அப்பவும் இதேதான்! பாஜகவுக்கு 4- 14 சீட்: 2019-ல் தமிழ்நாடு எக்ஸிட் போல் முடிவுகள் நினைவிருக்கிறதா?
சென்னை: தமிழ்நாட்டில் பாஜக 14 இடங்களில் வெல்லும்; 34% வாக்குகளைப் பெறும் என்றெல்லாம் சில எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்துள்ளதை பாஜகவினரே ஆச்சரியத்துடன் விவாதித்து வருகின்றனர். 2019 லோக்சபா தேர்தலின் போதும் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு 4 முதல் 14 இடங்கள் வரை கிடைக்கும் என எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்திருந்தது நினைவில் கொள்ளத்தக்கது.
லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் நடைபெற உள்ளது. லோக்சபா தேர்தலின் இறுதி கட்ட வாக்குப் பதிவு நிறைவடைந்த உடனேயே தேர்தலுக்குப் பிந்தைய எக்ஸிட் போல் முடிவுகள் வெளியிடப்பட்டன. தமிழ்நாட்டில் பொதுவாக திமுக கூட்டணியே அதிக இடங்களைக் கைப்பற்றும் என எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்துள்ளன. ஆனால் ஒரு சில எக்ஸிட் போல் முடிவுகளில் பாஜகவுக்கு 6 முதல் 14 இடங்கள் கிடைக்கும் என்றெல்லாம் தெரிவிக்கப்பட்டிருந்தன.

2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போதும் இதேபோலவே தமிழ்நாட்டில் பாஜக கூட்டணிக்கு 4 முதல் 14 இடங்கள் வரை கிடைக்கும் என எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்திருந்தன
2019-ம் ஆண்டு தேர்தலின் போது தமிழ்நாடு குறித்து வெளியிடப்பட்ட எக்ஸிட் போல் முடிவுகள் என்ன சொன்ன? India Today வெளியிட்டிருந்த எக்ஸிட் போல் முடிவுகளில் பாஜக அணிக்கு 0 முதல் 4 இடங்கள் கிடைக்க வாய்ப்பு என தெரிவித்திருந்தன. Times Now எக்ஸிட் போல் முடிவுகளில் பாஜக கூட்டணிக்கு 9 இடங்கள் என கணிக்கப்பட்டிருந்தன. அதி உச்சமாக தந்தி டிவி எக்ஸிட் போல் முடிவுகளில் பாஜக அணிக்கு 14 இடங்கள் கிடைக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. People Political Predictions வெளியிட்ட எக்ஸிட் போல், பாஜகவுக்கு 4 இடங்கள் கிடைக்கும் என்றது. ஆனால் பாஜக-அதிமுக கூட்டணிக்கு ஒரே ஒரு இடம்தான் கிடைத்தது என்பதுதான் சரித்திரம்.
தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் இன்னும் ஒருபடி மேலே போய் பாஜக கூட்டணிக்கு 3 முதல் 21 இடங்கள் கிடைக்கும் என கணித்திருந்தன. ஏப்ரல் 2019-ல் Republic TV வெளியிட்ட கருத்து கணிப்பில்தான் பாஜக- அதிமுக கூட்டணி 21 இடங்களில் வெல்லும் என கணித்திருந்தது. தந்தி டிவியின் கருத்து கணிப்பானது 9 முதல் 17 இடங்கள் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
ஏன் பெட்ரோல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு? நஷ்டத்தை சொல்லுவீங்களா? மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர் -
குடிசைகள் இல்லாத நகரமாக மாறும் மும்பை.. 2030 தான் டார்கெட்! ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications