ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை! அதிமுகவிற்கு பாஜக தரும் பதிலடி! தூண்டிலில் கொத்தாக சிக்கும் மீன்கள்?
அதிமுகவின் செயல்பாடுகளால் தமிழ்நாடு பாஜக தலைவர்கள் கடுமையாக அப்செட் ஆகி இருக்கிறார்களாம்.
சென்னை: பாஜகவில் இருந்து அதிமுக ஆட்களை தூக்கிய நிலையில், பதிலுக்கு பாஜகவும் அதிமுகவில் இருந்து ஆட்களை தூக்கும் திட்டத்தில் இருக்கிறதாம்.
அதிமுகவில் உட்கட்சி மோதல் நிலவி வருகிறது, கட்சி வரிசையாக 8 தேர்தல்களில் தோல்வி அடைந்து உள்ளது, இதுவரை இல்லாத மிக மோசமான நிலையில் அதிமுக உள்ளது.
இப்படிப்பட்ட அதிமுகவில் இருந்துதான் நிர்வாகிகள் வெளியேறி பாஜகவில் இணைவார்கள் என்று கருதப்பட்டது. அதாவது அதிமுக மூழ்கும் கப்பல் அதனால் பாஜகவில் சேர்ந்து விடுலாம் என்றுதான் பலரும் கட்சி மாறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

என்ன நடந்தது?
ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக பாஜகவில் இருந்து நிர்வாகிகள் வரிசையாக வெளியேற தொடங்கி உள்ளனர். பாஜகவில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறி தற்போது அதிமுகவில் இணைந்து வருகின்றனர். முக்கியமாக ஐடி விங் நிர்வாகிகள் வரிசையாக பாஜகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் ஐக்கியம் ஆகி வருகின்றனர். முதல் ஆளாக பாஜகவின் ஐடி விங் தலைவராக இருந்த நிர்மல் குமார் திடீரென பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார். அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்துவிட்டு அவர் அதிமுகவில் இணைந்தார். அண்ணாமலையின் தலைமையை மிக கடுமையாக நிர்மல் தாக்கி இருந்தார்.

என்ன சொன்னார்?
மேலும் அண்ணாமலையை விமர்சனம் செய்த திலீப் கண்ணனும் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து உள்ளார். இவர் அண்ணாமலையின் தலைமை தொடங்கி அமர் பிரசாத் ரெட்டி செயல்பாடு, வார் ரூம் செயல்பாடுகள் என்று பல விஷயங்களை பொதுவில் போட்டு உடைத்தார். இதை தொடர்ந்து OBC அணியின் மாநில செயலாளர் ஜோதி, முன்னாள் மாநில செயலாளர் கிருஷ்ணன், , திருச்சி புறநகர் மாவட்ட துணைத்தலைவர் விஜய் ஆகியோர் அதிமுக அலுவலகத்தில் குவிந்து எடப்பாடி முன்னிலையில் அதிமுகவில் இன்று இணைந்தனர். இந்த நிகழ்வில் எடப்பாடி மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டார்.

மேலும் மேலும் நிர்வாகிகள்
இது போக நேற்று லதா - பாஜக மாநில செயலாளர்,உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவு வைதேகி - பாஜக ஒன்றிய தலைவர் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு, தாம்பரம் ஆகியோர் பாஜகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்துள்ளனர்.இதை எதிர்த்து அண்ணாமலை, அமர் பிரசாத் கருத்து சொல்ல, அதற்கு ஜெயக்குமார் பதிலடி கொடுக்க என்று அதிமுக - பாஜக மோதல் உச்சம் தொட்டுள்ளது. இந்த மோதலில் கருத்து சொன்ன அண்ணாமலை, ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை இருக்கும். எங்களின் இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட தலைவர்கள் அங்கே சென்று கொண்டு இருக்கிறார்கள்.

மோசமான நிலை
அவர்களை திராவிட கட்சிகளும் ஏற்றுக்கொண்டு உள்ளன. எங்களின் வயசு என்ன? அவர்களின் வயசு என்ன? எங்களை நம்பி அவர்கள் இருக்கிறார்கள்.. நாங்கள் எத்தனை முறை ஆட்சியில் இருந்திருக்கிறோம். அவர்கள் எத்தனை முறை இருந்துள்ளனர். தமிழ்நாட்டில் நாங்கள் வளர்ந்து இருக்கிறோம் என்பதைத்தான் இது காட்டுகிறது. ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை இருக்கும், கட்சியில் இருந்து போனால் தான் புதியவர்களுக்கு பொறுப்பு தர முடியும். அப்படித்தான் புதிய தலைவர்களுக்கு பதவி அளிக்க முடியும். நான் தோசை சுடவே, இட்லி சுடவே வரவில்லை. நான் அரசியல் செய்ய வந்து இருக்கிறேன். பாஜகவை முன்னேற்ற வந்து இருக்கிறேன். அதை செய்வேன். கலைஞர்.. அம்மா போல முடிவு எடுப்பேன். நான் தலைவன், என்றார்.

பாஜக
இந்த நிலையில்தான் அதிமுகவில் இருந்து மாஜி ஒருவரின் தலைமையிலான டீமை பாஜக தங்கள் பக்கம் இழுக்க திட்டமிட்டுள்ளதாம். பாஜகவில் இருந்து அதிமுக ஆட்களை தூக்கிய நிலையில், பதிலுக்கு பாஜகவும் அதிமுகவில் இருந்து ஆட்களை தூக்கும் திட்டத்தில் இருக்கிறதாம். அதிமுகவில் இருக்கும் மாஜி ஒருவர் தீவிர ஆர்எஸ்எஸ் கொள்கை கொண்டவர். ஏற்கனவே பாஜகவில் இருந்தவர். அதிமுகவில் அவர் இப்போது மிகவும் அமைதியாகவே இருக்கிறார். அவர்தான் விரைவில் பாஜக பக்கம் தாவ வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அவருடன் சேர்த்து பல மீன்கள் பாஜகவில் தூண்டிலில் சிக்க வாய்ப்பு உள்ளதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications