காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் தமிழக தீயணைப்புத் துறை முன்னாள் டிஜிபி பி.கே.ரவி! குவியும் வாழ்த்து
சென்னை: தமிழக தீயணைப்புத் துறை முன்னாள் டிஜிபி பி.கே.ரவி காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார். அவர் டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டார்.
1989 ஆம் ஆண்டு தமிழக பேட்ச்சை சேர்ந்தவர் ஐபிஎஸ் அதிகாரி பி.கே. ரவி. இவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். மாநில சட்டம் ஒழுங்கு டிஜிபிக்கான ரேஸில் இவரும் இடம்பெற்றிருந்தார்.

மாநில டிஜிபிக்கான ரேஸில் முதலிடத்தில் சஞ்சய் அரோராவும் இரண்டாவது இடத்தில் பி.கே.ரவியும் இருந்தனர். இந்த நிலையில்தான் பி.கே.ரவிக்கு தமிழ்நாடு மின்சார வாரிய லஞ்ச ஒழிப்பு டிஜிபி பதவி ஒதுக்கப்பட்டது.
கடந்தாண்டு தீயணைப்புத் துறை டிஜிபியாக பணியாற்றி வந்த பி.கே.ரவி தமிழக அரசின் உத்தரவின் பேரில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இதற்கான காரணம் தெரியவில்லை . ஆனால் டிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருப்பது காவல் துறையினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் அவர் ஊர்க்காவல் படைத் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். இவரது பதவிக்காலம் முடிவடைய 3 மாதங்கள் உள்ள நிலையில் பி.கே. ரவி விருப்ப ஓய்வு பெற்றுவிட்டார். இவர் தற்போது காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக கடந்த சில தினங்களாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.
இந்த நிலையில் இன்றைய தினம் டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் பீகார் காங்கிரஸ் கட்சித் தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங்கின் முன்பு பி.கே.ரவி காங்கிரஸில் இணைந்தார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்துகளை தெரிவித்தனர். இவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பீகார் மாநிலத்தில் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பும் கிடைக்கும் என தெரிகிறது. ஏற்கெனவே தமிழ்நாடு கேடரை சேர்ந்த ஓய்வு பெற்ற டிஜிபி கருணாசாகர் பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் சேர்ந்து 2024 நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
பி.கே. ரவி 34 ஆண்டுகள் பணிகாலத்தில் இருந்த போது பல்வேறு முக்கிய வழக்குகளை திறம்பட விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்திருந்தார். தீயணைப்புத் துறை டிஜிபியாக இருந்த போது விபத்தில்லா தீபாவளி என்ற முன்னெடுப்பை எடுத்தார். தமிழகம் முழுவதும் தீவிபத்துகளை தடுக்க 6,673 தீயணைப்பு வீரர்களை நியமித்தார். மேலும் 1,610 விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் பொதுமக்கள் நலனுக்காக நடத்தியுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications