் ஒன்றில் டிக்கெட் கிழித்து கொடுக்கும் வேலையில் இருந்த ராமராஜன் எம்பியாக உயரும் அளவுக்கு செல்வாக்கை பெற்று தந்தது அவரது உழைப்பும், எம்ஜிஆர் மீதான அபரிமிதமான அன்பும், அதிமுக மீதான அவரது விசுவாசமும்தான்.

Excellent character of Actor Ramarajan and do you know what did he say about MGR

நடிப்பு என்று பெரிதாக இல்லாவிட்டாலும், எளிமையான உடையும், கள்ளம் கபடமற்ற பேச்சும், கிராமப்புற மக்களை ஈர்க்கும்படியான பாடிலேங்குவேஜும், கலர் கலரான சட்டையும், எம்ஜிஆரை நினைவுபடுத்தும் வகையிலான வசனங்களும், அவருக்கென தனி கூட்டத்தை உருவாக்கி தந்தது..

ரசிகர்கள்: இதற்கெல்லாம் இளையராஜாவின் இசையும் ஒரு அச்சாணியாக இருந்ததை மறுக்க முடியாது.. தமிழகம் முழுவதும் ராமராஜனுக்கு ரசிகர் மன்றங்கள் அதிகமாகின என்பதுடன், அந்த மன்றங்கள் இன்றுவரை அவருக்கு பக்கபலமாக இருந்து வருவதுதான் பலருக்கும் வியப்பை உண்டாக்கி வருகிறது.

இவர், கீழ் மட்டத்திலிருந்து உயர்ந்து வந்தவர் மட்டுமல்ல, சினிமா துறையிலேயே நிறைய பேருக்கு வாய்ப்பு கொடுத்து ஆளாக்கி இருக்கிறார் என்பது பலரும் அறியாத உண்மை... இசையமைப்பாளர் தேவா இவரால்தான் அறிமுகப்படுத்தப்பட்டார் என்றுகூட சொல்வார்கள்.. அரசியலில் காலடி வைத்ததுமே நிறைய ஏற்ற இறக்கங்களை, துரோகங்களை நேரடியாக சந்தித்தார்..

Excellent character of Actor Ramarajan and do you know what did he say about MGR

ராமராஜன்: இதற்கு நடுவில் குடும்ப பிரச்சனை, விபத்து என அடுத்தடுத்த நிகழ்வுகள் ராமராஜனை புரட்டி போட்டுவிட்டது.. எனினும் சினிமாவில் இவர் ஒதுங்கியே விட்டதாக சொன்னார்கள்.. ஆனால், கரைஒதுங்காமல் இன்றுவரை சிறந்த கலைஞர் என்ற பெயரையே தக்கவைத்து வருகிறார்.

சில வருடங்களுக்கு முன்பு, பிரபல சேனல் ஒன்றுக்கு ராமராஜன் பேட்டி தந்திருந்தார். அந்த பேட்டியில், மார்டர்ன் டிரஸ் அணிந்து ஏன் சினிமாவில் அவ்வளவாக நடிப்பதில்லை? அதிமுகவில் உங்களுக்காக மறுபடியும் சீட் கேட்பீங்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.. அதற்கு ராமராஜன் சொன்ன வரிகளைதான் இன்றும் அவரது ரசிகர்கள் புளகாங்கிதமடைந்து சொல்லி வருகிறார்கள்.

கொல்கத்தா: அந்த பேட்டியில் சொல்கிறார், ''என் படப்பெட்டியெல்லாம் சென்னையில் இருந்து டெல்லி, கல்கத்தா போறதில்லே. மதுரை, கன்னியாகுமரிதானே போகுது. என்னோட அலட்டிக்காத நடிப்புதான் ஜனங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீங்க சொல்ற மாதிரி நான் பேகி பேன்ட்டும் டி-ஷர்ட்டும் போட்டு நடிக்கலாம்.. ஆனால், புதுசா மாடர்ன் டிரெஸ் இப்படி வந்திருக்கிறதா என்றே குட்டி குட்டி ஊர்களிலே எத்தனை பேருக்குத் தெரியும்? இதெல்லாம் நான் போட்டால், ஏதோ கிறுக்குப்பயனு நினைச்சுடுவாங்க.

Excellent character of Actor Ramarajan and do you know what did he say about MGR

சிகரெட்: கிராமத்து ஜனங்க நம்ம ராமராஜன் படம்ன்னு நம்பி போவாங்க.. எனக்கு எப்பவுமே B & C சென்டரே போதும். நான் எப்பவுமே சிகரெட் பிடிச்சதில்லை.. தண்ணி அடிச்சதில்லை.. அப்புறம் சினிமாவுக்காக மட்டும் எதுக்கு அந்த பழக்கம் இருக்கறதா நடிக்கணும்? அதனால்தான், அந்த மாதிரி கேரக்டர் பண்றதில்லே..

புரட்சி தலைவரை சின்ன வயசில் இருந்தே எனக்கு பிடிக்கும். கல்யாணம் ஆன புதுசுல என்னை தலைவருக்கு அவ்வளவா தெரியாது.. அப்போதான் நான் 2 படத்துல நடிச்சு முடிச்சிருந்தேன். என் மனைவி நளினியை அவருக்கு நல்லா தெரியும். தலைவர், எங்க ரெண்டு பேரையும் அவரோட வீட்டுக்கு கூப்பிட்டு, அவரோட சேர்ந்து சாப்பிடவெச்சு உபசரித்தபோது, உடன்பிறவா சகோதரரை போல ஒரு பாசம் வந்துடுச்சு.

தன்னடக்கம்: எந்தவிதப் பலனையும் எதிர்பார்த்து இயக்கத்துல நான் சேரலை. எனக்கு எதுக்கு அரசியல்? ஒருவேளை, என்னை மேடமே கூப்பிட்டு தேர்தலில் நிற்க சொன்னாக்கூட... பணிவா, "எனக்கு விருப்பம் இல்லை"ன்னு சொல்லிடுவேன். என்னோட ஒரே விருப்பம், தமிழ்நாட்டுல இருக்கிற அத்தனை தொகுதியிலேயும் அதிமுக இயக்கத்தை சேர்ந்தவங்க ஜெயிக்கணும். அவ்வளவுதான்.. அது போதும் எனக்கு'' என்று தன்னடக்கத்துடன் கூறியிருந்தாராம் ராமராஜன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+