திமுக அரசின் அலட்சியத்தால் சென்னையில் வெள்ளம்... தவிக்கும் மக்கள் - சொல்வது இபிஎஸ்
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் எஸ்.பி.வேலுமணி கமிஷன் வாங்கியதாக வேண்டுமென்றே அவதூறு பரப்புவதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: மழைநீர் தேங்கியதற்கு திமுக அரசின் அலட்சியமே காரணம் என்று எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார். வடகிழக்கு பருவமழைக்கு முன்னே தூர்வாரி இருக்க வேண்டும், ஆனால் திமுக அரசு அதில் கவனம் செலுத்தவில்லை என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டு நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர்.
எடப்பாடி பழனிச்சாமி, இரண்டாவது நாளாக இன்று யானைக்கவுனி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் எடப்பாடி பழனிச்சாமி. அதனை தொடர்ந்து மின்ட், எம்.ஜி.ஆர்.நகர், முல்லை நகர், மூலக்கடை மற்றும் வில்லிவாக்கம் பாபா நகர் பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ள இடங்களை பார்வையிட்ட பின் பொதுமக்களுக்கு போர்வை,வேட்டி சட்டை, பிரெட், உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.

வடியாத வெள்ளத்தால் தவிப்பு
செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, சென்னையில் கடந்த 3 நாட்களாக மழைநீர் வடியாமல் இருப்பதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசியப் பொருட்களான குடிநீர், உணவு, பால் போன்ற பொருட்கள் கிடைக்காததால் மக்கள் வேதனையடைந்துள்ளனர். தமிழக அரசு பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அரசியல் நோக்கம் இல்லை
சென்னையில் பல பகுதியில் வெள்ளம் வடியாத நிலை உள்ளது என்றும், கனமழையால் சென்னை மாநகரே வெள்ளகாடாகி உள்ளது. மக்கள் குறைகளை தான் தெரிவிப்பதாகவும், எதையும் இட்டுக்கட்டி சொல்லவில்லை என்று கூறிய எடப்பாடி பழனிச்சாமி அரசியல் நோக்கத்தோடு ஆய்வு நடத்தவில்லை என்றும் விளக்கம் அளித்தார்.

அரசு நடவடிக்கை தேவை
கடந்த மூன்று நாட்களாக நீர் வடியாத காரணத்தால் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர் என்று கூறிய அவர், அதிகாரிகள் நேரடியாக சென்று பார்வையிடவில்லை என்ற மக்கள் புகார் தெரிவிப்பதாகவும், பாதிக்கப்பட்ட பகுதியில் உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்றும் தெரிவித்தார்.

செய்த அதிமுக
சென்னைக்கு 10 ஆண்டுகளாக ஸ்டாலின் மேயராக இருந்தும் வடிகால் வசதி செய்து தரவில்லை. அதிமுக ஆட்சி காலத்தில்தான் சென்னைக்கு முறையான வடிகால் வசதி கொண்டுவரப்பட்டது. மக்களுக்கு தேவையான அடிப்படை வசதியை அதிமுக அரசு செய்து கொடுத்தது. அதிமுக ஆட்சியில் தான் பக்கீங்காம் கல்வாய் முடியும் எண்ணூர் பகுதியில் இருந்த அடைப்பை நவீன இயந்திரம் மூலம் அகற்றியதால் தான், தற்போது பெரும்பாலான பகுதிகள் வெள்ள நீர் தேங்காமல் தவிர்க்கப்பட்டுள்ளது என்றார்.

திமுகவே காரணம்
தற்போது மழைநீர் தேங்கியதற்கு திமுக அரசின் அலட்சியமே காரணம். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் பல்வேறு இடங்களில் வடிகால்கள் அமைத்ததன் காரணத்தால் இன்று இந்த கனமழையிலும் பல்வேறு இடங்கள் நீர் தேங்காத சூழல் உள்ளது. வடகிழக்கு பருவமழைக்கு முன்பே தூர்வாரி இருக்க வேண்டும், ஆனால் திமுக அரசு அதில் கவனம் செலுத்தவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

அவதூறு பரப்புவதா?
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் எஸ்.பி.வேலுமணி கமிஷன் வாங்கியதாக வேண்டுமென்றே அவதூறு பரப்புகின்றனர் என்றும், முன்னாள் அமைச்சர் கமிஷன் வாங்கியதாக சொல்கிறார்களே அதை இவர்கள் பார்த்தார்களா என்றும் கேள்வி எழுப்பினார்.

அரசியல் நோக்கமில்லை
இந்நிலையில் மக்கள் குறைகளை தான் தெரிவிக்கிறோம் என்றும், எதையும் இட்டுக்கட்டி சொல்லவில்லை என்று கூறிய எடப்பாடி பழனிச்சாமி அரசியல் நோக்கத்தோடு ஆய்வு நடத்தவில்லை என்றும் விளக்கம் அளித்தார். தற்போது மூத்த ஐ ஏ ஏஸ் நியமனம் காலம் தாழ்ந்த நடிவடிக்கை என்று விமர்சித்த அவர், முன்னெச்சரிக்கையாக இருந்திருந்தால் இன்றைய பாதிப்பு தவிர்க்கப்பட்டிருக்கும் என்றும் கூறினார்.

செய்யப்பட்ட பணிகள்
அதேப்போல் முல்லை பெரியாறு பிரச்சனை வாழ்வாதார, ஜீவாதார பிரச்சனை என்றும், முல்லை பெரியாறு விவகாரத்தில் நமது உரிமையை விட்டு கொடுத்த திமுக அரசை கண்டித்து தான் இன்று அதிமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது என்றும் தெரிவித்தார். உயர்நீதிமன்றம் அதிருப்தி குறித்த கேள்விக்கு, 2015ஆம் ஆண்டிற்கு பிறகு அதிமுக ஆட்சியில் பல திட்டங்கள் செய்யப்பட்டு இருக்கிறது அதனை தற்போதைய அரசு நீதிமன்றத்தில் எடுத்துச் சொல்ல வேண்டும் எனவும் கூறினார்.












Click it and Unblock the Notifications