பெரும் போர்.. கத்தாரை நோக்கி டேக் ஆப் ஆன அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஜெட்கள்.. டார்கெட் ஈரான்
நியூயார்க்: கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸின் போர் விமானங்கள் பாரசீக வளைகுடாவில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.
இவற்றில் சில கத்தார் நோக்கி விரைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த போர் பல தரப்பு மோதலாக உருவெடுக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
அமெரிக்க போர் விமானங்கள் பதிலடிக்குத் தயார்நிலை
சற்று நேரத்திற்கு சவுதி அரேபியாவில் உள்ள இளவரசர் சுல்தான் விமான தளத்திலிருந்து அமெரிக்க போர் விமானங்கள் புறப்பட்டன. இது அமெரிக்க ராணுவத்தின் பதிலடி நடவடிக்கைக்கான தொடக்கத்தைக் குறிக்கிறது. வான்வெளியில் போர் விமானங்கள் செல்வதை நேரில் பார்த்தவர்கள், இது ஒரு பெரிய மோதலாக மாறக்கூடும் என்று கவலை தெரிவித்து உள்ளனர்

அமெரிக்காவின் பதில் நடவடிக்கை ஏற்கனவே உறுதியாகிவிட்டது. ஈரான், கத்தாரில் உள்ள அல் உடாய்ட் விமானத் தளம் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க தளத்தின் மீது ஏவுகணைகளை ஏவி உள்ளது.
"பஷாரத் அல்-ஃபத்" என்ற பெயரில் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஈரான் ஏவி உள்ளது. பிராந்தியத்தில் உள்ள மிகப்பெரிய அமெரிக்க ராணுவ நிறுவங்களில் ஒன்றான கத்தாரில் உள்ள அல் உடேத் விமானத் தளம் உட்பட பல தளங்களை குறிவைத்து ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளது.
கத்தார் மீது 5 ஏவுகணைகளும், ஈராக் மீது ஒரு ஏவுகணையும் ஏவப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல்கள் இரண்டுமே அந்த நாடுகளில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகளை இலக்காகக் கொண்டவை என்று கூறப்படுகிறது. ஈரான் மொத்தம் ஆறு ஏவுகணைகளை கத்தார் மீதும், ஒரு ஏவுகணையை ஈராக் மீதும் அமெரிக்க இராணுவ உள்கட்டமைப்புகளை குறிவைத்து ஏவியது. இந்த ஏவுகணை தாக்குதல்களால் கத்தார் தனது வான்வெளியை மூடியது. மேலும் கத்தாரில் உள்ள அமெரிக்க குடிமக்கள் உடனடியாக தாழ்வான தங்குமிடத்திற்கு செல்லுமாறு அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
பாரசீக வளைகுடா முழுவதும் ஜிபிஎஸ் ஜாம்மிங் இருப்பதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் விமானங்கள் மற்றும் கப்பல்கள் வழிசெலுத்தலில் சிரமங்களை எதிர்கொள்கின்றன. இப்பகுதி தற்போது அதிக எச்சரிக்கையுடன் கண்காணிப்பட்டு வருகிறது.
அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் போர் விமானங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருப்பது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. இது பிராந்தியத்தில் பாதுகாப்பற்ற சூழ்நிலையை தீவிரப்படுத்துகிறது. இந்த சூழ்நிலையில், அமெரிக்க போர் விமானங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டது பதற்றத்தை அதிகப்படுத்தியது. இப்பகுதியில் விரைவில் மோதல் ஏற்படும் அபாயம் உள்ளது என்பது தெளிவாகிறது.
அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடி
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இஸ்ரேல் கோரிக்கையை ஏற்று ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது. ஈரான் நாட்டில் உள்ள 3 அணு மையங்கள் மீது தாக்குதல் நடத்தியதை அதிபர் டிரம்ப் உறுதி செய்தார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய மூன்று அணு அமைப்புகள் மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்தி முடிக்கப்பட்டது என்று குறிப்பிட்டார்.
டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், "ஈரானில் உள்ள மூன்று அணு sites மீது நாங்கள் வெற்றிகரமாக தாக்குதல் நடத்தி முடித்துவிட்டோம். ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய இடங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டது. அனைத்து விமானங்களும் தற்போது ஈரான் வான்வெளியை விட்டு வெளியேறிவிட்டன.
ஃபோர்டோவில் உள்ள முக்கியமான தளத்தில் முழு அளவிலான வெடிகுண்டுகள் வீசப்பட்டன. அனைத்து விமானங்களும் பத்திரமாக திரும்புகின்றன. இந்த சாதனையை நிகழ்த்திய அமெரிக்க வீரர்களுக்கு எனது வாழ்த்துகள். உலகில் இதை செய்யக்கூடிய ராணுவம் வேறு எந்த நாட்டிலும் இல்லை. அமைதிக்கு இதுவே சரியான நேரம்! இந்த விஷயத்தில் நீங்கள் காட்டிய கவனத்திற்கு நன்றி" என்று கூறியுள்ளார். இதற்குத்தான் ஈரான் தற்போது பதிலடி கொடுத்து வருகிறது.
-
குவைத் ஏர்போர்ட் தாக்குதல்.. அமெரிக்காவின் தவறு! ஈரான் பரபர குற்றச்சாட்டு.. மறுக்கும் டிரம்ப்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications