அயன், கவண் வெற்றி படங்களை இயக்கிய.. பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் கே.வி.ஆனந்த் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 54.

Recommended Video

    பிரபல இயக்குனர் KV Anand உயிரிழப்பு | Oneindia Tamil

    உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

    கே.வி.ஆனந்த்

    கே.வி.ஆனந்த்

    தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் ஆவார். முதலில் பல்வேறு படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய இவர் பின்னர் இயக்குனராக உருவெடுத்து பல்வேறு வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கே.வி.ஆனந்த்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    மரணம் அடைந்தார்

    மரணம் அடைந்தார்

    இதனால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏப்ரல் 24-ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் இன்று அதிகாலை 3 மணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் கே.வி.ஆனந்த் மரணம் அடைந்தார். டாக்டர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்தும் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை.

    சிறந்த ஒளிப்பதிவாளர்

    சிறந்த ஒளிப்பதிவாளர்

    விகடன் நிறுவனத்தில் புகைப்பட கலைஞராக பணிபுரிந்த கே.வி.ஆனந்த் முதன் முதலாக சினிமா உலகில் ஒளிப்பதிவாளராக அடியெடுத்து வைத்தார். ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் பணியாற்றிய கே.வி.ஆனந்த், பின்னர் தனியாக ஒளிப்பதிவு செய்தார். மோகன்லால் நடித்த தேன்மாவின் கொம்பத்து மலையாள படம் மூலம் ஒளிப்பதிவாளரானார் கே.வி.ஆனந்த்.

    காதல் தேசம் முதல் ஒளிபரப்பு

    காதல் தேசம் முதல் ஒளிபரப்பு

    தமிழில் முதன் முறையாக காதல் தேசம் படத்துக்கு ஒளிப்பதிவாளராக பணியற்றினார். நேருக்கு நேர், முதல்வன், பாய்ஸ், செல்லமே, சிவாஜி உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். கோபுர வாசலிலே, அமரன், மீரா, தேவர் மகன், திருடா திருடா உள்ளிட்ட படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார்.

    வெற்றி படங்கள்

    வெற்றி படங்கள்

    பின்னர் சினிமா இயக்குவதில் ஆர்வம் கொண்ட அவர் இயக்குனராக உருவெடுத்தார். கனா கண்டேன் படத்தின் மூலம் இயக்குனரானார். அயன், கோ, மாற்றான், அனேகன், கவன், காப்பான் உள்ளிட்ட படங்களை கே.வி.ஆனந்த் இயக்கி உள்ளார். கே.வி.ஆனந்தின் படங்கள் பெரும்பாலும் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் படங்களாக இருக்கும். மீரா, சிவாஜி, மாற்றான், கவண் படங்களில் சில காட்சிகளில் நடித்துள்ளார்.

    சினிமா உலகம் அதிர்ச்சி

    சினிமா உலகம் அதிர்ச்சி

    சின்ன கலைவாணர் விவேக் கடந்த 17-ம் தேதி உயிரிழந்தார். அந்த சோகத்தில் இருந்தே மீளாத நிலையில் தற்போது கே.வி.ஆனந்த்தின் மரணம் சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு தரப்பினர், அரசியல், சினிமா பிரபலங்கள் கே.வி.ஆனந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+