Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆம்னி பேருந்துகளில் கட்டணக் கொள்ளை.. இனி அதிரடி நடவடிக்கை தான்.. எச்சரிக்கும் அமைச்சர் சிவசங்கர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விடுமுறை நாட்களில் அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.11,400 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Pink busல Udhayanidhi | மகளிருக்கு முதல்வரின் புதிய GIFT *Politics | | Oneindia Tamil

    வார விடுமுறை மற்றும் சுதந்திர தினம் காரணமாக தொடர்ந்து அரசு விடுமுறை என்பதால் பொதுமக்கள் பலர் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு தனியார் பேருந்துகளில் சென்றனர். அப்போது ஆம்னி பேருந்துகளின் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனைத்தொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகள் திடீர் சோதனை ஈடுபட்டனர்.

    அதுமட்டுமல்லாமல் அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரித்தார். அத்துடன் அதிக கட்டணம் வசூலித்த பேருந்துகளில் கூடுதல் கட்டணத்தை பயணிகளிடம் திருப்பிக் கொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து திங்கள் விடுமுறை முடிந்து சென்னையை நோக்கி மக்கள் படையெடுத்த நிலையிலும் மீண்டும் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது.

    அமைச்சர் சிவசங்கர் பேச்சு

    அமைச்சர் சிவசங்கர் பேச்சு

    ஒவ்வொரு முறை வார இறுதி நாட்களிலும், தொடர் விடுமுறையின் போதும் ஆம்னி பேருந்துகளின் கட்டணங்கள் உயர்த்தப்படுவதாகவும், இதற்கு மொத்தமாக முடிவு கட்ட வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், தொடர் விடுமுறை இருந்த நேரத்தில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனைத்தொடர்ந்து, ஆணையர், துணை ஆணையர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்ட அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டனர்.

    அபராதம் விதிப்பு

    அபராதம் விதிப்பு

    அதில் 953 ஆம்னி பேருந்துகளுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கூடுதலாக கட்டணம் வசூலித்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், 97 பேருக்கு வசூலிக்கப்பட்ட கட்டணங்கள் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. அப்படி திருப்பி வழங்கிய தொகை ரூ.68,800 ஆகும். அதில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 4 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.11 லட்சத்து 4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    ஆலோசனை கூட்டம்

    ஆலோசனை கூட்டம்

    இதேபோல் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆம்னி பேருந்து கட்டணம் உயர்வு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு முறையும் இந்த பிரச்னை ஏற்படாமல் இருக்க, உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பண்டிகைக்கால விடுமுறைகளின் போது எப்படி கையாளலாம் என்று ஆலோசிக்கப்பட்டது.

    அதேபோல் தொடர்ந்து ஒவ்வொரு வட்டாரத்திலும் ஆம்னி பேருந்துகளிலும் போக்குவரத்து துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபடுவார்கள். ஒவ்வொரு விடுமுறை நாட்களின் போதும் அரசு சார்பில் அதிக பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஆம்னி பேருந்துகள் ஒப்பந்தங்களின் படி செயல்படுவதால், கட்டணங்கள் தேவைக்கு ஏற்ப மாற்றி வருகிறார்கள். இதனை தொடர் செயல்பாடுகளின் வழியாகவே மாற்றி வருகிறோம்.

     தீபாவளிக்குள் நடவடிக்கை

    தீபாவளிக்குள் நடவடிக்கை

    கூடுதல் கட்டணம் வழங்கி முன்பதிவு செய்யும் பொதுமக்கள், அரசிடம் புகார் அளிக்க வேண்டும். விரைவில் ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளோம். தீபாவளிக்குள் அதற்கான நடவடிக்கை முழுமையடையும் என்று தெரிவித்தார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+