ஓ.பன்னீர்செல்வம் செல்வாக்கு உள்ளவர் எனில் மகன் வெற்றிக்கு ரூ. 200 கோடி செலவு ஏன்?: பொங்கலூர் மணிகண்டன்
சென்னை: அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் செல்வாக்கு உள்ளவர் எனில் அவரது மகன் ரவீந்திரநாத் ஜெயிக்க ரூ. 200 கோடி ஏன் செலவு செய்ய வேண்டும் என அதிமுக ஆதரவாளர் பொங்கலூர் மணிகண்டன் கேள்வி எழுப்பி உள்ளார்.
நமது ஒன் இந்தியா தமிழுக்கு பொங்கலூர் மணிகண்டன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் ரவீந்திரநாத்துக்கும் அதிமுகவுக்கும் தொடர்பே இல்லை. இருவரும் கட்சியை விட்டு நீக்கப்பட்டு ஓராண்டாகிவிட்டது. ரவீந்திரநாத் தேர்தல் வெற்றி செல்லாது என்ற தீர்ப்புக்கும் அதிமுகவுக்கும் தொடர்பே இல்லை. அதிமுக ஒரு வலுவான இயக்கம். ஓபிஎஸ் போல பல தலைவர்கள் வெளியேற்றப்பட்டு காணாமல் போன வரலாறு எல்லாம் இருக்கிறது. தன் மகன் வெற்றி பெறுவதற்காக ரூ. 200 கோடி ஓபிஎஸ் செலவு செய்ததாக தொண்டர்களே பேசிக் கொண்டனர்.

இந்த தீர்ப்பு குறித்து ஈவிகேஎஸ் இளங்கோவன், நிம்மதி கிடைத்திருக்கிறது என்றெல்லாம் பேசியிருப்பது கொடூரமானது; கொடுமையானது. ஏனெனில் இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பொதுமக்களை பட்டியலில் அடைத்து வைத்து வென்றவர் இளங்கோவன். அதாவது சாத்தான் வேதம் ஓதுவைப் போன்றதாகும்.
தேனி தொகுதியில் ஓபிஎஸ் குடும்பம் எவ்வளவு செலவுஎய்தது என்பது எல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாது. ஓ.பன்னீர்செல்வம் சுயநலத்துடன் செயல்பட்டதால்தான் தேனி மாவட்ட அதிமுகவினர் அவருடன் யாருமே செல்லவில்லை. அதிமுகவின் எந்த வேட்பாளரைப் பற்றியும் கவலைப்படாமல் தன் மகன் ஜெயிக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் மட்டுமே ஓ.பன்னீர்செல்வம் செயல்பட்டார். தமிழ்நாட்டில் இடைக்கால முதல்வராக, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட ஓ.பன்னீர்செல்வம், உண்மையிலேயே அவருக்கு அபரிதமான செல்வாக்கு இருந்திருக்க வேண்டும். மகன் போட்டியிட்ட போது தொகுதிக்கு செல்லாமலேயே வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் ஓ.பன்னீர்செவம் பணத்தை நம்ப் வெற்றி பெற்றார். அதிமுகவின் வேட்பாளர்களை பற்றி ஓ.பன்னீர்செல்வம் கவலைப்படவே இல்லை. அதனால்தான் தென்மாவட்டங்களில் வெற்றி பெற்றவர்கள்/ வெற்றி பெறாதவர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமியை நம்பி அவரது தலைமையில் செயல்படுகின்றனர்.
ஒரு மோசடியான அரசியல் பாதையை ஓ.பன்னீர்செல்வம் தேர்வு செய்ததன் விளைவுதான் இது. திமுகவின் ஆதரவுடன் ஓ.பன்னீர்செல்வம் செயல்படுவதால்தான் அவர் மீதான குற்றச்சாட்டுகள் எல்லாம் மூடி மறைக்கப்படுகின்றன. தென்மாவட்டங்களில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு செல்வாக்கு இருக்கிறதா? இல்லையா? என்பது அல்ல. ஒரு தலைவராக இருப்பவர் பிரசாரம் செய்திருக்க வேண்டுமா? இல்லையா? என்பதுதான். அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் இருந்ததே ஒரு சாபக்கேடு. அவரது அரசியல் செயல்பாடுகள் அதிமுகவுக்கு ஆபத்தானது.. ஓ.பன்னீர்செல்வத்துடன் இருந்தவர்கள் அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்கள். எடப்பாடி பழனிசாமி சொந்த தொகுதிக்கு போக வேண்டிய அவசியமே இல்லாமல் ஜெயிக்கக் கூடிய செல்வாக்கு பெற்றவர். ஜெயலலிதா காலத்தில் வெற்றி பெற்ற 10 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பைப் பெற்று தந்தவர் எடப்பாடி பழனிசாமி என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு பொங்கலூர் மணிகண்டன் கூறினார்.
-
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications