Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "FCRA ஒரு குரூரமான சட்டம். துப்பாக்கி முனையில் வீட்டுக்குள் வந்து கொள்ளையடிக்கும் சட்டம். கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களின் சொத்துகள் அரசுக்கு சென்று சேரும்படியாக FCRA சட்டம். ஏழைகள் பயன்பெறக்கூடாது என்பதற்காக கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்கும் வகையில் சட்டத்தை கொண்டு வந்துள்ளனர்" என திமுக எம்.பி. வில்சன் குற்றம்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள FCRA Bill எனப்படும் வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா பெரும் விவாதமாக மாறியுள்ளது. இந்த சட்டத்திருத்தம் சிறுபான்மையினர் நடத்தும் தொண்டு நிறுவனங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

FCRA is a Draconian Law DMK MP Wilson s Sharp Allegation

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக ராஜ்யசபா எம்.பியும், வழக்கறிஞருமான வில்சன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "வெளிநாடு ஒழுங்குமுறை நிதி உதவி திருத்த சட்டம் (FCRA) என்ற மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த சட்டத்தால் நாடே கொந்தளிப்பில் உள்ளது.

லைசன்ஸ் பெறாமல் அல்லது புதுப்பிக்கவில்லை என்றால் அல்லது ரத்து செய்தால் நிதி உதவி பெற்று கட்டப்பட்ட கட்டிடங்கள் அரசுக்கு சென்று சேரும் என இந்த திருத்தச் சட்டத்தில் கூறியுள்ளனர். மேலும் தொண்டு நிறுவனங்களின் உரிமம் எந்த நேரத்திலும் மத்திய அரசால் திரும்ப எடுத்துக்கொள்ள முடியும். இதன் மூலம் தொண்டு நிறுவனங்கள் நடத்திவரும் பள்ளி, கல்லூரி, மருத்துவமனை என எதுவாக இருந்தாலும் உரிமம் இல்லை என கூறி, அதனை அரசே எடுத்து கொள்ள முடியும்.
முன்னதாக ED வைத்து மிரட்டி பார்த்தார்கள். இப்போது திருத்தப்பட்ட சட்டத்தை இயற்றி உள்ளனர்.

தொண்டு நிறுவனங்களை கிறிஸ்துவர்கள் நடத்தி வருகிறார்கள். அதனால் எப்போது வேண்டுமாலும் அவர்கள் லைசன்ஸ் ரத்து செய்ய முடியும் என்கிற முறையில் கொடூரமான சட்டத்தை கொண்டுவரப் பார்க்கிறார்கள். துப்பாக்கி முனையில் வீட்டிற்குள் வந்து கொள்ளை அடிப்பது போன்றுதான் இந்தச் சட்டம் உள்ளது. நிலம் கைப்பற்றும் சட்டத்தில் போதிய கால அவகாசம் இருக்கும். ஆனால் இந்த திருத்தப்பட்ட சட்டத்தில் அப்படி இல்லை. அப்படிபட்ட கொடூரமான சட்டத்தை கொண்டு வந்துள்ளனர்.

கிறிஸ்துவர்களின் சொத்துகளை பிடுங்கப் பார்ப்பது எதனால் என்றால், அதனால் பயன் பெற்றவர்கள் அதிகம். அவர்கள் நடத்தும் தொண்டு நிறுவனம் மூலம் இன்று நல்ல இடத்திற்கு சென்றவர்கள் ஏராளமாக உள்ளனர். பழங்குடியின மக்களுக்கு கிறிஸ்துவ அமைப்புகள் தொண்டு நிறுவனங்கள் பல நன்மைகளை செய்து வருகிறது. 75 ஆண்டுகளாக கல்வியை பரப்பியதில் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. இந்தச் சட்டம் குறித்து பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். தொடக்கத்தில் இருந்தே இதற்கு கண்டனம் தெரிவித்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.

சிறுபான்மையினர் நடத்தும் கல்வி, மருத்துவமனை, ஆதரவற்றோர் இல்லங்களால் ஏழைகள், பட்டியல், பழங்குடியினர் பயன்பெறுகின்றனர். இஸ்லாமியர்களுக்கு வக்பு சட்டம் கொண்டு வந்து அவர்களின் சொத்துகளை அடித்து பிடுங்கினார்கள். அதே போல இந்த சட்டத்தை நிறைவேற்றினால் கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்தும் பாதிக்கும். இந்த சட்டத்தை அமல்படுத்தியதும் யார் யாருக்கு லைசன்ஸ் இல்லையோ அவர்களது சொத்துகள் ஒன்றிய அரசிடம் போய்விடும்.

மற்றவர்களிடம் இருத்து எப்படி கொள்ளை அடிப்பது என இப்படி செய்து வருகிறார்கள். கிறிஸ்துவர்கள் நடத்தும் தொண்டு நிறுவனத்திடம் என்ன தவறை நீங்கள் பார்த்தீர்கள்? தேசிய பாதுகாப்பு எனும் பெயரில் இந்த சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ள. சிறுபான்மையினர் நடத்தும் நிறுவனங்களால் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பது அபத்தமானது. சிறுபான்மையின அமைப்புகளுக்கு நிதி வழங்குவோரை அச்சுறுத்தும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்திய அரசின் சொத்துகள் இந்தியாவில் உள்ள இரண்டு பணக்காரர்களுக்கு தான் போய் கொண்டு உள்ளது. நாடாளுமன்றத்தில் தேர்தல் காரணமாக இதை பற்றி விவாதிக்கவில்லை. ஆனால் இதை கொண்டு வந்ததால் எப்போது வேண்டுமாலும் அவர்கள் இதனை நிறைவேற்ற முடியும். சிறுபான்மையினருக்கு எதிராக திட்டமிட்டு தாக்குதல் நடத்துகிறது மோடி அரசு.

கிறிஸ்துவர்களின் தவக்காலத்தில் இதனை செய்கிறார்கள். இந்த நேரத்தில் அவர்களது அவர்களது எண்ணம் ஜெபத்தை பாதிக்கும் வகையில் உள்ளது.
இந்த சட்டத்திருத்ததை எதிர்த்து திமுக போராடும். இது தொண்டு நிறுவனங்களோடு மட்டும் நிற்காது. இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்களின் சொத்துகளை பிடுங்க வழி வகை செய்யும் சட்டம். கொடூரமான FCRA சட்டத்திருத்தத்தை திரும்ப பெற வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+