அன்று நடந்த சம்பவம்.. இந்திய வரலாற்றில் முதல்முறை.. 2 "ரேடார்களை" வாங்கும் தமிழ்நாடு! என்ன காரணம்?
சென்னை: தமிழ்நாட்டின் வானிலையை கணிப்பதற்காக ரேடார் கருவிகள் மற்றும் சூப்பர் கம்ப்யூட்டரை வாங்குவதாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பிற்கு பின் பல்வேறு முக்கியமான கரணங்கள் உள்ளன.
தமிழ்நாட்டின் 2022-23 ஆண்டிற்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மூலம் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
பல்வேறு துறைகளில் பல முக்கியமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதில் வானிலை தொடர்பாக பிடிஆர் வெளியிட்ட அறிவிப்புகள் அதிகம் கவனம் பெற்றன.

வானிலை அறிவிப்பு
அதன்படி தமிழ்நாட்டில் வானிலையை கணிப்பதற்கு ரேடார் கருவிகளை வாங்குவதாக அரசு அறிவித்துள்ளது. அதிலும் ஒன்றல்ல இரண்டு ரேடார் கருவிகளை வாங்குவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு வானிலையை துல்லியமாக கணிக்க சூப்பர் கம்ப்யூட்டர் வாங்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் வானிலையை கணிக்க, மேக கூட்டங்களை கண்காணிக்க பலூன் அமைப்பும் வாங்கப்பட உள்ளது. இதெல்லாம் போக தமிழ்நாடு முழுக்க 400 மழை மானிகள் மழையை அளவிட தயாராக வைக்கப்பட உள்ளன.

வேறு என்ன வசதி
அதோடு தமிழ்நாடு முழுக்க 100 தானியங்கி வானிலை மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இவை எல்லை வேகமாக, துல்லியமாக மழையை கணிக்க உதவும். அதோடு இதில் பெறப்படும் டேட்டா சென்னை வானிலை மையத்திற்கு அனுப்பப்பட்டு உடனுக்குடன் தகவல்கள் வெளியாகும். இதற்காக மொத்தமாக 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டியது ஒரு மாநில அரசு வானிலை கணிப்பிற்காக ரேடார் அமைப்பது இதுவே முதல்முறை ஆகும்.

கணிப்பு பொய்த்தது
கடந்த டிசம்பர் மாதம் 30ம் தேதி சென்னையில் பேய் மழை பெய்தது. இதனால் புத்தாண்டிற்கு முதல்நாள் மிகப்பெரிய வெள்ளம் சென்னையில் ஏற்பட்டது. மேக வெடிப்பு என்று சொல்வதற்கு இணையாக சென்னையில் மழை பெய்தது. ஆனாலும் வானிலை மையம் இதை மேக வெடிப்பு என்று வரையறுக்கவில்லை. பல இடங்களில் 200 மிமீ மழை பெய்தது. இதை அப்போது எந்த வானிலை ரீடர்களும் கணிக்க முடியவில்லை.

பொய்யான வானிலை
அதற்கு முன் நவம்பர் மாதம் முதல் வாரம் தமிழ்நாட்டில் நல்ல மழை பெய்தது. ஆனால் அதையும் அப்போது வானிலை மையம் சரியாக கணிக்க முடியவில்லை. அப்போது தமிழ்நாட்டில் இரண்டு முக்கியமான ரேடார்கள் தற்போது செயல் இழந்து இருந்தது. காரைக்கால், சென்னையில் இருக்கும் வானிலை ஆய்வு மைய ரேடார்கள் செயல் இழந்து இருந்தனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த ரேடார்கள் அப்போது வேலை செய்யவில்லை. இதுதான் தமிழ்நாடு வானிலையை கணிக்க உதவும்.

கணிப்புகள் எப்படி?
நிகழ்கால வானிலையை கணிக்க இந்த ரேடார்கள்தான் உதவும். இரண்டும் வேலை செய்யாத காரணத்தால் வானிலையை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ரேடார்கள் மூலம் வடமாவட்டங்களின்சென்னை வானிலை மையம் கணிப்புகளை வெளியிட்டு வந்தது. அதன்பின் இந்த ரேடார்கள் சரி செய்யப்பட்டாலும் இதில் இருந்து கணிப்புகளை பெறுவதில் சில சிக்கல்கள் உள்ளன. தற்போது காலநிலை மாற்றம் காரணமாக அடிக்கடி பருவம் மாறி மழை பெய்கிறது.

காலநிலை மாற்றம்
திடீர் திடீரென பருவம் மாறி மழை பெய்கிறது. அதேபோல் பருவம் மாறி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. திடீரென கனமழை பெய்கிறது. இதனால் ஸ்ரீஹரிகோட்டா ரேடாரை நம்பி இல்லாமல் தமிழ்நாடு சுயமாக ரேடார் மற்றும் வானிலை கருவிகளை வாங்க வேண்டும். கடலோரத்தில் இருப்பதால் இது மிக அவசியம். இதை கருத்தில் கொண்டே தமிழ்நாடு அரசு இப்போது 2 ரேடார்கள் உட்பட பல வானிலை கருவிகளை வாங்கி உள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications