கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது
சென்னை: தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், வீடுகளில் ஏசி மற்றும் ஃபேன்களின் பயன்பாடு அதிகரித்து மின்சாரக் கட்டணம் தாறுமாறாக உயர்ந்து வருகிறது.. இந்த கவலையை போக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள "பிஎம் சூர்ய கர் முஃப்ட் பிஜிலி யோஜனா" (PM Surya Ghar Muft Bijli Yojana) என்ற திட்டம் தற்போது மக்கள் மத்தியில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.., இதை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
"பிஎம் சூர்ய கர் முஃப்ட் பிஜிலி யோஜனா" என்ற சூப்பர் இந்தத் திட்டத்தின் கீழ் உங்கள் வீட்டின் மொட்டை மாடியில் சோலார் பேனல்களை அமைப்பதன் மூலம், மாதம் தோறும் 300 யூனிட் வரை இலவச மின்சாரத்தைப் பெற முடியும்.. இதற்காக மத்திய அரசு ஒரு வீட்டிற்குத் தலா 78,000 ரூபாய் வரை மிகப்பெரிய மானியத் தொகையை நேரடியாக வழங்குகிறது.. இது சாதாரண நடுத்தரக் குடும்பங்களுக்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்..

பிஎம் சூர்ய கர் முஃப்ட் பிஜிலி யோஜனா சூப்பர் திட்டம்
இந்தத் திட்டத்தின் ஸ்பெஷாலிட்டியே, நீங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை தாண்டி மீதமுள்ள மின்சாரத்தை அரசுக்கே விற்பனை செய்து அதன் மூலம் வருமானம் ஈட்டவும் வழிவகை செய்யப்பட்டுள்ளதுதான்.
இதன் மூலம் உங்கள் வீட்டின் கரண்ட் பில் பூஜ்ஜியமாக மாறுவதுடன், கூடுதல் வருமானமும் கிடைக்க செம வாய்ப்புள்ளது.. 2 கிலோ வாட் (kW) வரையிலான சோலார் அமைப்பிற்கு சுமார் 60,000 ரூபாய் மானியமும், 3 கிலோ வாட் மற்றும் அதற்கு மேற்பட்ட அமைப்புகளுக்கு அதிகபட்சமாக 78,000 ரூபாயும் மானியமாக வழங்கப்படுகிறது.. இந்த மானியத் தொகையானது சோலார் பேனல்கள் அமைக்கப்பட்ட 30 நாட்களுக்குள் உங்கள் வங்கி கணக்கிற்கு நேரடியாக வந்து சேரும் என்பது குறிப்பிடத்தக்கது..
இலவச மின்சாரம்
இந்த "பிஎம் சூர்ய கர் முஃப்ட் பிஜிலி யோஜனா" திட்டத்திற்கு விண்ணப்பிப்பது மிகவும் எளிமையானது.. மத்திய அரசின் அதிகாரப்பூர்வமான 'பிஎம் சூர்ய கர்' இணையதளத்தில் சென்று உங்கள் மொபைல் எண் மற்றும் மின் நுகர்வோர் எண்ணைக் கொண்டு பதிவு செய்யலாம்.. பதிவு செய்த பிறகு, உங்களுக்கு அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட சோலார் நிறுவனங்கள் மூலம் பேனல்களைப் பொருத்திக் கொள்ளலாம்.
வேலைகள் முடிந்ததும் அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து சான்றிதழ் அளித்த பின், மானியத் தொகை விடுவிக்கப்படும்.. இதற்காகப் பல வங்கிகள் மிகக் குறைந்த வட்டியில் கடன்களையும் வழங்க முன்வந்துள்ளன.. இதன் மூலம் ஆரம்பக்கட்ட முதலீட்டுத் தொகை குறித்து மக்கள் கவலைப்படத் தேவையில்லை..
மானியம் - மத்திய அரசு
சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பு அளிப்பதுடன், மின்சார கட்டண சுமையைக் குறைக்கும் இந்தத் திட்டம், வரும் காலங்களில் இந்தியாவின் எரிசக்தி தேவையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே லட்சக்கணக்கான மக்கள் இந்த திட்டத்தில் இணைந்து பயன் பெற்று வரும் நிலையில், நீங்களும் இப்போதே விண்ணப்பித்தால் இந்த ஆண்டு கோடையிலேயே மின்சாரச் சேமிப்பைத் தொடங்கலாம்.. இந்தத் திட்டம் குறித்த விபரங்களை உங்கள் நண்பர்களுக்கும், அதிக மின்சாரக் கட்டணம் செலுத்தி அவதிப்படும் உறவினர்களுக்கும் உடனே பகிருங்கள்.. அவர்கள் தங்கள் வீட்டின் மின்சாரக் கட்டணத்தை மிச்சப்படுத்த இது ஒரு பெஸ்ட் சான்ஸாக அமையும்..!!!!
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications