Kaliyammal: நாளை அதிமுகவில் இணைகிறார் காளியம்மாள்? நாதகவிலிருந்து விலகிய ஓராண்டில் நடந்தது என்ன?
சென்னை: நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள், எந்த கட்சியில் இணைவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் தற்போது அவர் அதிமுகவில் நாளை இணைகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய இந்த ஓராண்டு காலகட்டத்தில் தவெக, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் காளியம்மாள் பேச்சுவார்த்தை நடத்தியிருந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் இறுதியாக அதிமுகவில் நாளை இணைகிறார் என்கிறார்ரகள். ஏற்கனவே தவெகவில் இணைய போவதாக வந்த தகவலை காளியம்மாள் மறுத்திருந்த நிலையில் இந்த தகவலுக்கு அவர் எந்தமாதிரி ரியாக்ட் செய்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாம் தமிழர் கட்சியின் பெண் முகமாக பரீட்சயமானவர் காளியம்மாள். இவர் அந்த கட்சியில் இருந்த போது தமிழ் தேசியம், தமிழ் மண் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை விவாதித்திருந்தார்.
மத்திய மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். இந்த நிலையில் கட்சியில் தனது மனைவி கயல்விழிக்கு, சீமான் பொதுச் செயலாளர் பதவியை கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த காளியம்மாள் அந்த பதவியை தனக்கு தர வேண்டும் என கேட்டதாக சீமானே ஒரு கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக அதிருப்தியால் காளியம்மாள், கட்சி செயல்பாடுகளில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியே இருந்தார். சீமானும் அவருடைய தம்பிகளும் காளியம்மாளை கடுமையாக விமர்சித்திருந்தனர். இதையடுத்து கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அக்கட்சியில் இருந்து விலகினார்.
அக்கட்சியில் இருந்து விலகிய அவர் ஏதாவது ஒரு இயக்கத்தை தொடங்குவார், அல்லது ஒரு கட்சியில் இணைவார் என சொல்லப்பட்டது. இந்த நிலையில் அவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இறுதியில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்தது பேசுபொருளானது.
இதனால் அவர் பாஜகவில் இணைகிறார் என தகவல்கள் கிடைத்தன. ஆனால் அவர் மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவே தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு தவெகவில் ஆதவ் அர்ஜுனாவும் நிர்மல் குமாரும் இணைந்த போது காளியம்மாளும் பனையூர் அலுவலகத்திற்கு செல்கிறார் என சொல்லப்பட்டது.
ஆனால் காளியம்மாள் இந்த செய்திகளை மறுத்தார். இந்த நிலையில் கடந்த ஓராண்டாக எந்த கட்சியில் இணையலாம் என தவெக, திமுக, அதிமுக ஆகிய கட்சிகளிடம் காளியம்மாள் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அதில் அதிமுகவுக்கு செல்வது என முடிவெடுத்து நாளை இணைகிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாகை மாவட்டம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் காளியம்மாள். காளியம்மாளின் குடும்பம் கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் கடுமையாக பாதிக்கப்பட்டது. சுனாமியின் போது உயிரிழந்தவர்களை தேடி அலைந்ததையும் , உயிரிழந்தவர்களுக்கு இறுதிச் சடங்கு கூட நடத்த முடியாத சோகத்தையும் காளியம்மாள் பகிர்ந்து கொண்டார். கட்டுமரம் ஓட்டி காளியம்மாளின் அப்பா குடும்பத்தை நடத்தினார் என அவரே ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.
காளியம்மாள் நாம் தமிழர் கட்சியில் இணைந்து 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பூம்புகார் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அது போல் 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் வடசென்னையிலும் 2024 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியிலும் போட்டியிட்டார். அப்போது மைக் சின்னத்தில் போட்டியிட்ட அவர் 1.25 லட்சம் வாக்குகளை பெற்ற நாதக வேட்பாளர்களிலேயே அதிக வாக்குகளை பெற்ற வேட்பாளராக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications