போலி எஸ்சி, எஸ்டி ஜாதி சான்றிதழ்களை தடுக்க முடிவு.. 8 வாரங்களில் விதிகள் வேண்டும்.. ஹைகோர்ட் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பழங்குடியினர், பட்டியலினத்தவர்கள் என பொய் சொல்லி, போலி ஜாதி சான்றிதழ்கள் பெறுவதை தடுக்கும் வகையிலான விதிகளை 8 வாரங்களில் வகுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Is PM Narendra Modi waiting for camera man? Netizens trolling by sharing a video in Modi mothers home

குருமன் சமூகத்தினருக்கு பழங்குடியினர் என ஜாதி சான்று வழங்குவது தொடர்பாக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் விதிகளை வகுக்கக் கோரி அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிடக் கோரி சி.சொக்கலிங்கம் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், கே.குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: பட்டியலினத்தவர் அல்லது பழங்குடியினர் ஜாதி சான்றுகள் வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஏற்கனவே விதிகளை வகுத்துள்ளது. அதன்படி, மாநில அளவில் ஜாதி சான்றிதழ்கள் சரிபார்ப்பு குழுக்கள் அமைக்கவும், போலி சான்றிதழ்கள் தொடர்பான புகார்கள் குறித்து விசாரிக்க கண்காணிப்பு பிரிவு ஏற்படுத்தவும் வேண்டும். பட்டியலினத்தவர், பழங்குடியினர் என பொய் சொல்லி சான்றிதழ் கோரி விண்ணப்பிப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு தொடரவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

கடந்த 2016-ம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றமும் இதுதொடர்பாக விதிகளை வகுத்துள்ளது. மானுடவியல் அறிக்கையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு சான்றிதழ்கள் வழங்கக்கூடாது. பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோருக்கு ஏற்கனவே சான்றிதழ்கள் வழங்கப்பட்டு இருந்தால், அதன் அடிப்படையில் விண்ணப்பிப்பவர்களுக்கு சான்றிதழ் வழங்காமல் மறுக்கவும் முடியாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

சாதிச் சான்றிதழ் கோரும் உண்மையான விண்ணப்பதாரர்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் சான்றிதழ் பெறும் வகையிலும், போலி சான்றிதழ்கள் பெறுவதை தடுக்கும் வகையிலும் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் ஆகியவற்றின் தீர்ப்புகள், அரசாணைகள் அடிப்படையில், அடுத்த 8 வாரங்களுக்குள் விதிகளை வகுத்து தமிழக அரசு வெளியிட வேண்டும் என நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்திருந்தனர்.

மேலும், போலி ஜாதி சான்றிதழ்களை பெறுவதை தடுக்க உரிய சட்டம் இயற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை தமிழக அரசு சட்டம் இயற்றவில்லை என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், சாதி சான்று வழங்கக்கூடிய அதிகாரிகளுக்கு நீதிமன்றங்களின் தீர்ப்புகள் குறித்து விழிப்புணர்வு வகுப்புகளை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மேலும், தகுதியில்லாதவர்களுக்கு ஜாதி சான்று வழங்குவதை தடுக்க, அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்பிக்கை தெரிவித்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+