பொசுக்குனு மணமகளுக்கு முத்தம் தந்த மாப்ளை.. குறுக்கே வந்த புரோகிதர்.. எல்லாமே ஏடாகூடமாக போயிருச்சு
சென்னை: திருமண விழாக்கள் என்பவை வெறும் சடங்குகளின் தொகுப்பாக மட்டும் பார்க்கப்படுவதில்லை.. இரு மனங்கள் இணையும் உணர்ச்சிகரமான கொண்டாட்டமாகவே அவை காலங்காலமாக பார்க்கப்பட்டு வருகின்றன... அதிலும் இன்றைய இளைய தலைமுறையினர் தங்கள் வாழ்வின் மிக முக்கியமான இந்த நாளை மிக அழகாகவும், சினிமா தனமாகவும் மாற்ற பல புதிய முயற்சிகளை செய்கின்றனர். அப்படித்தான் ஒரு திருமண ஜோடி செய்ய போக, ஏடாகூடமாக சிக்கிவிட்டார்கள்..
வட மாநில திருமணங்கள் என்றாலே சடங்குகள் அதிகமாக இருக்கும்.. திருமண மேடைக்கு மணமகள் நடந்து வரும்போது இசை முழங்க, மலர்கள் தூவுவார்கள்.. அப்படித்தான் உத்தர பிரதேசத்தில் ஒரு மணமகளுக்கு அலங்காரங்கள் தயாராகின..

மணமகளும் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு மேடையை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது மேடையில் உட்கார்ந்திருந்த மணமகன், மணமகள் மணமேடையை நோக்கி வருவதை பார்த்ததுமே உணர்ச்சிவசப்பட்டு விட்டார்.. உடனே தனது வருங்கால மனைவிக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில், இருக்கையிலிருந்து எழுந்து மணமகளை நோக்கி ஓடினார்..
கன்னத்தில் முத்தம் தந்த மணமகன்
அவர் வரும் பாதையின் நடுவே மண்டியிட்டார்.. கையில் ஒரு பூங்கொத்துடன் மணமகளை வரவேற்றார்.. மண்டபத்தில் இருந்த அத்தனை பேரும் இதை பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கினர்.. மணமகளும் இந்தச் செயலால் நெகிழ்ந்து போனார்.
இத்துடன் நின்றிருந்தால் பரவாயில்லை.. உச்சக்கட்டமாக மணமகன் மணமகளை அன்புடன் தழுவிக்கொண்டு, அவருடைய கன்னத்தில் முத்தம் தந்தார்.. இதை பார்த்ததுமே மணமக்களின் உறவினர்களும் நண்பர்களும் உற்சாகமாக ஆரவாரம் செய்து கைதட்டினார்கள்.. உடனே அந்த ஜோடி மீண்டும் நெருக்கமாக முயன்றது..
கடுப்பான புரோகிதர்
ஆனால், மணமேடையில் திருமண சடங்குகளை சீரியஸாக செய்துகொண்டிருந்த புரோகிதர், இதை பார்த்ததுமே அதிர்ச்சி அடைந்தார். மணமக்கள் இப்படி வெளிப்படையாக கட்டி தழுவிக்கொண்டு முத்தமிட்டதை பார்த்து கடும் அதிருப்தி அடைந்தார்.
கொஞ்சமும் தாமதிக்காமல் அவர் இருவருக்கும் இடையே வந்து அவர்களை பிரித்து நிறுத்தினார்... பாரம்பரியமான ஒரு சடங்கு நடக்கும் இடத்தில் இப்படித்தான் நடந்து கொள்வதா? இது கலாச்சாரத்திற்கு எதிரானது என்று சத்தம் போட்டார்..
எலும்பு துண்டு
அதுமட்டுமல்லாமல், மணமக்களின் இந்த நெருக்கமான தருணத்தை படம்பிடித்துக் கொண்டிருந்த போட்டோ, வீடியோகிராபர்களை எல்லாம் பார்த்து, கேமராவை உடனடியாக நிறுத்துங்கள், வீடியோ எடுக்காதீங்க, போட்டோ எடுக்காதீங்க என்று கோபத்துடன் சொன்னார்.. இதனால் அந்த இடமே ஒரு நிமிடம் அமைதியானது. அழகான அந்த ஒரு நிமிட ரொமாண்டிக் தருணம், திடீரென ஒரு சங்கடமான சூழலாக மாறியது.
ஆனால் மணமகளுக்கு முத்தம் தந்தது முதல் புரோகிதர் சத்தம் போட்டதுவரை அனைத்தையும் படம் பிடித்துவிட்டார்கள் வீடியோகிராபர்கள்.. இந்த வீடியோவை மணமகளே சோஷியல் மீடியாவில் ஷேர் செய்துள்ளார்..
அதில் எங்களின் அழகான தருணத்தை கெடுத்த அந்த புரோகிதரை ""கபாப் மே ஹட்டி" (Kabab Mein Haddi) இனிப்பான கபாப் துண்டிற்குள் சிக்கிய தேவையில்லாத எலும்பைப் போல, தங்களின் மகிழ்ச்சியான தருணத்தை இந்தப் புரோகிதர் வந்து பாழாக்கிவிட்டார் என்று கமெண்ட்டையும் மணமகள் பதிவிட்டுள்ளார்..
அதாவது சாப்பாட்டை ருசித்து சாப்பிட்டு கொண்டிருக்கும்போது, திடீரென வாயில் கல் சிக்கிவிட்டால் எப்படி இருக்குமோ, அந்த அர்த்தத்தில் மணமகள் பதிவிட்டுள்ளார்..
மணமகளுக்கு ஆதரவு
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவிட்டது. இது இணையதள வாசிகள் மத்தியில் ஒரு பெரிய விவாதத்தையே கிளப்பி விட்டுள்ளது..
ஒரு தரப்பினர் மணமக்களுக்கு ஆதரவாக பேசும்போது, திருமணமே அந்த இருவருக்கானதுதான், அதில் அவர்கள் அன்பை வெளிப்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லையே.. புரோகிதர் தேவையில்லாமல் அந்த ஜோடியின் மகிழ்ச்சியில் தலையிட்டு ஒரு கசப்பான நினைவை உருவாக்கிவிட்டார் என்று கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்..
புரோகிதருக்கு சப்போர்ட்
மேலும் சிலர், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் புரோகிதரின் செயலை நியாயப்படுத்தி வருகிறார்கள்..
திருமண மேடை என்பது புனிதமான சடங்குகள் நடைபெறும் இடம், அங்கு ஒரு ஒழுக்கமும் கண்ணியமும் பேணப்பட வேண்டும்.. மேலைநாட்டுக் கலாச்சாரத்தை பின்பற்றி பொது இடங்களில் முத்தமிடுவது போன்ற செயல்கள் இந்திய திருமண முறைகளுக்குப் பொருத்தமற்றவை.. சடங்குகள் தொடங்குவதற்கு முன்பே இத்தகைய அத்துமீறல்கள் இருக்கக்கூடாது என்று புரோகிதருக்கு சப்போர்ட் செய்து வருகிறார்கள்..
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications