சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விஜயகாந்த் வேற "சைஸா" நுழைந்துட்டாரே.. ஈர்க்கும் ஈரோடு.. அங்கே ஸ்பெஷாலிட்டியே இதான்.. பளபள கட்சிகள்

ஈரோடு கிழக்கு தொகுதியின் முதல் இடைத்தேர்தல் என்பதால் எதிர்பார்ப்புகள் கூடுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க போகிறது.. அதுவும் முதல்முறையாக சந்திக்க போவதுதான் இந்த தொகுதியின் ஸ்பெஷலாக அமைந்து வருகிறது. அந்தவகையில், இந்த தொகுதியின் சிறப்பம்சங்கள் என்னவென்று பார்ப்போம்.

திராவிட இயக்கத்தின் பெரியார், கணிதமேதை ராமானுஜம் ஆகியோர் பிறந்த பெருமைக்குரிய பகுதியாகும்.. ஈரோடுக்குள்ளேயே முடிந்துவிடக்கூடிய தொகுதி இது என்பதால், விவசாயம் பிரதானமாக இங்கு இல்லை.

ஆனால், அதற்கு மாறாக, ஜவுளித்தொழில் ஆக்கிரமித்துள்ளது.. துணிகளுக்கு சாயமிடுதல், பிளீச்சிங் செய்தல் போன்றவைகளுக்காக 500-க்கும் மேற்பட்ட சாய ஆலைகளும், சலவை ஆலைகளும் இங்கு சூழ்ந்துள்ளன.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. வேட்பாளர்கள் ரூ.40 லட்சம் வரை செலவழிக்கலாம்..தேர்தல் ஆணையம் சொன்ன தகவல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. வேட்பாளர்கள் ரூ.40 லட்சம் வரை செலவழிக்கலாம்..தேர்தல் ஆணையம் சொன்ன தகவல்

 பிசினஸ்

பிசினஸ்

இதனால் ஜவுளி வியாபாரம், கோடிக்கணக்கில் நடக்கும்.. தென்மாநிலங்கள் மட்டுமேயல்லாமல், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஜவுளி வியாபாரிகள் இங்கு செல்வது வழக்கம். சாதாரண நாட்களில் ரூ.2 முதல் ரூ.3 கோடி வரை வர்த்தகமும், பண்டிகை காலங்களில் ரூ.5 கோடி வரை வர்த்தகமும் நடைபெறுவது, இந்த தொகுதியின் மீதான கவனத்தை பரவலாக குவித்து வருகிறது. ஒருங்கிணைந்த ஈரோடு தொகுதியாக இருந்த நிலையில், தொகுதி சீரமைப்பின்போது, ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு என கடந்த 2008-ல் பிரிக்கப்பட்டது..

திருமகன்

திருமகன்

ஒருங்கிணைந்த ஈரோடாக இருந்தபோது, அதிமுக, திமுக இரு கட்சிகளுமே இங்கு சம அளவில்தான் தேர்தல்களில் வெற்றி பெற்றுவந்தன.. ஆனால், தொகுதி சீரமைப்புக்கு பிறகு, ஈரோடு கிழக்கு தொகுதியில் நடந்த 2 தேர்தல்களிலும் அதிமுக கூட்டணியே வெற்றி பெற்றது. கடந்த 2021 தேர்தலில் திமுக கூட்டணி அதாவது, ஈவிகேஎஸ் மகன் திருமகன் அபார வெற்றி பெற்றார்... திமுகவுக்கு அடுத்தபடியாக அதிமுக வலுவாக இருந்தாலும், இதற்கு அடுத்தபடியாக, நாம்தமிழர் கட்சி 3வது இடத்தையும், மநீம கூட்டணி 4 வது இடத்தையும் கடந்தமுறை பெற்றிருந்தனர்.. ஆனால், அமமுக மிக மிக குறைந்த வாக்குகளேயே அப்போது பெற்றிருந்தது.

 ஸ்பெஷல் ரூட்

ஸ்பெஷல் ரூட்

திருமகன் ஈ.வெ.ரா. மறைவால் இப்போது இந்த தொகுதிக்கு முதல்முறையாக இடைத்தேர்தல் நடப்பதால், தொகுதிக்குள் எதிர்பார்ப்புகள் எகிறி வருகின்றன.. இது தொகுதி மறு சீரமைப்புக்கு பிறகு நடைபெறும் 4-வது தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது, இடைத்தேர்தல் நடைபெறுவதால் இந்த தொகுதியை பிடிக்க திமுக - அதிமுக இரு தரப்புமே ஆர்வம் காட்டி வருகிறது.. இதற்கு நடுவில் பாஜக, தனி ரூட்டை பிடித்து, இந்த தொகுதியின் பரபரப்பை கூட்டி வருகிறது.

 செங்கோட்டையன்

செங்கோட்டையன்

திமுக கூட்டணியில் யாரை நிறுத்தினாலும் அவர்கள் வெற்றிக்காக பாடுபடுவோம் என்று அமைச்சர் முத்துசாமி அறிவித்துள்ளார்.. அதேபோல, கடந்த முறையே குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை நழுவவிட்ட அதிமுகவோ, இந்த முறை விட்டுவிடக்கூடாது என்பதில் முனைப்பு காட்டி கொண்டிருக்கிறது.. இது தொடர்பாக மூத்த தலைவர் செங்கோட்டையன் தலைமையில் ஆலோசனைகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியை கைப்பற்றுவது யார்? என்பதில் கடும் போட்டி நிலவுகிறது. இதற்கு நடுவில் அமமுக, மநீம, நாம் தமிழர் என ஆளுக்கு ஒருபக்கம் மும்முரமாகி வருகின்றனர்.

விஜயகாந்த்

விஜயகாந்த்

இந்த லிஸ்ட்டில் தேமுதிகவும் இணைந்துவிட்டது.. வரும் 23ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தப்பட இருப்பதாக தேமுதிக தலைமை அறிவித்துள்ளது. கோயம்பேட்டில் உள்ள தேமுதிக ஆபீசில் காலை 10 மணிக்கு மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாம்.. உட்கட்சி தேர்தல், இடைத்தேர்தல், செயற்குழு பொதுக்குழு மற்றும் கழக வளர்ச்சி போன்ற பல்வேறு முக்கிய விஷயங்கள் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருக்கிறது. ஆக, தமிழக கட்சிகள் அனைத்துமே கோதாவில் குதித்துவிட்டதால், ஈரோடு கிழக்கு மொத்த பேரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

English summary
First Time by election in the Erode East constitution and what are the specials
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X