இந்தியாவை அதிரவைத்த மே 2, 2009.. இலங்கைக்கு ஆயுதங்கள்- கோவையில் பற்றி எரிந்த ராணுவ லாரிகள்!
சென்னை: நாட்டில் அரசியல் கோரிக்கைகளை முன்வைத்து பல்வேறு வகையான போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் போராட்டங்களில் தந்தை பெரியாரின் அரசியல் சாசன எரிப்பு போராட்டம், இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம், மண்டல் கமிஷன் எதிர்ப்பு போராட்டம், சிஏஏ எதிர்ப்பு போராட்டம் என பலவற்றை பட்டியலிடலாம்.. இப்படியான அதிர்வலைகளை ஏற்படுத்திய போராட்டம்தான் 2009-ம் ஆண்டு மே மாதம் 2-ந் தேதி கோவையில் ராணுவ லாரிகள் எரிக்கப்பட்ட சம்பவம்.

— கோவை இராமகிருட்டிணன் (@kuratpdk) May 2, 2023
2009-ம் ஆண்டு மே 2-ல் நடந்தது என்ன?
இலங்கையில் இறுதி யுத்தம் அதீத உச்சத்தின் இருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடைசி நாட்கள் அவை.. அப்போது தமிழ்நாட்டில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றன. அதில் ஒன்றுதான் கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், திமுக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள், கட்சிகள் நடத்திய போராட்டம்.
— கோவை இராமகிருட்டிணன் (@kuratpdk) May 2, 2023
கோவை அருகே மதுக்கரை என்ற இடத்தில் இந்திய ராணுவ முகாம் உள்ளது. இந்த முகாமைச் சேர்ந்தவர்கள் ஹைதராபாத்துக்குப் பயிற்சிக்குச் சென்றிருந்தனர். அனைவரும் கொச்சி வழியாக கோவைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். மொத்தம் 60 வாகனங்களில் ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்தனர்.
ஆனால் இந்த வாகனங்களில்தான் இலங்கையில் விடுதலைப் புலிகளை அழிக்க ஆயுதங்கள் கொண்டு செல்லப்படுகிறது ஒரு தகவல் காட்டுத் தீயாக பரவியது. இதையடுத்து பெரியார் திராவிடர் கழகம், திமுக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், இயக்கங்களை சேர்ந்தவர்கள் கோவை நீலாம்பூர் புறவழிச் சாலையில் ராணுவ லாரிகளை தடுத்து நிறுத்தினர். பெரியார் தி.க. பொதுச்செயலாளர் கோவை ராமகிருட்டிணன் தலைமையில் இந்த போராட்டம் நடந்தது. ராணுவ லாரிகளில் இருந்த ஆயுதங்கள் உள்ளிட்டவைகளை வெளியே வீசினர். ராணுவத்தினர் லாரிகளுக்கும் தீ வைக்கப்பட்டது. மொத்தம் 5 ராணுவ லாரிகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
— கோவை இராமகிருட்டிணன் (@kuratpdk) May 2, 2023
இதனையடுத்தே ராணுவ வீரர்கள் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி கலையச் செய்தனர். இந்த தாக்குதலில் மூத்த பத்திரிகையாளர் மறைந்த அவினாசிலிங்கம் மண்டை உடைந்து ரத்தம் சொட்ட சொட்ட நின்ற காட்சிகள் பெரும் பேசுபொருளானது. பின்னர் கோவை ராமகிருட்டிணன் உள்ளிட்டோர் மீது பல்வேறு வழக்குகள் பாய்ந்தன. ஈழத் தமிழர்கள் பிரச்சனையில் தமிழ்நாட்டில் ராணுவத்துக்கு எதிராக நடந்த இந்தப் போராட்டம் இந்தியாவை அதிரவைத்தது. இப்போராட்டத்தை நினைவுகூர்ந்து பெரியார் திராவிடர் கழகத்தினர் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் இன்று பதிவிட்டும் வருகின்றனர்.
-
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications