Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஃபுல் பவர்".. 360 டிகிரி சுழலுதே கேமரா.. சென்னையில் வெறும் 12 நாட்களில் 3948 "சம்பவம்" நடத்திய போலீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த 12 நாட்களில் மட்டும் மொத்தம் 3,948 வழக்குகள் பதிவாகி உள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.. இதற்கு காரணம், ரேடார் வாகனங்கள்தான்..!
தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் நிகழாத வகையிலும், அவைகளை தடுக்கும் வகையிலும், கண்காணிப்பு கேமராக்கள் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் மூலம் பல்வேறு குற்ற செயல்களும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் குற்றவாளிகளும் கைதாகி உள்ளனர்.

கேமராக்கள்: இந்த கேமரா இருப்பதாலேயே, குற்றங்களில் அவ்வளவாக ஈடுபடாமல் நழுவி செல்லும் ஆசாமிகளும் உண்டு. குற்றங்களை விரைவாகக் கண்டறியவும், வழக்கு தொடர சிறந்த ஆதாரங்களைவும் இந்த கேமராக்கள் திகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்த கேமரா ஆங்காங்கே உள்ளதால்தான், பெண்கள், குழந்தைகளுக்கு பொது இடங்களில் பாதுகாப்பு உணர்வும் கிடைக்கிறது..

First introduce in tamil nadu and chennai police says 3948 cases registered in 12 days radar vehicles patro

கேமரா வசதி: இப்போதைக்கு சென்னையில் 62,351 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன என்றாலும், மேலும் 2,730 இடங்களில் 8,189 சிசிடிவி கேமராக்கள் பொருத்த சென்னை போலீசார் திட்டமிட்டனர். அந்தவகையில், விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களை, கண்டுபிடித்து அபராதம் விதிக்க 360 டிகிரியில் சுழலும் அதிநவீன ஏஎன்பிஆர் கேமரா வசதியுடன் கூடிய 2டி ரேடார் அமைப்புள்ள வாகனத்தை சென்னை போக்குவரத்து காவல்துறை அமல்படுத்தி உள்ளனர்.

கடந்த மே மாதம் 31-ம் தேதி காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இதனை தொடங்கி வைத்தார். 4 சக்கர, இருசக்கர ரோந்து வாகனங்கள் GPS கருவியுடன் இணைக்கப்பட்டு, இக்கட்டுப்பாட்டறையில், கண்காணிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.. இதன்மூலம் அவசர காலத்தில், குறிப்பிட்ட பகுதிக்கு ரோந்து வாகன உதவி தேவைப்படும் நேரத்தில் கட்டுப்பாட்டறையில் இருந்து கண்காணித்து அருகில் இருக்கும் ரோந்து வாகனத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு, விரைந்து சென்று நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.

ரோந்து வாகனம்: அதாவது ரோந்து வாகனங்களில் இருந்தே, ஏஎன்பிஆர் கேமரா மூலமாக போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோரை கண்டறித்து உடனடி அபராதம் விதிக்கும் ரேடார் ரோந்து வாகனம்தான் இது.. ரோந்து வாகனங்களில் ஏ.என்.பி.ஆர் கேமராக்கள், 2d ரேடார் பொருத்தப்பட்டுள்ளது..

அதாவது, 360 டிகிரி கேமரா பொருத்தப்பட்டுள்ளதால் தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது, ட்ரிபில் ரைட், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் இயக்குவது மற்றும் அதிக வேகத்தில் வாகனத்தை ஓட்டுவது, உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்கள் அப்பட்டமாக படம்பிடிக்கிறது. இந்த கேமராக்கள் 2டி ரேடாருடன் இணைக்கப்பட்டுள்ளதால் விதிமீறல்கள் கேமரா மூலம் படம் பிடிக்கப்பட்டு கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்படுகிறது.

First introduce in tamil nadu and chennai police says 3948 cases registered in 12 days radar vehicles patro

விதிமுறைகள்: பிறகு அவற்றை சரிபார்த்த பிறகு விதிகளை மீறுபவருக்கு உடனடியாக அபராத ரசீது அனுப்பப்படும். இதுபோன்ற வாகனங்கள் தென் இந்தியாவில் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த கேமரா பொருத்தப்பட்டது கடந்த 31-ம் தேதி ஆகும்.. அன்றைய தேதி முதல் 12-ம் தேதி வரை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக மொத்தம் 3,948 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

தலைகவசம் இல்லாமல் வாகனத்தை ஓட்டியதாக 396 வழக்குகளும், வாகனத்தில் பின் செல்வோர் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 154 வழக்குகளும், செல்போன் பேசியபடி வாகனத்தை ஓட்டியதாக ஒரு வழக்கும், சீட் பெல்ட் அணியாமல் காரில் சென்றதாக 1003 வழக்குகளும், அதிவேக பயணம் செய்ததாக 2,394 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

அடுத்த பிளான்: அதி நவீன வாகனம் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதால், இன்னொரு வாகனம் வாங்கி அதனை வடசென்னையில் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+