ரேஷன் வாங்க போறீங்களா? அடுத்தடுத்த சர்ப்ரைஸ் பாருங்க.. டக்டக்னு பொருட்களை இனி பெறலாம்.. சபாஷ்
சென்னை: பொதுமக்களின் நன்மையையும், வசதியையும் கருத்தில் கொண்டு, தமிழக அரசு முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் மிகுந்த கவனத்தை ஈர்த்து வருகிறது.
மகளிர் உரிமைத்தொகை விநியோகம் காரணமாக, புது ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துவிட்டு காத்திருப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தபடியே வந்தது.. ஒரு லட்சம் கார்டுகள் அச்சடிக்கப்படாமல் தேங்கி நின்றன.

காப்பீடு திட்டம்: மேலும், மருத்துவ காப்பீட்டு திட்ட சலுகைக்கும் ரேஷன் கார்டுதான் முக்கிய ஆவணமாக உள்ளதால், ரேஷன் கார்டுகளை உடனடியாக தர வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்தன.
இந்நிலையில், 45,509 புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படுவதாக அரசு தரப்பில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதில், "வெள்ளம் பாதித்த தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில், 27,577 ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டன. ஏற்கனவே, இணைய வழியில் பெறப்பட்ட இவர்களது விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதியுடைய, 45,509 புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும்.
செல்போன்: அனைவரின் மொபைல் போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டுள்ளது. புதிய ரேஷன் கார்டுகளை, வட்ட வழங்கல் அலவலகங்களுக்கு நேரில் சென்றோ, தங்கள் குடும்ப உறுப்பினரை அனுப்பியோ பெற்றுக் கொள்ளலாம். ரேஷன் கார்டு எண்ணை கடை ஊழியர்களிடம் தெரிவித்து, விரல் ரேகை சரிபார்ப்புக்கு பின், கடையில் ரேஷன் பொருட்களை கார்டுதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம்" என்றும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
இதுநாள்வரை, ரேஷன் கார்டு உள்ளவர்கள் மட்டுமே ரேஷன் கடைகளில் மூலமாக பொருட்களை பெற முடியும் என்ற நிலை இருந்து வந்த நிலையில், தற்போது புதிய ஏற்பாட்டினை அரசு செய்துள்ளது ரேஷன்தாரர்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.
கார்டுதாரர்கள்: அதேபோல, தற்போது வெயில் காலம் துவங்கிவிட்டதால், கார்டுதாரர்களை தேவையில்லாமல் வெயிலில் அலைக்கழிக்கக்கூடாது என்று ரேஷன் கடைகளுக்கு உத்தரவு பறந்துள்ளது..
அதாவது, வெயில் காரணமாக, பொதுமக்களுக்கு தேவையில்லாத அலைச்சல் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே, ஒரே தவணையில், அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும் என்று ரேஷன் ஊழியர்களுக்கு, கூட்டுறவு மற்றும் உணவுத் துறை அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறதாம்.
அறிவுறுத்தல்: அதேபோல, கடைகளுக்கு முழு அளவில் பொருட்களை அனுப்புமாறும் நுகர்பொருள் வாணிப கழகத்திடம் அறிவுறுத்தப்பட்டிருக்கிறதாம்.. அதுமட்டுமல்ல, உணவு வழங்கல் துறை மற்றும் கூட்டுறவு சங்க அதிகாரிகள் தொடர்ந்து அதிரடியாக ஆய்வில் ஈடுபட்டு, ஒரே தவணையில் பொருட்கள் வழங்குவதை உறுதி செய்யும்படியும் உத்தரவிடப்பட்டிருக்கிறதாம்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications