அந்த சார் "அரசியல்வாதி".. அவர் எந்த கட்சி தெரியல? இசையமைப்பாளர் தினா கிளப்பிய யூகம்.. மீண்டும் பரபர
சென்னை: மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் "யார் அந்த சார்?" என்ற கேள்வியுடன் தமிழகம் முழுவதும் போஸ்டர்களை ஒட்டி, திமுக அரசுக்கு எதிரான போராட்டத்தை அதிமுக கையில் எடுத்து வருகிறது. இந்நிலையில், பிரபல இசையமைப்பாளர் தீனா, யார் அந்த சார் என்பது குறித்து தன்னுடைய யூகத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி விவகாரம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திவிட்டது.. மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஞானசேகரன் "சார், சார்" என்று ஒருவரிடம் பேசியிருப்பதாகவும் , அந்த சார் யார்? என்பது குறித்து உயர் அதிகாரி தெரிவிக்கவில்லை என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியிருந்தார்.

விடாத அதிமுக: மேலும், இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி வருகிறார்.. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் 'யார் அந்த சார்?' என்ற கேள்வியுடன் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளன..
இந்த சம்பவத்தை கண்டித்து அதிமுக மாணவரணி சார்பில் பல்கலை., வளாகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சிக்கப்பட்ட நிலையில், போலீஸார் அங்கு திரண்டிருந்த அதிமுகவினரை இன்று கைது செய்தனர்.
யார் சார்: தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் இன்று தொடங்கிய நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது சட்டைகளில் யார் அந்த சார்? என்ற பேட்ஜை அணிந்து வந்தனர்.. இன்னொரு நபருக்கும் இந்த பாலியல் விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக பல்வேறு செய்திகள் வெளியாகி வரும்நிலையில், அந்த சார் யார்? என்பதை ஏன் திமுக மூடி மறைக்கிறது என்று கூறி அதிமுக போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில், ''அந்த சார்" யார் என்று பிரபல இசை அமைப்பாளர் தீனா தன்னுடைய யூகத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். திருடா திருடி உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு, இசையமைத்தவர் தீனா. தமிழக பாஜகவில் வெளிநாடு மற்றும் அண்டை மாநில, தமிழ் வளர்ச்சிப் பிரிவு மாநில தலைவராகவும் உள்ளார். காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து, அப்பதவிக்கு இசையமைப்பாளர் தீனா நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
முதல்வர் அமைதி: நேற்றைய தினம், சென்னை மதுரவாயலில், கோவில் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, தீனா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "திமுகவின் மூதாதையரான அண்ணாதுரை பெயரில் செயல்படும் பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம் வெட்கக்கேடானது. சம்பவத்திற்கு பொறுப்பேற்று, முதல்வர் பதவி விலகி இருக்க வேண்டும்.. ஆனால், அவர் எதுவும் கருத்து தெரிவிக்காதது, அதை விட வெட்கக்கேடானது. அரசு நடத்தும் ஒரு பல்கலைக்கழகத்தில், இப்படியொரு சம்பவம் நடந்த பிறகும், இந்த ஆட்சி தேவையா?
பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ள, "சார்" யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த சார் ஒரு அரசியல்வாதியாகத்தான் இருக்க வேண்டும். எந்த கட்சியை சேர்ந்தவர் என்பதுதான் புதிராகவே இருக்கிறது..
திமுக ஆட்சி: திமுக அரசு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளையும், நிறைவேற்றாமல் ஏமாற்றி கொண்டிருக்கிறது.. பொங்கலுக்கு, 1,000 ரூபாய் இல்லை என்றும் அறிவித்துவிட்டது. இதனால், ஏழை மக்கள் எவ்வளவு பேர் பாதிக்கப்படுவார்கள் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. வரும் 2026ல், இந்த ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications