அதிமுகவுக்கு இவ்வளவு சொத்தா? பேங்க்ல ‘டெபாசிட்’ மட்டும் இத்தனை கோடியா? விஜயபாஸ்கர் காட்டிய கணக்கு..!
சென்னை : அதிமுக பொதுக்குழுவில் நேற்று முன்னாள் அமைச்சரும், புதுக்கோட்டை மாவட்ட செயலாளருமான சி.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த கணக்கு வழக்கின் படி, "வைப்புத் தொகை கணக்கில் 244 கோடியே 80 லட்சம் ரூபாய் இருப்பதாகவும், நடப்பு கணக்கில் 2 கோடியே 77 லட்சம் ரூபாய் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சென்னை வானகரத்தில் நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், செயற்குழு ஒப்புதல் அளித்த 16 தீர்மானங்களும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது.
மேலும், இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்த நிலையில், எடப்பாடி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து வரவு செலவு கணக்கை முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தாக்கல் செய்தார்.

வரவு செலவு கணக்கு
வழக்கமாக பொருளாளர் மட்டுமே வரவு செலவு கணக்கை தாக்கல் செய்வார். ஆனால், பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழுவுக்கு வராத நிலையில் அமைப்புச் செயலாளரான விஜயபாஸ்கர் அதனை தாக்கல் செய்தார். அதில்," தற்போதைய நிலவரப்படி அதிமுக சார்பில் நிலையான வைப்புத் தொகை (பிக்ஸிட் டெபாசிட்) கணக்கில் 244 கோடியே 80 லட்சம் ரூபாய் இருப்பதாகவும், நடப்பு கணக்கில் அதாவது கரண்ட் அக்கவுண்டில் 2 கோடியே 77 லட்சம் ரூபாய் இருப்பதாக கணக்கு வழக்கு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சி.விஜயபாஸ்கர் தாக்கல்
இதுமட்டுமல்லாமல், 09.01.2021 முதல் 22.06.2022 வரை வரப்பெற்றுள்ள அதிமுகவுக்கு பல்வேறு வகைகளில் கிடைத்த வரவானது 53 கோடியே 4 லட்சம் ரூபாய் எனவும், மொத்த செலவுகள் 62 கோடி ரூபாய் எனவும் முன்னாள் அமைச்சர் தனது வரவு செலவு அறிக்கையில் சி.விஜயபாஸ்கர் கூறினார்.

வருவாய் எவ்வளவு?
அதிமுகவைப் பொறுத்தவரை நன்கொடைகள், விருப்ப மனு பெறுதல் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் வருவாய் கிடைக்கிறது. அது மட்டும் அல்லாமல் அதிமுக அலுவலகம் மட்டுமே தற்போதைய நிலவரப்படி பல கோடி ரூபாய் மதிப்புடையது. இது மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட தலைமை அலுவலகங்கள் மற்றும் அதில் உள்ள கடைகளில் இருந்து கிடைக்கும் வாடகை உள்ளிட்ட வருவாய், சொத்து மதிப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

மாநில கட்சிகளில் 3ஆம் இடம்
இந்நிலையில் தான் அதிமுகவுக்கு இத்தனை கோடி ரூபாய் வைப்புத் தொகை இருப்பது சி.விஜயபாஸ்கர் காட்டிய பொதுக்குழு கணக்கில் தெரியவந்துள்ளது. 2019 - 2020 ஆம் ஆண்டுக்கான நிதி ஆண்டில் மாநில கட்சிகளில் அதிமுக 267 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் மற்றும் வைப்பு நிதியுடன் 3வது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு










Click it and Unblock the Notifications