சவுமியா அன்புமணி வியந்துட்டாங்க.. அதைபற்றி கேட்டதுமே திமுக அரசுக்கு ஒரே பாராட்டு.. பார்ரா.. சூப்பர்ல
சென்னை: திமுகவை தொடர்ந்து விமர்சித்து வரும் பாமகவின், சௌமியா அன்புமணி, தற்போது திடீரென பாராட்டு தெரிவித்துள்ளார்.. இது பல தரப்பினரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. சவுமியா திமுக அரசை பாராடட என்ன காரணம் தெரியுமா?
தமிழகத்தை பொறுத்தவரை, நீர் நிலைகளை தூர்வாரி, மழைநீரை சேகரித்து நீர் மேலாண்மை செய்வதற்கு முன்னுரிமை அளித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எனவேதான், நீர்நிலைகளை பாதுகாப்பில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு முதல்வரின் நீர்நிலை பாதுகாவலர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 கோடி ரூபாய்: தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில், நீர் நிலைகளை சிறப்பாக பாதுகாக்கிற 100 பேருக்கு முதல்வரின் நீர்நிலை பாதுகாவலர் விருது வழங்கப்படும் என்றும், ஒரு நபருக்கு 1 லட்சம் ரூபாய் வீதம் 1 கோடி ரூபாயில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன், இதற்கான அரசாணையும் சமீபத்தில் வெளியாகியிருந்தது..
100 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் விருதுத்தொகை ரூ.1 கோடி, நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழுக்காக ரூ.2 லட்சம், நிகழ்ச்சிக்காக ரூ.6 லட்சம், இதர செலவாக ரூ.2 லட்சம் என ரூ.1.10 கோடியை வழங்கும்படி கருத்துரு அனுப்பப்பட்டிருந்தது. இந்த கருத்துருவை கவனமாக பரிசீலித்த தமிழக அரசு, மாவட்டந்தோறும் ஒருவர் என 38 மாவட்டத்துக்கு 38 பேருக்கு விருது வழங்கும் வகையில், ரூ.38 லட்சம் மற்றும் இதர செலவுகளுக்காக ரூ.4 லட்சம் என ரூ.42 லட்சத்தை, தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய நிதியில் இருந்து ஒதுக்கியுள்ளது.
தமிழக அரசு: இந்த அறிவிப்பு சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் பாராட்டையும், கவனத்தையும் பெற்று வருகிறது. அந்த வகையில், பாமகவின் சவுமியா அன்புமணி ராமதாஸ் இந்த திட்டத்துக்கு மனம் நிறைந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
சென்னையை அடுத்த போருரில் உள்ள ஶ்ரீ ராமசந்திரா மருத்துவக் கல்லூரியில் பசுமைத்தாயகம் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் ரைன்போ சார்பில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் துவக்க விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பசுமைத்தாயகத்தின் தலைவர் சவுமியா அன்புமணி கலந்து கொண்டார்.
சவுமியா அன்புமணி: இந்த விழாவில் பேசிய சவுமியா அன்புமணி, தமிழ்நாட்டில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. முக்கியமாக திநகர் போன்ற நகர பகுதிகளில் காற்று மாசால் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. சாலை விரிவாக்கத்தின்போது ஒரு மரம் அகற்றப்பட்டால் 10 மரக்கன்றுகள் நட வேண்டும். ஆனால் அதனை சரியாக செய்கிறார்களா என தெரியவில்லை. அதற்கான விவரங்களை கேட்டு வருகிறோம்.
அதேபோல, நீர்நிலைகளை பாதுக்காக்கும் பணியில் ஈடுபடுவோரை அங்கீகரிக்கும் விதமாக நீர்நிலை பாதுகாவலருக்கு விருது வழங்கும் அரசின் திட்டம் வரவேற்கத்தக்கது. யார் நல்லது செய்தாலும் அதனை பாரட்ட வேண்டும். இதுபோன்ற செயல் நீர்நிலை பாதுகாப்பில் ஈடுபடும் பலரை ஊக்கப்படுத்தும்" என்றார்.
பாராட்டு: சவுமியாவை பொறுத்தவரை, பசுமைதாயகம் பெயரில் பல்வேறு விழிப்புணர்வினை வருடந்தவறாமல் ஊட்டி வருகிறார்.. உலக பூமி தினத்தையொட்டி சென்னையில் தூய காற்றுக்கான விழிப்புணர்வு பிரசாரங்களை பசுமைத்தாயகம் சார்பில் விடாமல் முன்னெடுத்து வருபவர்...
அதேபோல, திமுகவை கடுமையாக விமர்சித்து வருபவர்.. நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் பிரச்சாரத்திலும், "இட ஒதுக்கீடு கொடுக்கமுடியாது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தமுடியாது என்பவர்களுக்கு எத்தனை நாள் வாக்களித்து ஏமாறப்போகிறீர்கள்? இட ஒதுக்கீடு பெற பாமகவை ஆதரியுங்கள்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
பெருத்த கவனம்: ஆனால் தற்போது, நீர்நிலைகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுவோரை அங்கீகரிக்கும் விதமாக நீர்நிலை பாதுகாவலருக்கு விருது வழங்கும் அரசின் திட்டத்திற்கு சவுமியா அன்புமணி வரவேற்பு தெரிவித்துள்ளது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
-
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்?












Click it and Unblock the Notifications