திமுகவில் இருந்து பழ. கருப்பையா விலகல்- கார்ப்பரேட் நிறுவனமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: முன்னாள் எம்.எல்.ஏ. பழ. கருப்பையா திமுகவில் இருந்து விலகிவிட்டதாக அறிவித்துள்ளார்.
2016-ம் ஆண்டு சென்னை துறைமுகம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்தவர் பழ.. கருப்பையா. பின்னர் அதிமுகவில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து பழ. கருப்பையா திமுகவில் இணைந்தார். இருந்தபோதும் திமுகவில் அவருக்கு உரிய முக்கியத்துவம் தரப்படவில்லை என கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தாம் திமுகவை விட்டு விலகிவிட்டதாக பழ. கருப்பையா அறிவித்துள்ளார். இது தொடர்பாக பழ. கருப்பையா கூறுகையில், கார்ப்பரேட் நிறுவனமாக திமுக செயல்படுகிறது. இதனால் திமுக மீது சலிப்பு ஏற்பட்டுவிட்டது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கட்சியில் இருந்து விடைபெற்றேன் என்றார்.
பழ. கருப்பையா வெளியிட்டுள்ள அறிக்கை:













Click it and Unblock the Notifications