நல்ல மனநல மருத்துவரை பாருங்க சுமந்த் ராமன்.. குணமாகிரும்.. விளாசிய பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
சென்னை: நல்ல மனநல மருத்துவரை பரிந்துரைக்கிறேன், நீங்கள் விரைவில் குணமடைவீர்கள் என்று நம்புகிறேன் என்று, அரசியல் விமர்சகர் சுமந்த் சி.ராமனுக்கு காட்டமாக பதிலளித்துள்ளார் தமிழக நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், தமிழக நிதித் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்காத நிலையில், பாஜக, அதிமுக மற்றும் பிற தமிழக எதிர்க்கட்சி ஆதரவாளர்களால் சமூக வலைத்தளங்களில் விமர்சனமாக முன் வைக்கப்பட்டு வருகிறது.
ஆனால், 17ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறும் நிலையில், தாமதமாகத்தான் தனக்கு மத்திய அரசு தரப்பு தகவல் அளித்ததாகவும், மீட்டிங்கில் பேச வேண்டிய அஜென்டாவும் அதை விட தாமதமாக தரப்பட்டதாகவும், எனவேதான் ஜிஎஸ்டி கவுன்சிலிங் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றும், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்தார்.

பிடிஆர் பேட்டி
மேலும் தனது செய்தியாளர் பேட்டியின்போது, ஏற்கனவே பல நிகழ்ச்சிகளுக்கு ஒப்புக்கொண்ட நிலையில் தாமதமாக ஜிஎஸ்டி கவுன்சில் தொடர்பான விஷயங்களை தெரிவித்ததாக விமர்சனம் செய்தார். இப்போது கூட நேரா ஒரு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு போக வேண்டியுள்ளது என்றும் தனது பேட்டியில் பிடிஆர் தெரிவித்தார்.

போலி செய்திகள்
அதேநேரம், பிடிஆர் பேட்டி அம்சங்களை வைத்து போலியான செய்திகள் சமூக வலைத்தளங்களில் உலவ விடப்பட்டன. பிடிஆர் தனது கொளுந்தியார் மகள் பூப்புனித விழாவில் பங்கேற்க, சென்றதால் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று பேட்டியளித்ததாக போலி செய்திகள் பரவின.

பாஜக பெண்மணிக்கு திட்டு
பாஜகவை சேர்ந்த ஒரு பெண்மணி இவ்வாறு ஒரு போட்டோஷாப் புகைப்படத்தை ஷேர் செய்த நிலையில், மாட்டு சிறுநீர் குடிப்பதால் மூளை கெட்டு விட்டதா என்று கடுமையாக கேள்வி எழுப்பியிருந்தார்.
Recommended Video

சுமந்த் ராமன்
இந்த நிலையில்தான், அரசியல் விமர்சகரும், மருத்துவருமான சுமந்த் சி.ராமன், வெளியிட்ட ஒரு ட்வீட்டுக்கும் காட்டமாக பதிலளித்துள்ளார் பிடிஆர். இதே ஜிஎஸ்டி விவகாரம் தொடர்பாக ஒரு நெட்டிசன் வெளியிட்ட ட்விட்டர் பதிவுக்கு, ஆம்.. ஒரு சந்தேகமும் தேவையில்லை என்று சுமந்த் ராமன் பதிலளித்திருந்தார்.

மனநல மருத்துவர்
இதை ரீட்வீட் செய்துள்ள பிடிஆர், நண்பா... முகமற்ற அக்கவுண்ட்களில் இருந்து, பொய்களை அடிப்படையாகக் கொண்ட கற்பனையான அறிக்கைகளுக்கு நீங்கள் பதிலளிக்கும் அளவுக்கு நீங்கள் மிகவும் தாழ்ந்துவிட்டீர்களா? நான் உங்களுக்கு ஒரு நல்ல மனநல மருத்துவரை பரிந்துரைக்கிறேன். நீங்கள் விரைவில் குணமடைவீர்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தொடரும் பதிலடிகள்
இதனிடையே மேலும் ஒரு ட்வீட்டில், பாஜக பெண்மணிக்கு பதிலடி கொடுத்துள்ளார் பிடிஆர். அவர் கூறுகையில், ஒன்றுக்கொன்று முரண்பாடான 2 பொய்களை சொல்ற முட்டாள்களே, நான் கூட்டத்திற்கு செல்லாதது இல்லாத விழாவிற்காகவா?
அல்லது நான் எப்போதும் புறக்கணிக்கும் தனிவிமானம் இல்லாததாலா? கூட்டம் டெல்லியிலா? லக்னோவிலா? அநாகரீகமாக எனது மனைவியை பற்றி பேசுவதை நிறுத்திக்கொள், மாட்டுச்சாண மூளை கொண்டவரே, இவ்வாறு பிடிஆர் காரசாரமாக பதிலடி கொடுத்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications