முதன்முறையாக.. தமிழகத்தில் நில வழிகாட்டி மதிப்பில் அதிரடி.. பத்திர பதிவுத்துறையின் 14 கட்டுப்பாடுகள்
சென்னை: தமிழகத்தில் முதல் முறையாக வழிகாட்டி மதிப்புகள் மாற்றத்துக்கு, புதிய சாப்ட்வேரை பதிவுத்துறை அறிமுகம் செய்துள்ளது. இதை பயன்படுத்துவது தொடர்பாக, 14 கட்டுப்பாடுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகள் கடந்த 2012ம் ஆண்டு சீரமைக்கப்பட்ட நிலையில், அதில் சில குளறுபடிகள் ஏற்பட்டன. எனவே, 2017ல், வழிகாட்டி மதிப்புகளில், ஒரேயடியாக 33 சதவீதம் குறைக்கப்பட்டது.

பதிவுத்துறை: 2012ல் வழிகாட்டி மதிப்பு கொண்டுவரப்பட்டு, அது ரத்தாகிவிட்ட நிலையில், மறுபடியும் 2017ல் அறிவிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்புகளையே, கடைப்பிடிக்க வேண்டிய கட்டாய சூழல் பதிவுத்துறைக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும், நில வழிகாட்டி மதிப்புகளை தற்காலிக ஏற்பாடாக மாற்றி அமைக்கும் நிலைமையும் வந்துள்ளது.. இதற்காக 70 சதவீதத்துக்கு மேல் புதிய வழிகாட்டி மதிப்புகள் விரைவில் அமல்படுத்தப்பட போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மதிப்பீடுகள்: 70 சதவீதம் வழிகாட்டு மதிப்புகளை உயர்த்தினால், கிராம மக்கள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.. குறிப்பாக, கிராமங்களில் விவசாயம் செய்வோர், சிறிய அளவிலான நிலம் வைத்திருப்பவர்கள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள். நன்கொடையோ, உயில் சாசனமோ செய்ய பெரிய சிரமம் ஏற்பட்டுவிடும்..
அதுமட்டுமல்லாமல் பாகப்பிரிவினை செய்ய வேண்டும் என்றால், இப்போதைய வழிகாட்டி மதிப்பீட்டுப்படி அதிக செலவாகிறது.. எனவே, வழிகாட்டி மதிப்பை உயர்த்துவதை மறுபரிசீலனை செய்து, பழைய நிலையே பதிவுத்துறை தொடர செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகளை விடுத்து வருகிறார்கள்.
கட்டுப்பாடுகள்: இப்படிப்பட்ட சூழலில், நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகளை மாற்றி அமைக்கும் பணிகளுக்கு, புதிய சாப்ட்வேர் பயன்படுத்த, 14 கட்டுப்பாடுகளை பதிவுத்துறை விதித்திருக்கிறது. தமிழகத்தில் முதல் முறையாக வழிகாட்டி மதிப்புகள் மாற்றத்துக்கு, புதிய சாப்ட்வேரை பதிவுத்துறை அறிமுகம் செய்திருக்கிறது.. இதை பயன்படுத்துவது தொடர்பாக, இந்த 14 கட்டுப்பாடுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதன் விவரங்கள் இதுதான்:
- பயன்பாட்டில் உள்ள வகைபாடுகளுக்கு புதிய மதிப்புகளை குறிப்பிட வேண்டும். அனைத்து தெருக்கள், சர்வே எண்களுக்கான மதிப்பையும், வகைபாடுகளுக்குள் அடங்கும் வகையில் மாற்ற வேண்டும்
- அனைத்து சர்வே எண்கள், தெருக்களுக்கு புதிய மதிப்பை நிர்ணயிக்க வேண்டும். புதிய வகைப்பாட்டுக்கு மாற்றப்பட்ட தெரு, சர்வே எண்களை புதிய அலகாக கருத வேண்டும்.
- பழைய மற்றும் புதிய வழிகாட்டி மதிப்பு விபரங்களை, சார் - பதிவாளர்கள் அச்சு பிரதியாக எடுத்து வைக்க வேண்டும்
- சார் - பதிவாளர் நிலையில் இந்த பணிகள் முடிந்தவுடன், மாவட்ட பதிவாளர் நடவடிக்கை ஆரம்பமாகும்.
- தெரு மற்றும் சர்வே எண்களுக்கான மதிப்புகளில், மாவட்ட பதிவாளர் மாற்றம் செய்யலாம்; அதன்பின், மதிப்பு விபரத்தை இணையதளத்தில் வரைவாக சேர்க்கலாம்.
- மாவட்ட துணைக்குழு ஒப்புதலுக்கு பின், மாவட்ட பதிவாளர் இந்த மதிப்புகளை இணையதளத்தில் பதிவேற்றலாம்
- மதிப்பு நிர்ணயிக்கப்படாத சர்வே எண்கள், தெருக்களுக்கு புதிய மதிப்புகளை நிர்ணயிக்க வேண்டும். தற்போது நிர்ணயிக்கப்படும் மதிப்புகள் இறுதியானதாக கருதப்படும். இதனால், இந்த மதிப்புகள் உயர்ந்தும், சில இடங்களில் குறைந்தும் இருக்கலாம். புதிய தெருக்கள், சர்வே எண்கள் இதில் சேர்க்கப்படலாம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது, பொதுமக்களுக்கு மிகுந்த பயன்களை தரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications