தமிழ்நாட்டுக்கே மகிழ்ச்சி.. குறையும் எச்ஐவி தொற்று.. முதன்முறையாக பரிசோதனை கருவி.. தமிழக அரசு மாஸ்
சென்னை: எச்ஐவி தொற்றை கட்டுப்படுத்துவதில் தமிழகம் சிறப்பாக செயலாற்றி வருகிறது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
எழும்பூர் நலவாழ்வு மற்றும் குடும்ப நல பயிற்சி மையத்தில் உலக எய்ட்ஸ் தினம் 2023 நிகழ்ச்சி அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.. இந்த நிகழ்ச்சியில், சமூகங்களுடன் சேர்ந்து எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்றை குறைக்கும் செயலை முன்னெடுப்போம் என்ற கருப்பொருள் அடங்கிய குறுந்தகடு, விழிப்புணர்வு பதாகைகளை வெளியிடப்பட்டன.

தமிழ்நாடு: மேலும், தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக எச்.ஐ.வி மற்றும் பால்வினை தொற்று கண்டறியும் பரிசோதனைக் கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது, தமிழகத்தில் முதல் முறையாக எச்ஐவி மற்றும் பால்வினை தொற்று கண்டறியும் பரிசோதனைக் கருவியை அறிமுகப்படுத்தி பயன்பாட்டுக்கும் அமைச்சர் சுப்பிரமணி தொடங்கி வைத்தார். அத்துடன், சமூகம் சார்ந்த தொண்டு நிறுவனம் மற்றும் எச்.ஐ.வி உள்ளோர் கூட்டமைப்புகளின் சேவையினை பாராட்டி, பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்..
வைரஸ் காய்ச்சல்: இதையடுத்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசும்போது, தமிழ்நாட்டில் நவம்பர் இறுதியில் எடுக்கப்பட்ட வைரஸ் காய்ச்சல் தொடர்பாக 56 மாதிரிகள் புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு இருந்தது. அதில் 30 மாதிரிகளின் முடிவுகள் கடந்த வாரம் வந்திருந்தது.
இதில் எக்ஸ்பிபி (XBB) என்கின்ற வைரஸ் 24 நோயாளிகளுக்கு இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. அதில் ஜே.என் 1 (JN.1.1) என்கின்ற வைரஸ் 4 நோயாளிகளிடம் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.
கர்ப்பிணி பெண்கள்: இந்த 4 நோயாளிகளும் திருச்சி, மதுரை, கோவை, திருவள்ளுர் போன்ற மாவட்டங்களில் இருந்து சிகிச்சை பெற்று வருபவர்கள். சிங்கப்பூரில் கூட 3 நாட்களுக்கு மட்டுமே இந்த வைரஸ் பாசிட்டிவ் என்று வருகிறது, 4ம் நாள் நெகட்டிவ் என்று வருவதாக டாக்டர்கள் கூறுகிறார்கள். எனவே, பெரிய அளவில் அச்சப்பட வேண்டியதில்லை... முக்கியமாக, கர்ப்பிணி பெண்கள், வயது முதிர்ந்தவர்கள், இணை நோய் உள்ளவர்கள் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும்.
உலகளவில் 3.9 கோடி பேரும், இந்திய அளவில் 23.48 லட்சம் பேரும், தமிழகத்தில் 1.30 லட்சம் பேரும் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய அளவிலான பாதிப்பு 0.24 சதவீதமாகவும், தமிழகத்தில் 0.17 சதவீதமாகவும் எச்ஐவி பாதிப்பு உள்ளது.
செயல்பாடுகள்: எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், எச்ஐவி தொற்றை கட்டுப்படுத்தும் பணியில் திறன்பட செயலாற்றுகிறது. அதற்காக மத்திய அரசு2022-23-ம் ஆண்டுக்கான பெரியமாநிலங்கள் அளவில் சிறந்த செயல்பாட்டுக்கான முதலிடம் தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருது 1994-ல் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் தொடங்கியதிலிருந்து பெறப்பட்ட முதல் விருதாகும். மிக விரைவில் முதல்வரிடம் இந்த விருது சமர்ப்பிக்கப்படவுள்ளது. ரூ.90 லட்சம் செலவில் பால்வினைதொற்று கண்டறியும் பரிசோதனைக் கருவி தமிழகத்தில் முதல்முறையாக தொடங்கப்பட்டுள்ளது என்றார் அமைச்சர்.
உயிரிழப்புகள்: இதையடுத்து, சுகாதாரத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி சொல்லும்போது, "இந்திய அளவில், எய்ட்ஸ் கட்டுப்படுத்துவதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. கடந்த 2010-ம்ஆண்டை ஒப்பிடுகையில் 72.5 சதவீதம் பாதிப்பை கட்டுப்படுத்தி உள்ளோம். மேலும், 89 சதவீத உயிரிழப்பும் தடுக்கப்பட்டுள்ளது. வரும், 2030-ம் ஆண்டுக்குள் முழுமையைாக எச்ஐவி, எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்த தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது" என்றார்.












Click it and Unblock the Notifications