மொத்த உலகமே ஒரே விஷயத்தை தேடி இருக்கு! மெய் சிலிர்த்து போன சுந்தர் பிச்சை.. கூகுளில் என்ன நடந்தது?
சென்னை: உலகம் முழுக்க நேற்று இரவு மக்கள் எல்லோரும் ஒரே விஷயத்தை தேடி இருப்பதாக கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
2024 ஃபிபா உலகக் கோப்பை கொண்டாட்டமாக நடந்து முடிந்துள்ளது. கடைசி உலகக் கோப்பையில் நிறைவேறிய மெஸ்ஸியின் கனவு, எம்பாமே போட்ட 4 கோல்கள், சூட் அவுட் வரை சென்ற ஆட்டம் என்று பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் நேற்றைய இறுதி போட்டி நடந்துள்ளது.
கடைசி நிமிடம் இரண்டு அணிகளும் 2 கோல் என்ற நிலையில் சமனில் இருக்க.. 30 நிமிடம் எக்ஸ்ட்ரா டைம் கொடுத்து.. அதில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் போட ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட் வரை சென்றது.

பெனால்டி
பெனால்டியில் அர்ஜென்டினா வரிசையாக 4 கோல்களை போட, பிரான்ஸ் 2 கோல் மட்டுமே போட்டது. இதனால் அர்ஜெடினா அணி வெற்றிபெற்று சாம்பியன் ஆனது. 36 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜென்டினா அணி கோப்பையை வென்று மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. மெஸ்ஸி 35 ஆண்டுகளுக்கு முன் பிறந்தார். அதாவது மரடோனா தலைமையில் கடைசியில் அர்ஜென்டினா கோப்பையை வென்ற அதே வருடம்தான் மெஸ்ஸி பிறந்தார். இப்போது அவர் தனது கடைசி கால்பந்து தொடரில் தந்து நாட்டிற்கு கோப்பையை பெற்றுக்கொடுத்து உள்ளார்.

உலகம் முழுக்க
நேற்று கிட்டத்தட்ட உலகமே இந்த போட்டியைத்தான் பார்த்தது என்று சொல்லும் அளவிற்கு பல நாடுகளில் மக்கள் இந்த மேட்சை பார்த்துக்கொண்டு இருந்தனர். கிரிக்கெட், பேஸ்கெட் பால், பேஸ்பால் போன்ற ஆட்டங்களுக்கு அதிக அளவு ரசிகர்கள் இருந்தாலும், அவர்கள் எல்லாம் ஒரு பிராந்தியத்திற்குள்தான் இருக்கிறார்கள். குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே இந்த போட்டிகளுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் கால்பந்து போட்டிக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள்.

தேடல்
அதிலும் நேற்று நடந்தது பைனல் மேட்ச் என்பதால் டிவி, போன், கணினி, ஸ்பெஷல் ஸ்க்ரீனிங் என்று உலகம் முழுக்க ரசிகர்கள் இந்த ஒரு போட்டியைத்தான் பார்த்து கொண்டு இருந்தனர். மெஸ்ஸியின் தீவிர ரசிகர்கள், எம்பாபேவை தங்களின் ஆஸ்தான ஹீரோவாக்கிக்கொண்டவர்கள், பிரான்ஸ் மீண்டும் கோப்பையை வெல்லாதா என்று காத்து இருந்தவர்கள், மரடோனா சாதனையை மெஸ்ஸி மீண்டும் செய்ய மாட்டாரா என்று காத்திருந்தவர்கள் என்று எல்லோரும் திரை முன் அமர்ந்து இந்த மேட்சைத்தான் பார்த்துக்கொண்டு இருந்தனர்.

சுந்தர் பிச்சை
அதிலும் ஆட்டம் கடைசி நொடி வரை விறுவிறுப்பாக சென்றதால், உலகக் கோப்பை இறுதிப்போட்டிகளில் நடந்த மிக சிறப்பான ஆட்டமாக இது பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் நேற்று ஆட்டம் முடிந்தும் மக்கள் பலர் இந்த போட்டி குறித்து கூகுளில் தேடி உள்ளனர். மெஸ்ஸியின் வாழ்க்கை வரலாறு, நேற்று மேட்சில் அடித்த கோல்கள், எம்பாபே யார்? எம்பாபே அடித்த கோல்கள், நேற்று நடந்த போட்டியின் ஸ்கோர் விவரம், லைவ் ஸ்கோர், வீடியோ, இமேஜ் இப்படி பல விஷயங்களை உலகம் முழுக்க நெட்டிசன்கள் கூகுளில் தேடி உள்ளனர்.

ரெக்கார்ட்
இந்த நிலையில்தான் உலகம் முழுக்க நேற்று இரவு மக்கள் எல்லோரும் ஒரே விஷயத்தை தேடி இருப்பதாக கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். #FIFAWorldCup இன் இறுதிப் போட்டியின் போது கூகுள் தேடல் 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமான ட்ராஃபிக்கைப் பதிவுசெய்தது, இது முழு உலகமும் ஒன்றைப் பற்றித் தேடுவது போல் இருந்தது, என்று தெரிவித்து உள்ளார். உலகில் இதற்கு முன் கடந்த 25 வருடங்களில் இவ்வளவு பெரிய அளவில் மக்கள் எதை பற்றியும் தேடியது இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications