திமுக ஆட்சியில் கருத்து சுதந்திரம்..நிருபர்கள் எழுப்பிய கேள்வி.. ஆவேசமடைந்த எல்.முருகன்..பரபர பேட்டி
சென்னை: தருமபுரி மாவட்டம், அரூரில் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் சில நாட்களுக்கு முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மேடையில் பேசிக் கொண்டிருந்தனர்.
நாம் தமிழர் கட்சியின் மாநில பேச்சாளர் ஹிம்லர் என்பவர் திமுக அரசை மிக மோசமாக விமர்சித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. மேலும் திமுகவினரையும் தமிழக முதல்வரையும் ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது.

நாம் தமிழர்-திமுகவினர் மோதல்
இதனால் ஆத்திரம் அடைந்த திமுகவினர் சிலர் திடீரென மேடையேறி பேச்சை நிறுத்தும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து திமுகவினருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே கடும் மோதல் மூண்டது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். அங்கு போடப்பட்டு இருந்த நாற்காளிகளும், மேஜைகளும் வீசப்பட்டு அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது.

எல்.முருகன்பேட்டி
இந்த நிலையில் மத்திய அமைச்சர் எல்.முருகன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் நாம் தமிழர் கட்சிக்கும், திமுகவினருக்கும் நடத்த மோதல் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்கள். இதற்கு பதில் கூறிய எல்.முருகன், '' கருத்து சுதந்திரத்தை அவமதிப்பது என்பது திமுகவினருக்கு வாடிக்கையான ஒன்று. திமுக இதை செய்யவில்லை என்றால்தான் நாம் ஆச்சரியப்பட வேண்டும்.

திமுகவின் ரத்தத்தில் கூறியது
கருத்து சுநத்திரத்தை அவமதிப்பது திமுகவின் ரத்தத்தில் கூறிய ஒன்று. ஒரு கருத்தை சொன்னால் உடனடியாக கைது செய்கிறார்கள். ஆனால் திமுகவினர் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்கள் சர்ச்சைச்குறிய கருத்து சொன்னால் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஆனால் மாற்று கட்சியினர் கருத்து சொன்னால் நிலைமை வேற மாதிரி உள்ளது. திமுக ஆட்சியில் கருத்து சுதந்திரம் பெரும் சவாலாக உள்ளது என்று எல்.முருகன் கூறினார்.

முரசொலி மூல பத்திரம்
முரசொலி மூல பத்திரத்தை நான் காட்ட சொன்னதற்காக என்மேல் எத்தனை வழக்குகள் போட்டாலும் நான் சந்திப்பதற்கு தயாராக உள்ளேன் என்று கூறிய எல்,முருகன் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். மற்ற மாநிலங்ககளை ஒப்பிடும்போது தமிழகத்துக்கு குறைவான தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்குகிறதா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் எல்.முருகன் மற்ற மாநிலங்களுக்கு கொடுப்பது போல, அதே அளவுக்குதான் தமிழகத்துக்கும் தடுப்பூசிகள் கொடுக்கப்படுகிறது என்று கூறினார்.
-
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? தனியரசு விலக முடிவு.. அதிருப்தியின் பின்னணி -
"ஆபாசமாக பேசி மிரட்டல் விடுக்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்".. விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்! -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
கோவையில் போட்டியிடும் செந்தில் பாலாஜி.. நிர்வாகிகளுக்குப் பறந்த மெசேஜ் -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications