பம்மிட்டாரு விஜய்னு சொல்றது யாரு? கரூர் போக செக்யூரிட்டி கேட்பது யாருக்காக தெரியுமா? நறுக் பிரபலம்
சென்னை: கரூர் சம்பவத்தில், தவெக தலைவர் விஜய் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்திக்க அனுமதி கோரி, சென்னை டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.. அதில், பயணத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், கூட்ட நெரிசலை தவிர்க்க நான்கு நிபந்தனைகளுடன் 5 முக்கிய கோரிக்கைகளும் வைக்கப்பட்டன. இந்நிலையில் கரூர் செல்ல போலீஸ் பாதுகாப்பை விஜய் கேட்பது ஏன்? யாருக்காக? என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி பேட்டி ஒன்றில் விவரித்துள்ளார்.
Citi Fox Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி, "சமூக ஊடகங்களில் விஜய் பற்றி வரும் விமர்சனங்கள் எல்லாமே, மக்களின் விமர்சனங்கள் அல்ல. கரூர் விவகாரத்தில் விஜய்தான் குற்றவாளியா? அவரது அமைதி சரியா தவறா? என்பதை பொதுமக்களிடம் கேட்டாலே, அவர்களது பதில் என்னவாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடியும்..

பின்னணியில் திமுகசோஷியல் மீடியாவில், விஜய்க்கு எதிராக மிகப்பெரிய பிரச்சாரம் செய்யப்படுவதன் பின்னணி, திமுக மிகப்பெரிய அளவில் இணைய கூலிப்படையை பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.. அவர்கள்தான், பொதுமக்கள் போர்வையில் இதுபோன்ற கருத்துக்களை விஜய்க்கு எதிராக பரப்பி கொண்டிருக்கிறார்கள். எனவே அவையெல்லாம் பொதுமக்களின் கருத்து கிடையாது.
கூட்டமே இல்லையே
அதேபோல, எடப்பாடி பழனிசாமி, பிரேமலதா, திருமாவளவன் எல்லாரும் சென்று வரும்நிலையில், விஜய் மட்டும் ஏன் கரூர் செல்ல அனுமதி கேட்பது அபத்தமாக உள்ளதாக சொல்கிறார்கள்..
மேற்கண்டவர்கள் செல்லும்போது இந்த அளவுக்கு கூட்டம் வராது.. அப்படியே வந்தாலும் அவர்களுக்கான கூட்டத்தை பணம் தந்துதான் திரட்டுகிறார்கள்.. எடப்பாடி பழனிசாமி இதுவரை 200 தொகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார்.. ஒவ்வொரு இடத்திலும் தலைக்கு 500, 1000 தந்துதான் கூட்டத்தை திரட்டி வருகிறார்கள்..
பிரேமலதா விஜயகாந்த் நிர்வாகிகள் மத்தியில் பேசும்போது, அங்கே ஆளே இல்லை.. இதுக்கே விரக்தி அடைந்த பிரேமலதா, அடுத்த முறையாவது கூட்டத்தை திரட்டும்படி பேசியிருக்கிறார்.. எனவே, இவர்கள் யாருமே விஜய் அளவுக்கு மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர்கள் இல்லை.. இவர்கள் போனாலும், போகாவிட்டாலும் பிரச்சனை இல்லை..
அசம்பாவிதம் யார் பொறுப்பு
ஆனால், விஜய் எங்கு சென்றாலும், அந்த ஊரில் கிட்டத்தட்ட 25 கி.மீ. சுற்றளவில் உள்ள மக்களுக்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் அளவுக்கு நெருக்கடி வருகிறது.. இப்போது கரூர் சம்பவத்துக்கு பிறகு மீண்டும் விஜய் எங்கு சென்றாலும், எந்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்யாமல், மக்கள் திரண்டு மீண்டுமொரு அசம்பாவிதம் நடந்தால் அதற்கு யார் பொறுப்பு?
எனவேதான், அதனை முறைப்படி அணுக வேண்டும் விஜய் நினைக்கிறார்.. எனவே காவல்துறையிடம் அனுமதி கேட்டு வருகிறார்.. உடனே விஜய் பம்மிட்டாரு, பதுங்கிட்டாரு என்கிறார்கள்.கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கும், அஜித்குமார் மரணத்தின்போதும் யாரிடமும் விஜய் அனுமதி கேட்கவில்லையே என்கிறார்கள்.. கள்ளக்குறிச்சிக்கு செல்கிறார் என்ற விஷயமே ஊடகங்களுக்கு தாமதமாகத்தான் தெரிந்தது..
பாதுகாப்பு யாருக்கு?
முன்கூட்டியே எந்த அறிவிப்பும் இல்லாமல் திடீர்னு சென்று வந்ததால், எந்த பாதிப்பும் அங்கு ஏற்படவில்லை. இதில் கரூர் சம்பவம் அப்படியில்லை.. திட்டமிட்ட சுற்றுப்பயணமாகும்.. ஆனால், தற்போது விஜய் போலீஸ் பாதுகாப்பு கேட்பதே தனக்கு கிடையாது..ஏனெனில் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு உள்ளது.. இதை தவிர தனியார் பாதுகாப்பு அதாவது ஜிம் பாய்ஸ் உடனிருக்கிறார்கள்.. இவர்களுக்கும் மேலாக தொண்டர்களே அவரை சுற்றி இருப்பார்கள்.. இதனால் விஜய்க்கு ஒரு பாதிப்புமில்லை..
ஆனால் விஜய் சென்றால், அவரை பார்க்க கூடும் மக்களுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்பதற்காகத்தான் போலீஸ் பாதுகாப்பு கேட்கிறார்.
அதேபோல அன்று கரூரில் விஜய் மீது செருப்பு வீசப்பட்ட நிகழ்வு நடந்தது. இப்போது மீண்டும் அங்கு சென்றால், அதேபோன்ற அசம்பாவிதம் நடப்பதற்கு வாய்ப்புண்டு.. இதையெல்லாம் தவிர்க்கவே பாதுகாப்பு கேட்கிறார் என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications