தாய்லாந்தில் நடைபெறும் அழகி போட்டிக்கு ராமநாதபுர விவசாயி மகள் ஜோதிமலர் தேர்வு!
ராமேஸ்வரம்: தாய்லாந்தில் நவம்பர் 28ஆம் தேதி நடைபெறும் மிஸ் ஹெரிடேஜ் இன்டர்நேஷனல் 2025 அழகி போட்டிக்கு ராமநாதபுரம் மாவட்ட விவசாயி ஒருவரின் மகள் தேர்வாகியுள்ளார். அவர் யார் என்ன செய்கிறார் என்பதை பார்க்கலாம்.

ராமநாதபுரம் மாவட்டம்.. அழகிய தீவான ராமேஸ்வரம் உள்ளது. பல்வேற வரலாறுகளை உள்ளடக்கியது. இராமாயணத்தில் இராமர் கடலைக் கடந்து சீதையை இராவணனிடம் இருந்து மீட்பதற்காக மண், மிதக்கும் வகை கல் மற்றும் மரங்களை கொண்டு வானரங்கள் கட்டிய பாலம் ராமர் பாலம் என நம்பப்படுகிறது. இது ஆதம்ஸ் பாலம் என்றும் அழைக்கப்படுகிறது.
இத்தகைய குட்டி ராமேஸ்வரம் தீவிற்கு நாள்தோறும் ஏராளமானோர் வருகை தருகிறார்கள். அந்த வகையில் இந்த தீவு இடம் பெற்றுள்ள ராமேஸ்வரம் மாவட்டத்தில் இருந்து ஒரு பெண் அழகி போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தெற்கு காக்கூரைச் சேர்ந்த விவசாயி கஜேந்திர பிரபு. இவரது மகள் ஜோதிமலர் (28). இவர் பி.டெக் முடித்துவிட்டு பெங்களூரக் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
மாடலிங்கும் செய்து வருகிறார். அண்மையில் புனேவில் நடந்த மிஸ் டூரிஸம் அம்பாசிடர் ஹெரிடேஜ் இந்தியா 2025 போட்டியில் ஜோதிமலர் பங்கேற்றார். இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அதில் ஜோதிமலர் மிஸ் டூரிசம் அம்பாசிடர் ஹெரிடேஜ் இந்தியா 2025 பட்டத்தை வென்றார். இதைத் தொடர்ந்து வரும் நவம்பர் 28ஆம் தேதி தாய்லாந்தில் நடைபெறவுள்ள ஹெரிடேஜ் இன்டர்நேஷனல் 2025 அழகி போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொள்வதற்காக தேர்வாகியுள்ளார்.
இதுகுறித்து ஜோதிமலர் பேசுகையில் தாய்லாந்தில் சர்வதேச நாடுகளுக்கிடையே அமைதி, சுற்றுலா, கலாச்சார பரிமாற்றத்தை மேம்படுத்தும் நோக்கத்திற்காக மிஸ் ஹெரிடேஜ் போட்டி நடந்தது. இதில் இந்தியாவில் இருந்து நான் பங்கேற்றது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது.
சர்வதேச மேடையில் இந்தியாவின் பாரம்பரிய, வளமான கலாச்சாரம், மரபினை உலகுக்கு வெளிப்படுத்துவதற்கு கிடைத்த வாய்ப்பாகவே கருதி பெருமையடைகிறேன் என ஜோதிமலர் தெரிவித்துள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications