Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி.. சம்பளம் எகிற போகுது.. அகவிலைப்படி உயர போகுது.. அசத்தும் மத்திய அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசு ஊழியர்கள், நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருக்கும் சம்பள உயர்வு குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி வருகின்றன.

கடந்த மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும், 4 சதவிகித அகவிலைப்படி அதிகரித்து அறிவிக்கப்பட்டது.. இந்த அகவிலைப்படி அதிகரிப்புடன் சேர்த்து, மேலும் சில அலவன்சுகளும் கூடுதலாக அதிகரிக்கப்பட்டன.

Fantastic Announcement for Government Employees and 7th pay commission how much will hra increase DA hike

குறிப்பாக, ஊழியர்களுக்கான HRA அதிகரிக்கப்பட்டது.. இந்த HRA என்பது, ஊழியர்கள் வசிக்கும் நகரத்தை பொறுத்து அமைவதாகும்.. அதாவது, X வகை நகரங்களில் உள்ள பணியாளர்கள் அதிகபட்சமாக 27 சதவிகித HRA -ஐ தற்போது பெற்று வருகிறார்கள்... HRA அதிகரிப்புக்கு பிறகு, இது 30 சதவீதமாக உயரக்கூடும்..

பணியாளர்கள்: அடுத்த வகையான Y வகை நகரங்களில், இதுவரை பணியாளர்களுக்கான வீட்டு வாடகை கொடுப்பனவு 18 சதவீதமாக உள்ள நிலையில், 20 சதவிகிதமாக இனி அதிகரிக்கக்கூடும்.. Z பிரிவு ஊழியர்களுக்கு 9 சதவிகித வீட்டு வாடகை கொடுப்பனவு உள்ள நிலையில், இனி 10 சதவிகிதமாக உயரக்கூடும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், மத்திய அரசு ஊழியர்கள் பல மாதங்களாகவே சம்பள உயர்வு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.. காரணம், ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய 2 தவணைகளுக்கான அகவிலைப்படி உயர்வுகள் வருடந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது... முதல் தவணைக்கான அகவிலைப்படி உயர்வு, மார்ச் 7ம் தேதி வெளியாகியிருந்தது.. இதன்படி, 50 சதவீத அகவிலைப் படியை மத்திய அரசு ஊழியர்கள் பெறுவார்கள்.

நிலுவைத்தொகை: ஆனால் ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்கான மூன்று மாத நிலுவைத் தொகை ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ளது. இந்த நிலுவை தொகையானது வரும் ஏப்ரல் மாத சம்பளத்துடன் கிடைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு திருத்தப்பட்ட ஊதியம் கிடைக்கவில்லை என்பதால், இவர்களுக்கு 3 மாத அரியர் தொகையுடன் ஏப்ரல் மாதத்தில் இந்த தொகை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அகவிலைப்படி உயர்வு காரணமாக மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஊழியர்கள் அடிப்படை சம்பளத்துடன் உயர்த்தப்பட்ட சம்பளத்தையும் பலனாக பெறுவார்கள்.
மத்திய அரசு 4 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவித்த பிறகு, மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு எவ்வளவு கிடைக்கும் என்பது குறித்த தோராயமாக மதிப்பிடப்பட்டு வருகிறது.

எவ்வளவு உயரும்: உதாரணத்துக்கு, ஒரு ஊழியரின் சம்பளம், மாதம் ரூ.50,000 மற்றும் அடிப்படை ஊதியமாக ரூ.15,000 இருந்தால், அவர் தற்போது ரூ.6,900 பெறுகிறார் என்றால், இது அடிப்படை ஊதியத்தில் 46 சதவீதமாகும்.. இருந்தாலும், 4 சதவீத உயர்வுக்குப் பிறகு, அவர் மாதத்திற்கு ரூ.7,500 பெறுவார்.. இது முந்தைய ரூ.6,900 உடன் ஒப்பிடும்போது ரூ.600 அதிகமாகும்.

அதுமட்டுமல்ல, ஊழியருக்கு மாதம் ரூ.50,000 சம்பளம் ரூ.15,000 அடிப்படை ஊதியமாக இருந்தால், அவருடைய சம்பளம் மாதம் ரூ.600 உயரக்கூடும். கடந்த அக்டோபர் 2023ல் முந்தைய DA உயர்வில், அரசாங்கம் அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படியை 4 சதவீதம் முதல் 46 சதவீதமாக உயர்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+