வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. 16-ம் தேதி வரை வறண்ட வானிலை.. மழையும் உண்டு.. எங்கு தெரியுமா?
தமிழகத்தில் 4 நாட்களுக்கு பரவலான மழை உள்ளதாக கூறப்படுகிறது
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம், வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு வங்க கடல் அதையொட்டிய ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரையை ஒட்டி உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று வடக்கு மேற்கு திசையில் நகர்ந்து ஒடிசாவை கடக்கக்கூடும் என்று வானிலை மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
இதன்காரணமாக, தமிழகத்திற்கு மழை இருக்கும் என்றும் சொல்லி இருந்தது. அதன்படி, அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மழை தமிழ்நாட்டுக்கு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வலுப்பெறும்
அந்த அறிவிப்பில், வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்... வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக் கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் வருகிற 16-ந் தேதிவரை பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும்.

மீனவர்கள்
அதேபோல, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய சில மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் மிதமான மழை பெய்யக்கூடும். வங்கக் கடல் மற்றும் மன்னார் வளைகுடா, அரபிக் கடல், கேரள, கர்நாடகா கடலோரம் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் 5 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம்.. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்" என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது

மன்னார் வளைகுடா
இந்த அறிவிப்பினையடுத்து, மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மழை எதிர்பார்க்கப்படுகிறது.. அரபிக்கடலில், காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தெற்கு வங்க கடல், மத்திய வங்க கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் நாளை வரை மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்..

எச்சரிக்கை
அதேபோல, 15-ந்தேதி வரை கேரளா, கர்நாடகா கடலோர பகுதிகளில் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை மையம் ஏற்கனவே எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையை சுத்து போட்ட மழை மேகங்கள்.. நள்ளிரவு முழுக்க 15 மாவட்டங்களில் கொட்டும் மழை -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா!












Click it and Unblock the Notifications