சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எடப்பாடி தான் கல்லாபெட்டி சிங்காரம்.. ஸ்டாலினை சந்தித்த ராஜ கண்ணப்பன் பொளேர் பேட்டி

Google Oneindia Tamil News

Recommended Video

    ஸ்டாலினை சந்தித்து திமுகவுக்கு ஆதரவு அளித்த ராஜகண்ணப்பன்!

    சென்னை:தமிழகத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோர் பாஜகவிடம் அதிமுகவை அடகு வைத்து விட்டனர் என்று முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் கூறி உள்ளார்.

    அதிமுகவில் இருந்து விலகிய அவர் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது: ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி இந்தியாவின் நலனுக்காகவும், தமிழகத்தின் தன்மானத்துக்காகவும் அமைக்கப்பட்ட கூட்டணி. அதிமுகவில் யார் இருக்கிறார்கள்?

    Former minister raja kannappan met mk stalin in Chennai and he supports dmk alliance

    கல்லாபெட்டி சிங்காரம் யார் என்று கேட்டால் எடப்பாடி பழனிசாமி. இபிஎஸ், ஓபிஎஸ் இடையே நிறைய பிரச்னைகள் உண்டு அதிமுகவில் உட்கட்சி பூசல் நிறைய இருக்கு.

    ஓபிஎஸ் தமது மகனுக்காக 10 சீட்டை தாரை வார்த்தால் என்ன நியாயம். நோட்டாவுக்கு கீழே உள்ள பாஜகவுக்கு தென் மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் சீட் வழங்கப்பட்டுள்ளது.

    பாஜகவின் கொத்தடிமையாக இருக்கிறது அதிமுக. பாஜகவின் பேச்சை கேட்டு கட்சியை அடகு வைத்துவிட்டனர். அது பெரும் தவறு.

    Former minister raja kannappan met mk stalin in Chennai and he supports dmk alliance

    திராவிட பூமியாக இருக்கக் கூடிய தமிழகத்தில் எதுக்கு பாஜகவுக்கு இவ்வளவு சீட். உண்மையான தலித்துக்கு அதிமுகவில் சீட் இல்லை.

    வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு.. பிரமிக்க வைக்கும் பாமக வேட்பாளர் சாம்பால்.. பின்னணி பெருஸ்ஸா இருக்கே!வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு.. பிரமிக்க வைக்கும் பாமக வேட்பாளர் சாம்பால்.. பின்னணி பெருஸ்ஸா இருக்கே!

    திமுக கூட்டணியை ஆதரித்து, நாளை முதல் பிரச்சாரம் போகப்போறேன். கட்சியில் எல்லாரையும் கேட்டுவிட்டு தான் ஆதரவு தெரிவித்துள்ளேன். தமிழகத்தில் 18 சட்டசபை தொகுதிகளில் திமுக வென்றால் அதிமுக ஆட்சியே இருக்காது.

    பாமகவினர் சீட்டுக்காக இங்கேயும் பேசினர். அங்கேயும் பேசினர். அவர்களுக்கு அதிமுகவில் சீட் கொடுத்திருக்கிறார்கள். பல பிரச்சனைகள் தமிழகத்தில் உள்ளது.

    பாசிச இயக்கம் பாஜகவை ஆதரிக்க முடியாது. கூட்டணியை முடிவு பண்ணியவர்கள்.. தொகுதிகளை எப்படி முடிவு பண்ணலாம்? என்று அவர் கூறினார்.

    English summary
    Former minister raja kannappan met mk stalin in Chennai and he supports dmk alliance.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X