கருவாடு கூடையுடன் அந்தம்மா.. சூப்பர்ல.. அதிமுக கொடியில் அண்ணா.. பர்வீன் சுல்தானா பலே விளக்கம்.. வாவ்
திமுக அரசுக்கு பேச்சாளர் பர்வீன் சுல்தானா பாராட்டு தெரிவித்து, நெகிழ்ந்து பேசினார்
சென்னை: "திராவிட முன்னேற்ற கழகத்தில் இருந்து பிரிந்து சென்றவர்கள் உருப்பட்டதாக சரித்திரமே கிடையாது.. அதேபோல, திமுகவில் வந்து சேர்ந்தவர்கள் விழுந்ததாக வரலாறும் கிடையாது.. வந்தாரை வாழவைக்கும் அற்புதமான கட்சி இது" என்று பர்வீன் சுல்தானாவின் பேச்சினை திமுகவினர் ஷேர் செய்து வருகிறார்கள்.
சென்னையில் "சமூக நீதி தத்துவத்தின் தகைமையே" என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடந்தது.. இதில் திமுகவின் பொருளாளர் டி ஆர் பாலு, இந்து சமய அறநிலைத்துறை சேகர்பாபு, பேராசிரியர் பர்வீன் சுல்தானா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..
இதில், பர்வீன் சுல்தானா பேசிய பேச்சு அனைவரையும் ஈர்த்து வருகிறது.. இணையத்திலும் இவர் பேசிய வீடியோவை திமுகவினர் ஷேர் செய்து வருகிறார்கள்.. அந்த ஒருபகுதியின் சுருக்கம்தான் இது:

காந்தம் + இரும்பு
நாங்கள் இங்கே பாதுகாப்பாக இருக்கிறோம்.. பொதுவாக ஒரு தலைவர் இறந்துவிட்டால், அந்த கட்சி குழுகுழுவாக தனித்தனியாக பிரிந்துவிடும்.. ஆனால், இந்த திமுக மட்டும்தான் காந்தத்தை இழுக்கக்கூடிய இரும்பு போன்றது.. இந்த அரசியல் இந்து முஸ்லிம் பிரச்சனை இல்லை.. அவர்களின் பொது எதிரியார் என்றல், பிராமணர் அல்லாதவர்கள்தான் முதல் எதிரி.. உங்களை திசைமாற்றுவதற்காக சிறுபான்மையினர் மீது கருத்தை செலுத்துகிறார்கள்.. அவ்வளவுதான்..

கருவாட்டு கூடை
நான் திமுகவை சார்ந்தவள் கிடையாது.. ஆனால் ஒன்றை உறுதியாக சொல்கிறேன்.. இன்னும் 50 வருஷத்துக்கு திமுக என்ற சிந்தனையை தமிழகத்தில் இருந்து அகற்றிவிட முடியாது.. ஏனென்றால் அது சுயமரியதை சார்ந்த விஷயம்.. நான் வடசென்னையை சேர்ந்தவள்.. காலையில் 4 மணிக்கு கருவாடு கூடையை வைத்துக் கொண்டு, ஒரு அம்மா டீக்கடையில் நிற்கும்.. டீ வாங்கி குடிக்கும்.. கூடவே 2 பொறையை வாங்கும்.. அதில் ஒரு பொறையை டீயில் தொட்டு சாப்பிட்டு, இன்னொரு பொறையை அங்கு பசியோடு பார்த்திருக்கும் நாய்க்கு போட்டுவிட்டு போவார்.. அப்படிப்பட்ட ஊர் அது.. அந்த ஊரில் நாங்கள் ஜெயித்து வந்தது சாதாரண விஷயமே கிடையாது..

சூப்பர்ல்ல
பெண்களுக்கான சுயமரியாதையை அவர்களுக்காக மீட்டு தந்த ஒரே கட்சி திமுகதான். சுயஉதவிக்குழுக்களின் கடன்களை தள்ளுபடி செய்தது முதல் இலவச பஸ் பேருந்துவரை எதை சொல்வது? ஒன்றை சொல்கிறேன், எழுதி வைத்து கொள்ளுங்கள்.. திராவிட முன்னேற்ற கழகத்தில் இருந்து பிரிந்து சென்றவர்கள் உருப்பட்டதாக சரித்திரமே.. அதேபோல, இங்கே வந்து சேர்ந்தவர்கள், விழுந்ததாக வரலாறும் கிடையாது.. வந்தாரை வாழவைக்கும் அற்புதமான கட்சி இது..

பீடி சிங்கம்
அதிமுக கொடியில் அண்ணா உருவம் பொறிக்கப்பட்டுள்ளதே, இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? சிகரம் வழக்கறிஞர் செந்தில்நாதன் இதற்கு ஒரு அற்புதமான பதிலை சொன்னார்.. இத்தனைக்கும் அவர் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்தவர்.. அவர் சொல்கிறார்,"சிங்கம் மார்க் பீடியில் சிங்கம் இருக்கும்.. ஆனால் சிங்கம், பீடி பிடிக்காது" என்றார்.. சூப்பர்ல.. உங்க கொடியில் வேண்டுமானால் அண்ணாவை வைத்து கொள்ளலாம், ஆனால், கொள்கையில் அண்ணாவை வைத்திருக்கவில்லையே.. கொள்கையிலும் அண்ணாவை வைத்திருக்கக்கூடிய கட்சி திமுக மட்டுமே.. அனைத்து வரலாறுகளையும் தூக்கி பிடிக்க, ஒரு புதிய வரலாறு பிறந்திருக்கிறது.. அதற்கு பெயர்தான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்கிற தமிழக முதல்வர்" என்றார்.












Click it and Unblock the Notifications