கருப்பும் அழகுதான்.. பெயரை மாற்றியது ஃபேர் அண்ட் லவ்லி.. புதுப் பெயர் என்ன தெரியுமா? #fairandlovely
சென்னை: யூனிலீவர் நிறுவனம், தனது அழகு கிரீமான, 'ஃபேர் & லவ்லி' பெயரை 'க்ளோ & லவ்லி' ('Glow & Lovely') என்று மாற்றியுள்ளது.
ஆண்களுக்கான ஸ்கின் கிரீம் 'க்ளோ & ஹேண்ட்சம்' (Glow & Handsome) என்று அழைக்கப்படும் என்று இந்துஸ்தான் யூனிலீவர் இன்று அறிவித்துள்ளது.
90ஸ் கிட்ஸ் அதிலும், பெண்கள் வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக இருப்பது ஃபேர் அன்டு லவ்லி சரும கிரீம். குறைந்த நாட்களில் கருப்பான மேனியும் சிவப்பு நிறத்திற்கு மாறும் என்ற நம்பிக்கையால், நகரங்கள் மட்டுமல்லாது கிராமப்புறங்களிலும், அவ்வளவு ஃபேமஸ்.

45 வருட பாரம்பரியம்
கிட்டதட்ட 45 வருடங்களாக சந்தையில் வெற்றிகரமாக இருக்கும் காஸ்மெடிக்ஸ் பொருட்களில் ஒன்றுதான் ஃபேர் அண்ட் லவ்லி. ஆண்கள் கூட பவுடர் கலையாமல் இருக்க இதை பூசிக்கொள்வது உண்டு. அதன் வாசமும் பலருக்கு பிடிக்கும். பிறகு ஆண்களுக்காகவும் தனியாக க்ரீம் வெளியிட்டது இந்த நிறுவனம்.

ஃபேர் அண்ட் லவ்லி
இப்படி பலரின் உணர்வுகளோடு கலந்த பெயர்தான், Fair & Lovely. ஆனால், இந்த பெயரில் மாற்றம் கொண்டு வரப்போவதாக ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் நிறுவனம் சமீபத்தில் தெரிவித்தது. கறுப்பு என்பது அழகு குறைவானது. சிவப்பாக மாறுவதே அழகு எனப் பொருள் தரும்படி பெயர் இருப்பதாக உள்ளதால் இந்த முடிவை ஹிந்துஸ்தான் நிறுவனம் எடுத்துள்ளதாக தெரிவித்தது.

புது பெயர்
இந்த நிலையில்தான், 'க்ளோ & லவ்லி' என்று பெயர் மாற்றியுள்ளது ஃபேர் அன்ட் லவ்லி. ஆண்களுக்கான ஸ்கின் கிரீம் 'க்ளோ & ஹேண்ட்சம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்தனை நாட்களாக அதன் உச்சரிப்பு கூட பெரும்பாலான பேருக்கு தெரியாமல் 'பேரன் லவ்லி' என்று மக்கள் வாயில் புழங்கியது. இனி புது பெயரை பழக்கிக் கொள்ள வேண்டியதுதான்.

பல்வேறு வண்ணங்கள்
"சரும பராமரிப்பு பிராண்டுகளின் உலகளாவிய போர்ட்ஃபோலியோவை உள்ளடக்குவதற்கும், அனைத்து தோல் டோன்களையும் கருத்தில் கொண்டும், அழகின் பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதற்கும் நாங்கள் முழுமையாக கடமைப்பட்டுள்ளோம். 'ஃபேர்', 'வெள்ளை' மற்றும் 'ப்ரைட்' போன்ற சொற்களின் பயன்பாடு சரியானது ஒற்றை பரிணாமத்தோடு உள்ளதால் பெயர் மாற்றம் தேவைப்பட்டது, " என்று இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவன அழகு சாதன பிரிவு தலைவர் சன்னி ஜெயின் தெரிவித்துள்ளார்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications