Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சூப்பர் ஸ்டாலின்".. எந்த முட்டாள் அரசாவது இதை செய்யுமா.. அதுவும் உளவுத்துறையா.. ஆளூர் ஷாநவாஸ் நறுக்

விசிக ஆளூர் ஷாநவாஸ் பாமக கூட்டணி குறித்து பேட்டி தந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணாமலையை, முதலில் என்ஐஏ விசாரிக்க வேண்டும்.. அவருக்கு இதை பற்றி எல்லாமே தெரியுது.. தீவிரவாதிகளுக்கும் அண்ணாமலைக்கும் தொடர்பிருக்க வாய்ப்புள்ளது என்று விசிகவின் ஆளூர் ஷாநவாஸ் தன்னுடைய சந்தேகத்தை வெளிப்படுத்தி உள்ளார்.. இதற்கு சில காரணங்களையும் நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

கோவையில் நடைபெற்ற வெடிவிபத்து தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அப்போதே பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார்..

குறிப்பாக, தற்கொலை தாக்குதலுக்கான அந்த முயற்சியை தமிழக காவல்துறை மறைப்பது ஏன்? அதை தற்கொலை தாக்குதல்தான் என்று காவல்துறை சொல்லத்தயங்குவது ஏன்? இந்த விபத்து தொடர்பாக 8 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், யாரை காப்பாற்ற தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது? என்றெல்லாம் அண்ணாமலை கேட்டிருந்தார்.

ஷாநவாஸ்

ஷாநவாஸ்

இந்நிலையில், விசிக மாநில துணை பொதுச்செயலாளரும், அக்கட்சியின் எம்எல்ஏவுமான ஆளூர் ஷா நவாஸ், நம் ஒன் இந்தியா தமிழுக்கு ஒரு பேட்டி தந்துள்ளார். அப்போது, திமுக மீது ஆளுநரிடம் பாஜக தந்திருக்கும் புகார்கள் குறித்தும், வெடிவிபத்து தொடர்பாக அண்ணாமலை எழுப்பிய கேள்விகளை அவரிடம் நாம் முன்வைத்தோம்.. அதற்கு ஆளூர் ஷாநவாஸ் சொன்ன பதில்கள்தான் இவை: "இதுவரை எந்த ஊழலை ஆளுநர் தட்டி கேட்டார்? திமுக அரசு இன்னென்ன ஊழல்களை செய்துள்ளதால், அந்த ஊழலை ஆளுநர் தட்டி கேட்டார் என்று இதுவரை ஏதாவது நடந்திருக்கிறதா?

சபாஷ் ஸ்டாலின்

சபாஷ் ஸ்டாலின்

ஆர்என் ரவி தட்டிக்கேட்ட ஊழல் என்று ஒன்றாவது இருக்கா? ஆர்என் ரவி கேள்வி எழுப்பிய ஊழல், ஒன்றாவது இருக்கா? ஒரே ஒரு ஆளுநர் மட்டும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.. பன்வாரிலால் புரோகித் மட்டும்தான் அன்று, துணைவேந்தர் நியமனங்களில் மிகப்பெரிய கொள்ளை நடந்தது என்று சொல்லி உள்ளார்.. அதுவும் யாருடைய ஆட்சியில் கொள்ளை நடந்தது என்றார் என்பதையும் நீங்களே பாருங்கள்.. ஆளுநர் ரவி அதுபோல, திமுக அரசு மீது ஏதாவது சொல்லி உள்ளாரா? "அரசாங்கத்தை நல்லா நடத்துகிறார் ஸ்டாலின்" என்றுதான் ஆளுநர் ரவி பாராட்டி உள்ளார்..

சாயங்காலம்

சாயங்காலம்

சமீபத்தில்கூட அவரது மேடைகளில் தமிழக அரசை பாராட்டியிருக்கிறார், முதல்வர் சுறுசுறுப்பாக இருக்கிறார் என்றெல்லாம் சொல்லி வருகிறாரே.. கோவை குண்டுவெடிப்பை 4 நாட்களில் என்ஐஏவிடம் ஒப்படைத்தது தமிழக அரசு.. 4 மணி நேரத்தில் டிஜிபி, கோவைக்கு சென்றுவிட்டார்.. வெடிவிபத்தில் என்ன நடந்தது? யார் யார் ஈடுபட்டுள்ளார்கள்? என்ற விசாரணைகள் நடத்தி, அன்று சாயங்காலமே பல தகவல்களை வெளியே கொண்டு வந்துவிட்டார்..

லேட்டாயிடுச்சு

லேட்டாயிடுச்சு

என்ஐஏவுக்கு பரிந்துரை செய்கிறார்கள் என்றாலே என்ன அர்த்தம்? வெறும் கத்திகுத்து விவகாரம் என்றால் அது என்ஐஏவுக்கு போகுமா? தீவிரவாத தாக்குதல் என்பதால்தான், என்ஐஏவுக்கே அந்த கேஸ் போகிறது.. நீங்கள் என்ன சட்டத்தை உருவாக்க வைத்திருக்கிறீர்களோ, அதன்அடிப்படையில்தானே அரசு செல்ல முடியும்? ஒரு சம்பவம் நடந்ததுமே அதை பற்றி விசாரித்து, அதை என்ஐஏவிடம் ஒப்படைக்க ஒரு அவகாசம் என்பது தேவைப்படுகிறது.. இதேபோல தாக்குதல் கர்நாடகாவில் நடந்தபோது, 10 நாள் கழித்துதான், என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டது.. ஆனால், தமிழகத்தில் 4 நாட்களிலேயே ஒப்படைக்கப்பட்டது..

காலதாமதம்

காலதாமதம்

காலதாமதம் ஏன் என்று கர்நாடகாவில் போய் கேட்க வேண்டியதுதானே? அதுக்காக கர்நாடக அரசின் பின்னடைவு என்று சொல்லிவிட முடியாது.. காரணம், அவர்களின் விசாரணை போக்கில் என்ன நெருக்கடி இருந்திருக்குமோ, என்ன பிரச்சனைகள் இருந்திருக்குமோ தெரியாது.. ஆனால், தீவிரவாத தாக்குதல் என்று சொல்ல திமுக அரசு தயங்குவதாக குற்றஞ்சாட்டுவது அபாண்டம்.. தீவிரவாதிகளை காப்பாற்றி இந்த அரசுக்கு என்ன ஆக போகிறது? தீவிரவாதிகளை பாதுகாக்கும் முயற்சியில் திமுக அரசு இறங்கிவிட்டது என்கிறார்களே?

வோட்பேங்க்

வோட்பேங்க்

அப்படியானால் அது திமுகவுக்கு நல்லதா? கெட்டதா? எந்த முட்டாள் அரசாவது இப்படி செய்யுமா? தீவிரவாதிகள் என்ன பெரிய வாக்கு வங்கியா? தீவிரவாதிகளை காப்பாற்றினால், அவர்கள்தான் வந்து இங்கே ஓட்டு போட போறாங்களா? இதெல்லாம் லாஜிக்கே இல்லையே.. தீவிரவாதிகள் என்பவர்கள், சமூகத்தால் தனிமைப்படுத்தப்படுபவர்கள்.. மக்களால் அன்னியப்படுத்தப்படுபவர்கள்.. மக்களின் வெறுப்புக்கு ஆளாகுபவர்கள்.. இவர்களை காப்பாற்றுவதால், ஒரு அரசுக்கு நன்மையா? கேடா? அரசியல் கோணத்திலேயே பார்த்தாலும், அண்ணாமலை சொல்வதில் ஏதாவது பொருள் இருக்கா? முதல்ல இப்படி ஒரு காரியத்தை இந்த அரசு செய்யுமா? இதெல்லாம் அரசுக்கு தேவையா?

உளவுத்துறை

உளவுத்துறை

அண்ணாமலையை, முதலில் என்ஐஏ விசாரிக்க வேண்டும்.. அவருக்கு இதை பற்றி எல்லாமே தெரியுது.. தீவிரவாதிகளுக்கும் அண்ணாமலைக்கும் தொடர்பிருக்க வாய்ப்புள்ளது.. தீவிரவாதிகளின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ், யாருக்குமே கிடைக்கவில்லை, ஆனால் அண்ணாமலைக்கு மட்டும் கிடைக்குது.. எப்படி கிடைக்குது? ஒருவேளை மத்திய உளவுப்பிரிவுதான், இந்த தகவலை எல்லாம் அண்ணமலையிடம் தருகிறதா? அப்படி தருவதானால், அது எவ்வளவு பெரிய தவறு? தகவல்கள் ஏதாவது கிடைத்தால், அதை மாநில உளவுத்துறைக்கு பரிமாற வேண்டிய விஷயத்தை, ஒரு கட்சி தலைவருக்கு கொண்டுபோய் தருவதா? அண்ணாமலைக்கு தகவல் தரும்போது, ஏன் மாநில அரசுக்கு அத்தகைய தகவல்களை தரவில்லை? இதில் சிக்கலே அண்ணாமலைதான்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+