பழைய கட்டிடங்கள் இடிக்கப்படுகிறதா? அடியோடு மாறுது எல்லாம்..திடீர்னு சொன்ன தமிழக அரசு.. சபாஷ் முயற்சி
சென்னை: தமிழக மக்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும், ஏகப்பட்ட அறிவிப்புகளையும், சலுகைகளையும் பத்திரப்பதிவு துறை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், இப்போது ஒரு மகிழ்ச்சி தகவலை தெரிவித்து கொண்டுள்ளது.
தற்போது, தமிழக அரசின் அனைத்து துறைகளுமே ஆன்லைன்மயமாகிவிட்டது.. அந்தவகையில், பத்திரப்பதிவு துறையும் முழுக்க முழுக்க இணையதள வசதிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.. அதேபோல, ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட அளவு விகிதம் வருவாய் இலக்கு நிர்ணயித்து, பத்திரப்பதிவு செயல்பட்டு வருகிறது.

அறிவிப்புகள்: அந்தவகையில், இந்த வருடம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதோ ரூ.25,000 கோடி வருவாய் ஆகும்.. இந்த இலக்கை எட்டி பத்திரப்பதிவு பயணப்பட்டு வருகிறது. இதற்காகவே, பல்வேறு அதிரடிகளையும், அறிவிப்புகளையும், வெளியிட்டு வருவதுடன், பொதுமக்களுக்கான சலுகைகளையும் வாரி வழங்கி வருகிறது..
முக்கியமாக, சுபமுகூர்த்த தினங்களில் சார்பதிவாளர் அலுவலகத்தில் கூடுதல் டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்த நாட்களில் மட்டும், பத்திரப்பதிவு சற்று அதிகமாகவே நடக்கும் என்பதால், கூடுதல் வசூல் கிடைத்தும் வருகிறது..
டோக்கன்கள்: இதைத்தவிர, சில விடுமுறை நாட்களிலும் கூடுதல் பத்திரப்பதிவை மேற்கொள்ள மக்கள் கோரிக்கை விடுத்து வந்ததால், அதற்கேற்றபடியும் விசேஷ நாட்களிலும், டோக்கன்கள் கூடுதலாக வழங்கப்பட்டு வருகின்றன.
எனினும், பத்திரப்பதிவுக்கு வருவாய் இழப்பு என்பது தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, சொத்து பரிமாற்றங்கள் தொடர்பாக பத்திரங்களை பதிவு செய்யும்போது, வழிகாட்டி மதிப்பு அடிப்படையில் உரிய முத்திரை தீர்வை, பதிவு கட்டணம் செலுத்த வேண்டும்...
இதில், சொத்து மதிப்பை குறைத்தோ அல்லது மாற்றியோ குறிப்பிடும் நிகழ்வுகளில் பதிவுத்துறைக்கும், அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறதாம். தணிக்கையின்போது, இப்படியான வருவாய் இழப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பதிவுத்துறை: அதனால்தான், இதிலும் ஒரு திருத்தத்தை கடந்த வாரம் பதிவுத்துறை செய்திருந்தது. அதன்படி, "தணிக்கை குறிப்புகள் வாயிலாக ஒரு பத்திரத்தில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது தெரிந்தால், அதன் உரிமையாளரிடம் இருந்து வசூலிக்க வேண்டும்.. இதில் தணிக்கைக்கு முன்பு, அடுத்தடுத்த பதிவுகள் நடந்திருந்தால், அதன் இப்போதைய உரிமையாளர்கள், புதிதாக பதிவுக்கு வருவோரிடம், இழப்பு தொகையை விகிதாசார அடிப்படையில் பிரித்து வசூலிக்க வேண்டும்.
இதில் இழப்பு ஏற்பட்ட பத்திரத்தின் சொத்து தொடர்பாக, யாராவது புதிதாக பதிவுக்கு வந்தாலும், அவரிடம் இருந்து இழப்பு தொகையை பிரித்து வசூலித்து, பதிவை தடுக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.. இதில், சொத்து உரிமையாளரின் பரிமாற்றங்கள் பாதிக்கப்படக் கூடாது' என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
புதிய இலக்கு: இந்நிலையில், நேற்றைய தினம் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்தது.. அப்போது, பத்திரப்பதிவு துறைக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பத்திரப்பதிவு துறை வாயிலாக, 2024 - 25 நிதி ஆண்டில் வருவாய் வசூல், 23,370 கோடி ரூபாயாக இருக்கும் என பட்ஜெட்டில் ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துறையின் வாயிலாக, 2023 - 24 நிதியாண்டில், 20,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை எட்டும் அளவுக்கு, தற்போது வருவாய் அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்ல, இந்த துறையில், பழைய கட்டிடங்களை இடித்து, புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகள், 133 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெருத்த நம்பிக்கை: இலக்கை எட்டிப்பிடிக்க பதிவுத்துறை தொடர்ந்து மும்முரமாகி வருகிறது... பதிவுக்கு வரும் பொதுமக்களின் பணிகளை சிறப்பாக செய்து, புகாருக்கு இடமின்றி அனைத்து அலுவலர்களும், பணியாளர்களும் பணிபுரிய வேண்டும் என்றும் அரசு நிர்ணயித்த வருவாய் இலக்கை அடைய வேண்டும் என்று சார் பதிவாளர்கள், மாவட்ட பதிவாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கும் விரைவில் பதிவுத்துறை எட்டிப்பிடித்துவிடும் என்றே நம்பப்படுகிறது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications