மோடி எடுத்த பெரிய முடிவு! ரேஷன் அரிசி விநியோகம் பற்றி மத்திய அரசு சொன்ன குட் நியூஸ்! அப்படி போடு
சென்னை: ரேசன் கடைகளில் விலையில்லா செறிவூட்டப்பட்ட அரிசி தொடர்ந்து வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதை 2028 ஆம் ஆண்டு டிசம்பர் வரை நீட்டிக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
ரத்தச் சோகை மற்றும் நுண்ணூட்டச் சத்து குறைபாட்டை சரிசெய்ய இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்திற்காக 17 ஆயிரத்து 82 கோடி ரூபாய் ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) மற்றும் பிற நலத் திட்டங்கள் உள்ளிட்ட அரசின் அனைத்துத் திட்டங்களின் கீழும் தொடர்ந்து செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும். அதன்படி ஜூலை 2024 முதல் டிசம்பர் 2028 வரை செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
PMGKAY (உணவு மானியம்) இன் ஒரு பகுதியாக, மத்திய அரசாங்கத்தின் 100% நிதியுதவியுடன் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும்.
2019 மற்றும் 2021 க்கு இடையில் நடத்தப்பட்ட தேசிய குடும்ப சுகாதார ஆய்வின் (NFHS-5) படி, இரத்த சோகை இந்தியாவில் ஒரு பரவலான பிரச்சினையாக உள்ளது. இது குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்களை பல்வேறு வயது மற்றும் வருமான நிலைகளில் பாதிக்கிறது. இரும்புச்சத்து குறைபாடு தவிர, வைட்டமின் பி12 மற்றும் ஃபோலிக் அமிலம் போன்ற பிற வைட்டமின் மற்றும் தாதுக் குறைபாடுகளும் மக்களிடம் உள்ளது. இது மக்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் உற்பத்தித்திறனை பாதிக்கிறது.
இதை தடுக்கவே ரேசன் கடைகளில் விலையில்லா செறிவூட்டப்பட்ட அரிசி தொடர்ந்து வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதை 2028 ஆம் ஆண்டு டிசம்பர் வரை நீட்டிக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
மக்களிடம் நிலவும் இரத்த சோகை மற்றும் நுண்ணூட்டச் சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்கான பாதுகாப்பான மற்றும் பயனுள்ள நடவடிக்கையாக உலகளவில் செறிவூட்டப்பட்ட அரிசி பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் 65% மக்கள் அரிசியை பிரதான உணவாக உட்கொள்வதால், இந்திய சூழலில் நுண்ணூட்டச்சத்துக்களை வழங்குவதற்கு அரிசி ஒரு சிறந்த உணவாகும். நெல் செறிவூட்டலில் FSSAI பரிந்துரைத்த தரங்களின்படி நுண்ணூட்டச் சத்துக்கள் சேர்க்புட்ம்.
இரும்பு, ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி 12 ஆகியவை சேர்த்து செறிவூட்டப்பட்ட அரிசிமக்களுக்கு ரேஷன் மூலம் வழங்கப்படும். இந்த செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதை 2028 ஆம் ஆண்டு டிசம்பர் வரை நீட்டிக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
ரத்தச் சோகை மற்றும் நுண்ணூட்டச் சத்து குறைபாட்டை சரிசெய்ய இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்திற்காக 17 ஆயிரத்து 82 கோடி ரூபாய் ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த அரிசி இனி தொடர்ந்து ரேஷனில் வழங்கப்படும். இதை ரேஷனில் பெறுவதற்கு கூடுதலாக ஆவணங்கள் வழங்க தேவையில்லை. தற்போது ரேஷனில் வழங்கப்படும் அதே அட்டைகளை பயன்படுத்தி ரேஷனில் பொருட்களை வாங்குவது போலவே விலையில்லா செறிவூட்டப்பட்ட அரிசி வாங்கலாம். இந்த செறிவூட்டப்பட்ட அரிசி வாங்க கூடுதலாக கட்டணமோ, அனுமதியோ பெற வேண்டியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications