சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடிக்கடி கை கழுவ சொல்வதால்.. சென்னை மக்களுக்கு போதிய தண்ணீர் விநியோகிக்க கோரி வழக்கு

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா பாதிப்பை தடுக்க அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளதால், சென்னை நகர மக்களுக்கு போதுமான அளவு தண்ணீரை வினியோகிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Recommended Video

    Corona Awareness| vadivelu version| Viral Video

    கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

    Frequent washing of hands due to coronavirus: A case of Chennai residents demanding adequate water

    இந்நிலையில் மக்கள், தங்கள் கைகளை கழுவுவதற்கு தேவையான தண்ணீரை வினியோகிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் சூரிய பிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

    சென்னை நகரில் வசிக்கும் ஒரு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு தினமும் 1,350 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது... ஆனால் சென்னை பெருநகர குடிநீர் வாரியம் 650 மில்லியன் லிட்டர் மட்டுமே சப்ளை செய்து வருகிறது... அதனால் கொரோனா பாதிப்பு நீங்கும் வரை தினமும் 3 மணி நேரம் தண்ணீர் வினியோகம் செய்ய குடிநீர் வாரியம் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

    மேலும், பள்ளி மாணவ- மாணவிகளுக்கு போதுமான தண்ணீர் வழங்கப்படுவதில்லை எனவும் கைகளை சுத்தப்படுத்த தேவையான ஹேண்ட் வாஷ் போன்ற திரவங்கள் வழங்கப்படவில்லை எனவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

    பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கு தேவையான தண்ணீரை விநியோகிக்க செய்வதுடன், கைகளை xzபயன்படுத்தும் திரவங்களையும் வழங்கவேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Frequent washing of hands over coronavirus: A case in madras high court, demanding adequate water supply to Chennai residents
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X