எதுக்கும் ரெஸ்பான்ஸ் இல்லை.. சென்னை ஏர்போர்ட்டில் கொந்தளித்த பயணிகள்.. எமிரேட்ஸ் அலுவலகம் முற்றுகை
சென்னை: துபாயில் பெய்த மழையின் காரணமாக சென்னையில் இருந்து துபாய் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், எந்த அறிவிப்பும் இன்று கடைசி நிமிடத்தில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், எதற்கும் ரெஸ்பான்ஸ் இல்லை என்றும் 5 மணி நேரமாக காத்திருக்கும் பயணிகள் எமிரேட்ஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
துபாயில் கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை பெய்து இருக்கிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கனமழை பெய்தது. விடிய விடிய பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. அதேபோல் மழைவெள்ளம் காரணமாக மெட்ரோ ரெயில் நிலையங்களில் தண்ணீர் புகுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

துபாய் விமான நிலையத்திலும் கனமழை காரணமாக தண்ணீர் புகுந்து ஓடுபாதையில் ஆறாக ஓடியது. இதன் காரணமாக அனைத்து விமான சேவைகளும் வேறு பகுதிக்கு திருப்பி விடப்பட்டது. மேலும் பெரும்பாலான விமானங்கள் பயணத்தை ரத்து செய்துள்ளன. பல்வேறு நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் மோசமான காலநிலையால் தாமதமாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னையில் இருந்து துபாய் செல்லும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடைசி நேரத்தில் தான் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பயணிகள் கூறுகின்றனர். இதனால் 350க்கு மேற்பட்ட பயணிகள் விமான நிலையத்தில் சிரமப்படுவதாகவும், அடுத்த விமானம் எப்போது புறப்படும் என்று கேட்டால் அதற்கு எந்த வித ரெஸ்பான்சும் கொடுக்கவில்லை என்று சென்னை விமான நிலையத்தின் எமிரேட்ஸ் அலுவலகத்தை பயணிகள் முற்றுகையிட்டுள்ளனர்.
இது தொடர்பாக பயணி ஒருவர் கூறுகையில், "கிட்டத்தட்ட இங்கு 350 பயணிகள் நின்றுகொண்டு இருக்கிறோம். 4 முதல் 5 மணி நேரமாக இப்படியே நின்றுகொண்டு தான் இருக்கிறோம். அவர்களிடம் இருந்து எந்த ரெஸ்பான்சும் இல்ல. குழந்தைகள், பெண்கள் இருக்கிறாங்க.. அக்காமடேஷன் கூட கொடுக்கவில்லை. தண்ணீர் கூட கொடுக்கவில்லை. சாப்பாடும் கொடுக்கல.
ஒருசிலர் வெகுதூரத்தில் இருந்து வந்திருக்காங்க.. இதனால் அக்காமடேஷன் கேட்டோம். அதற்கு நாங்கள் எதுவும் செய்ய முடியாது என்றனர். அப்போது எப்போ விமானம் புறப்படும் என்று கேட்டாலும் அதற்கும் பதில் சொல்ல மாட்டுக்காங்க.. இல்லயென்றால் விமானத்திற்கு உண்டான பணத்தையாவது திருப்பி தரணும். இங்க வெயிட் பண்ணுங்க.. இல்லாவிட்டி வீட்டுக்கு போங்க என்று சொல்லிவிடுகிறார்கள்.
எங்களுக்கு விமானம் ரத்து செய்யப்பட்டு விட்டது. எப்போது ரத்து செய்யப்பட்டது?, எத்தனை மணிக்கு கேன்சல் ஆகியது? என்று அவர்கள் சொல்லவில்லை. ஒரே ஒரு வார்த்தை தான் சொல்றாங்க.. துபாயில் மழை பெய்கிறது. அதனால் இப்போது விமானம் ரத்து செய்துவிட்டோம் என்று சொல்கிறார்கள். கடைசி நிமிடத்தில், விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று சொல்கிறார்கள். ஒரு முறையான பதில் அவங்க சொல்லவில்லை.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு அவங்க தரவில்லை. அவங்க கிட்ட இத பத்தி கேட்டாலும் முறையாக பதில் சொல்ல மாட்டுக்கிறாங்க.. அவங்க கிட்ட பேசவே முடியவில்லை. பேசினாலும் ரூடா பேசுறாங்க.. அப்படியே பேசினாலும், பின்னாடி இருந்து ஒருவர் அவங்க கிட்ட பேசாதீங்க என்று அழைத்துவிட்டு போய்விடுகிறார்கள். இன்னும் ஒரு சிலர் எதுவும் செய்ய முடியாது உங்களால் என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோங்க என்று சொல்கிறார்கள்.
பயணி ஒருவர் கேட்கிறார், இங்கே குழந்தைகள், பெரியவர்கள் இருக்கிறாங்க அப்டின்னு கேட்கிறார். அதற்கும் இங்கேயே உக்காருங்க என்று மட்டும் தான் பதில் சொல்லுறாங்க. இவ்ளோ தான் அவங்க கிட்ட இருந்து வர பதில். எதை கேட்டாலும் கால் சென்டரில் கால் செய்து கேளுங்கள் என்கிறார்கள். அந்த நம்பர் வொர்க்கே ஆகவில்லை. எது என்றாலும் துபாயில் தான் கேட்க வேண்டும்.. துபாயில் தான் கேட்கவேண்டும் என்று சொல்கிறார்கள். ஒரு சின்ன ரெஸ்பான்ஸ் கூட எங்களுக்கு வரவில்லை.
எப்போது திரும்ப புறப்படும் என்றும், என்ன செடூல் என்று எதுவும் அவர்களிடம் இருந்து முறையாக வரவில்லை. இங்கேயே 4 - 5 மணி நேரமாக இப்படியே தான் நிற்கிறோம். ஒரு சிலர் நேற்றே வந்திருக்கிறார்கள். இப்போது வரை அவர்களுக்கு ரெஸ்பான்ஸே இல்லை. நேற்று 6 மணியில் இருந்து இங்கே தான் அவர்கள் இருக்கிறார்களாம். அவர்களுக்கு விமானம் ரத்து செய்யப்பட்டுவிட்டது என்று மட்டும் தான் பதில் சொல்லியிருக்கிறார்கள். அடுத்த பிளைட் எப்போ, எப்போது புறப்படும் என்றுகூட சொல்லவில்லை" என்று கூறினார்.
மற்றொரு பயணி கூறுகையில், பாதுகாப்புக்காக ரத்து செய்கிறார்கள் என்றால் கூட விமானங்களை மாற்றி விடலாம்ல.. தகவல் தொடர்பே இல்லாத அளவுக்கு இவ்ளோ பெரிய விமான நிறுவனம் எப்படி செயல்படுகிறது என்று தெரியவில்லை. இந்தியாவில் மட்டும் தான் இப்படி நடக்கிறது. வெளிநாடுகளில் இப்படி நடந்தால் இதற்கான இழப்பீடு கொடுத்திருப்பார்கள்" என்றார்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications