‛‛ஜாமீன் கூட கிடைக்காது’’.. சவுக்கு சங்கர் மீது 4 பிரிவுகளில் பாய்ந்த வழக்கு! விரைவில் கைது? பின்னணி
சென்னை: பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர் மீது கொலை மிரட்டல் உள்பட 4 பிரிவுகளில் தமிழக போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் அவர் பங்கேற்று பேசிய நிலையில் ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர் விரைவில் கைது செய்யப்படுகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக அரசை தொடர்ந்து விமர்சனம் செய்து வருபவர் சவுக்கு சங்கர். அரசியல் விமர்சகரான இவர் பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து வருகிறார். இந்த வேளைகளில் தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். மேலும் முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்து வருகிறார்.

இந்நிலையில் தான் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து அந்த பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இந்த போராட்டம் என்பது ஓராண்டுகளை கடந்தும் தொடர்ந்து நடந்து வருகிறது. தமிழக அரசு விமான நிலையம் அமைக்க உறுதியாக உள்ள நிலையில் அதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது தான் தொடர் போராட்டத்துக்கு காரணமாக உள்ளது.
இந்நிலையில் தான் கடந்த 26ம் தேதி விமான நிலைய எதிர்ப்பு குழு சார்பில் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடக்கோரி உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்க அழைப்பு வந்த நிலையில் அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக இந்த போராட்டத்தில் பங்கேற்க சென்ற சவுக்கு சங்கருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அதாவது இந்த போராட்டத்தில் தனிநபராக மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் சவுக்கு சங்கர் கூடுதலாக சிலருடன் அங்கு கார்களில் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். அந்த சமயத்தில் இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பிறகு சவுக்கு சங்கர் போராட்டத்தில் பங்கேற்றார்.

இந்நிலையில் தான் சவுக்கு சங்கர் மீது 4 பிரிவுகளில் சுங்குவார்சத்திரம் போலீசார் அதிரடியாக வழக்குப்திவு செய்துள்ளனர். அதில் ஒன்று ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவாக உள்ளது.அதாவது சவுக்கு சங்கர் மீது சட்டப்பிரிவு 147 (கலவரம் செய்தல்), 294 பி (அவதூறு பரப்புதல்), 506 (1) (கொலை மிரட்டல்), 353 (அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் 506 (1) என்ற கொலை மிரட்டல் என்பது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்காகும். இதனால் விரைவில் சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்ய உள்ளனரா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications